முன்னணி இயக்குனர் மீது தேசதுரோக வழக்கு : அதிர்ச்சித் தகவல்!!

925

இயக்குனர் மீது தேசதுரோக வழக்கு

முன்னணி இயக்குனர் மணிரத்னம் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மதவாதம் மற்றும் அரசை விமர்சிப்பதால் ஒருவரை தேச விரோதி, urban நக்சல் என கூறுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த கடிதத்தை எதிர்த்து பிகரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநலவழக்கு பதிந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மணிரத்னம் உட்பட இந்த கடிதத்தை எழுதியவர்கள் அனைவர் மீதும் தேசதுரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.