சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் பட நடிகை மோனல் கஜ்ஜார் தற்போதயை நிலை கண்டு உச் கொட்டும் ரசிகர்கள்!!

2004

நடிகை மோனல் கஜ்ஜார்

தமிழில் வெளிவந்த ‛சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன்’ படங்களில் நடித்தவர் நடிகை மோனல் கஜ்ஜார். குஜராத்தை சேர்ந்த இவர், தமிழில் வாய்ப்பில்லாததால் பிற மொழிகளில் நடித்து வந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின், தமிழுக்கு குத்தாட்ட நடிகையாக வந்திருக்கிறார். ஆதி நடிக்கும் கிளப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

பிருத்வி ஆதித்யா இயக்கும் இந்தப் படத்தில் ஆதி ஜோடியாக அகன்ஷாசிங், க்ரிஷா குரூப் நடிக்கிறார்கள். தடகள விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஒரு குத்தாட்ட காட்சி இடம்பெறுகிறது.

இதற்காக ஐதரபாத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட செட்போடப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் மோனல் கஜ்ஜாரும், ஆதியும் ஆடியுள்ளனர். ஹீரோயினாகஅறிமுகம் ஆன இவர் குத்தாட்ட நடிகை ரேஞ்சுக்கு இறங்கி வந்து விட்டாரே..! என உச் கொட்டி வருகிறார்கள் அம்மணியின் நலம் விரும்பிகள்.