கவின் பாதியில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதற்கு காரணமே இதுதானா? செம மாஸ்டர் பிளான்!!

808

பிக்பாஸ் வீட்டைவிட்டு பாதியில் வெளியேறிய கவின்

பிக்பாஸ் வீட்டில் மக்கள் எலிமினேட் செய்யாமல் தானாகவே வெளியே சென்றவர் கவின். இவர் நிகழ்ச்சி முடிய 10 நாட்களே உள்ள நிலையில் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.

அவர் வெளியேறியதில் இருந்து லாஸ்லியா மற்றும் சாண்டி கடும் சோகத்தில் உள்ளனர். இவர் ஏன் நிகழ்ச்சி முடிவதற்குள் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

அதாவது கவினுக்கு ஒரு நாளைக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்க 30 ஆயிரம் என்று இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த 95 நாட்களுக்கு 28,50000 ரூபாயை பெற்றுள்ளார்.

ஒருவேளை மீதமுள்ள இந்த 5 நாட்கள் இருந்திருந்தால் 1,50000 ரூபாயை மட்டுமே பெற்றிருப்பார். எனவே, தற்போது கிடைத்துள்ள 5 லட்சத்தை எதற்காக வீணாக்க வேண்டும் என்று கவின் முடிவு செய்து இப்படி அதிரடியாக வெளியே கிளம்பிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.