திருமணத்திற்கு பின்பு தான் இது நடந்தது…என் வாழ்க்கையின் மிகப் பெரிய கஷ்டம் : பிரபல தமிழ் நடிகை வேதனை!

1493

தமிழ் நடிகை வேதனை!

பிரபல நடிகையான சுலக்‌ஷனா தன் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களையும், தனி ஒருத்தியாக குடும்பத்தை எப்படி நடத்தி வருகிறேன் என்பதை பற்றியும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு உச்சத்தை தொட்டவர் நடிகை சுலக்‌ஷனா, தற்போது இவர் வெள்ளித்திரை மற்றும் நாடகங்களிலும் கலக்கி வரும் நிலையில், பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு தன் வாழ்க்கையை பற்றி பகிர்ந்துள்ளார்.

ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி தான் என்னுடைய சொந்த ஊர். எனக்கு நினைவு தெரிவதற்குள்ளையே சென்னைக்குக் குடும்பத்தோடு வந்துவிட்டோம்.

என் தாத்தா பத்திரிகையாளரா இருந்ததால், அவர் சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுப்பார். அப்போது என்னையும் அழைத்து செல்வார்.

அது போன்ற சமயத்தில், காவியத் தலைவி என்கிற படத்தில், ஒரு சின்னப்பொண்ணு சரியா நடிக்காததால், அங்க ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த என்னை இயக்குனர் பாலசந்தர் நடிக்கக் கேட்டார், இதன் மூலம் தான் நான் வெள்ளித்திரையில் கால்பதித்தேன்.

குறிப்பாக அந்தப் படத்தில், ஜெமினி கணேசன் – செளகார் ஜானகிக்கு மகளாக நடித்தேன். மூன்று வயதில் துவங்கி, தொடர்ந்து குழந்தை நட்சத்திரமா பல மொழிகளிலும் 100 படங்களுக்கு மேல் நடிச்சேன், தெலுங்கிலும் அதிகம் நடித்தேன்.

ஸ்ரீதேவி என்கிற நிஜப் பெயர்ல புகழ்பெற்ற நடிகை இருந்ததால, இயக்குநர் கே.விஸ்வநாத் தான் என் பெயரை சுலக்‌ஷனா என்று மாற்றினார்.அதன் பின் தொடர்ந்து சில படங்களில் நடித்தேன். நடிகை என்ற புகழுடன் இருந்த போது அதாவது என்னுடைய 18 வயதிலே எனக்கு திருமணம் ஆகிவிட்டது.

மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயாவின் மகன் கோபி கிருஷ்ணன் என் முன்னாள் கணவர். திடீர் திருமணம். திருமணத்துக்கு பிறகுதான் எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமாக வந்தது. இதனால் அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்தேன்.

கே.பாலசந்தர் சாரின் சிந்து பைரவி படத்துக்குப் பிறகுதான் நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தது.

கருத்து வேறுபாடு காரணமா, என் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் வாழ்க்கை கஷ்டமானது. அதுக்காக வருத்தப்பட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிந்து போனதா? என்ன என்று சவாலா இருந்தாலும், தனி ஒருத்தியாக வாழ்க்கையைத் தைரியமா எதிர்கொண்டு வாழ்ந்தேன்.

குழந்தைப் பருவத்தில், இருந்து நடிச்சிட்டு வந்த நான், என் தனிப்பட்ட அமைதி மற்றும் என் குழந்தைகளுக்கு முழுமையா நேரம் ஒதுக்க, சினிமா துறையிலிருந்து ஒன்பது ஆண்டுகள் விலகியிருந்தேன். வருத்தமும் விரோதமும் இல்லாம பிரிந்ததால் இப்போவரை நானும் என் முன்னாள் கணவரும் நண்பர்களாதான் இருக்கிறோம்.

சினிமா, சின்னத்திரையில நடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. என் இரண்டு பசங்களையும் நன்றாக படிக்க வைத்து, நல்ல நிலைக்கு ஆளாக்கினேன்.

காலம் உங்க குணத்தை மட்டும் மாத்தவேயில்லை என்று பலரும் சொல்வார்கள், வெகுளித்தனமான குணம் கொண்ட நான், எந்த விஷயத்தையும் ரொம்ப யோசிக்க மாட்டேன். அதனால எனக்கான வளர்ச்சியும் புகழும் குறைவாக இருக்கலாம். ஆனா, இப்படி இருக்கவே விரும்புறேன்.இது எனக்கு மன நிம்மதி கிடைக்கிறது என்று கூறியுள்ளார்.