பிரபல தமிழ் நடிகை ரேகா இ றந்துவிட்டாரா?
பிரபல நடிகை ரேகா இ றந்துவிட்டார் என செய்திகள் வெளியாகும் நிலையில் தான் நலமுடன் இருப்பதாகவும், தன்னை பற்றி வதந்தி பரப்புகிறவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழில் புன்னகை மன்னன், கடலோர கவிதைகள், எங்க ஊரு பாட்டுக்காரன், கோவில், காலம் மாறி போச்சு போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் ரேகா.
இவர் உ யிரிழந்துவிட்டதாகவும் இவர் உடலுக்கு பிரபல நடிகர்கள் ரஜினி, கமல் அஞ்சலி செலுத்துவது போலவும் ஒரு வீடியோ யூ டியூப்பில் பரவியது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரேகா தான் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார். அவர் பேசுகையில், எனக்கு பலரும் போன் செய்து இ றந்துவிட்டாயா என கேட்கிறார்கள்.
அவர்களிடம் சிரித்து கொண்டே ஆம் நான் செ த்துவிட்டேன், இப்போது பேய் தான் பேசுகிறேன் என்று கிண்டலாக குறிப்பிட்டேன்.
நான் பாட்டுக்கு அமைதியாக இருக்கிறேன். என்னை ஏன் தொ ந்தரவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
என்னை பற்றி ஏன் தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. என் உறவினர்கள் இதனால் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று தெரியுமா?
இதன் மூலம் சம்பாதிக்கும் பணம் எல்லாம் எதற்கு இவர்களை க டுமையாக தண்டிக்க வேண்டும் என காட்டமாக கூறியுள்ளார்.