ஒவ்வொருத்தரா என்னை விட்டு இறந்து போறாங்க.. பிரபல நகைச்சுவை நடிகர் மரணம் குறித்து வடிவேலு கண்ணீர்!!

1003

நடிகர்  வடிவேலு கண்ணீர்..

நடிகர் கிருஷ்ணமூர்த்தி ம ரணமடைந்த நிலையில் அவர் குறித்து பேசியுள்ளார் நடிகர் வடிவேலு.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று முன் தினம் பேய் மாமா படப்பிடிப்புக்காக குமுளி போயிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உ யிரிழந்தார்.

மறைந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் ச ண்டைப் பயிற்சியாளராக இருந்தவரின் மகள் மகேஸ்வரியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டவர். இவருக்கு பிரஷாந்த், கெளதம் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி ம ரணம் குறித்து பேய் மாமா படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில், குமுளியில் பேய் மாமா படப்பிடிப்பு நடப்பதால் எங்கள் படக்குழுவினர் ஹொட்டலில் தங்கியிருந்தோம், அங்கு கிருஷ்ணமூர்த்தி தனியறையில் தங்கியிருந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 3 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக க த்தினார்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே இ றந்துவிட்டார் என கூறினார். நடிகர் வடிவேலுவுடன் கிருஷ்ணமூர்த்தி தவசி, சாணக்கியா, எல்லாம் அவன் செயல், ஐயா போன்ற ஏராளமான திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

அவரின் ம ரணம் வடிவேலுவை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வடிவேலு கூறுகையில், கிருஷ்ணமூர்த்தி இ றந்த விடயமே எனக்கு தெரியாது, பின்னர் ஊடகம் மூலம் தான் தெரிந்தது.

அவர் நல்ல மனிதர், என் வீட்டுக்கு அவர் குடும்பத்தார் அடிக்கடி வருவார்கள். அந்தளவுக்கு குடும்ப நண்பர் கிருஷ்ணமூர்த்தி. இப்போது அவரோட குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என தெரியலியே,

இனிமேல் நான் நடிக்கப் போகும் படத்தில் எல்லாம் அவருக்கும் ஒரு கதாபாத்திரம் உருவாக்கி வைத்திருந்தேன், அது அவருக்கும் நல்லாவே தெரியுமே!

முதலில் ’என்னத்த’ கண்ணையா, அப்புறம் சண்முக சுந்தரத்தாம்மாள், செல்லதுரை, இடையில ‘அல்வா’ வாசு.

இப்போது கிருஷ்ணமூர்த்தி என வரிசையாக என் கூட்டணியில இருந்து ஒவ்வொருவரா இ றந்து போயிட்டே இருக்காங்க என வடிவேலு வேதனையுடன் கூறியுள்ளார்.