பிரபல பட கதாசிரியர், எழுத்தாளர் ம ரணம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவக்குமார் நடிப்பில் வந்த புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் கதாசிரியராக பணியாற்றிவர் மகரிஷி. தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
எழுத்தாளராக இவர் 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரைகள் எழுதியுள்ளார். சினிமாவில் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, நடிகை லதா, சுமித்ரா நடித்த வட்டத்துக்குள் சதுரம், ஜெயலலிதா நடித்த நதியை தேடி வந்த கடல் படத்திலும் பணியாற்றியுள்ளார்.
என்ன தான் முடிவு என்ற படத்திற்காக சிறந்த கதாசிரியர் விருதும் பெற்றுள்ள அவருக்கு 87 வயதாகிறது. அவரின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.