பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வருடம் அதிக சம்பளம் இவருக்கு தானாம் : எவ்வளவு தெரியுமா?

724

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக சம்பளம் இவருக்கு தானாம்..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள், ரசிகைகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

ஹிந்தியில் தற்போது 13 ம் சீசன் நாளை முதல் ஒளிபரப்பாகிறது. பிரபல நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். புரமோ வந்திருந்தாலும் இதுவரை யாரெல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது நடிகை ரஷாமி தேசாய் தன்னுடைய காதலர் அர்ஹான் கானுடன் இணைந்து கலந்துகொள்கிறாராம்.

அவருக்கு ரூ 1.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் இந்த நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் பெற்றவர் இவர் தான் என்றும் சொல்லப்படுகிறது.