நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணம்..
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களில் தனியான இடம் பிடித்தவர் நடிகை நயன்தாரா. மலையாள சினிமாவில் இருந்து இங்கு வந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் ரசிகர்களிடம் பெற்றுவிட்டார்.
தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர் தான் இங்கு அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின். அவரின் ரசிகர்கள் தற்போது அவரிடம் எதிர்பார்ப்பது அவரின் திருமணத்தை தான்.
நீண்ட நாட்களாக அவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருக்கிறார். இந்நிலையில் இவர்களின் திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறுவதாக தகவல் வெளியானது.
தற்போது அவர்களின் திருமணம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நடைபெறுவதாகவும், 5 நாட்கள் இந்த நிகழ்வை நடத்தவுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. வட இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.