ஒரு கோடி சம்பளம், நடிகைகள் தயக்கம்.. நடிகர் அப்புக்குட்டி வேதனை!!

1258

நடிகர் அப்புக்குட்டி வேதனை..

நடிகர் அப்புக்குட்டி அழகர்சாமியின் குதிரை, வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து காமெடியனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பெயர் பெற்றவர்.

அவர் தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் வாழ்க விவசாயி. இந்த படத்தின் விழாவில் பேசிய நடிகர் அப்புக்குட்டி தான் அடுத்த படத்தில் இருந்து ஒரு கோடி ருபாய் சம்பளம் வாங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் “என்னுடன் நடிக்க நடிகைகள் தயங்குகிறார்கள். நான் நடிகனில்லையா? என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா என்றும் அவர் நடிகைகள் பற்றி பேசியுள்ளார்.