77 வயதிலும் ஃபிட் ஆக இருக்கும் அமிதாப் பச்சன்.. அவரது உணவுப்பழக்க முறையின் ரகசியம் இதுதான்!!

811

ஃபிட் ஆக இருக்கும் அமிதாப் பச்சன்

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இன்று 77வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவரது உணவுப்பழக்க முறை குறித்து இங்கு காண்போம்.

அமிதாப் பச்சன் 77 வயதிலும் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படுகிறார். இதற்காக அவர் உணவுக்கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிக்கிறார்.

அவர் மேற்கொள்ளும் உணவுப்பழக்க முறை குறித்து இங்கு காண்போம்.

அமிதாப் பச்சன் ஒரு சைவ பிரியர். சில ஆண்டுகளுக்கு முன்பு மாமிசம் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்த அவர், வயதாவதால் சைவத்திற்கு மாறினார்.

அதன் பின்னர் பழங்கள், காய்கறிகள் மூலம் அவர் அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்டுகளை பெறுகிறார்.

தினமும் காலையில் தவறாமல் அமிதாப் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார். காலையில் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், அவர் மாலையில் மேற்கொள்வாராம். அத்துடன் தினமும் யோகா செய்வாராம்.

அமிதாப் பச்சன் நீர் மற்றும் எலுமிச்சை சாற்றை மட்டுமே பருகுவாராம். தண்ணீர் நீர்ச்சத்தை கொடுப்பதுடன், எலுமிச்சை செரிமானத்தையும் உடலில் செய்கின்றது.

அமிதாப் மட்டும் இன்றி அவரது குடும்பமே தினமும் ஒரு தேக்கரண்டி தேனை சாப்பிடுவார்களாம். இதனை அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

தேநீர்-காபி குடிக்கும் பழக்கத்தை அமிதாப் தற்போது கடைபிடிப்பதில்லை. ஆனால் முன்பு காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்த அமிதாப், வயதாவதை கருத்தில் கொண்டு அதையும் கைவிட்டார். காபியில் உள்ள காப்ஃபைன் என்ற பொருள், குறிப்பிட்ட வயதிற்கு பின் கேடு விளைவிக்கக்கூடியது. நினைவாற்றலை பாதிக்கும் என்பதால், அமிதாப் பச்சன் அதனையும் கைவிட்டாராம்.

அரிசி சாதம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அமிதாப் சாப்பிடமாட்டாராம். ஆரம்ப காலத்தில் கீர் மற்றும் ஜிலேபியை விரும்பி சாப்பிட்டு வந்த இவர், உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைத்து சர்க்கரை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டாராம்.

குளிர் பானங்கள், சோடா அல்லது காற்றூட்டப்பட்ட பானங்களை இவர் எப்போதும் குடிக்கமாட்டாராம். கார்போனேட்டட் பானங்களில் அதிகளவு சர்க்கரை மற்றும் கலோரிகள் இருப்பதால், ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று ஒருமுறை பேட்டியில் கூறியுள்ளார்.

முன்பு பீர் மட்டும் பருகி வந்த அமிதாப் பச்சன், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதனையும் கைவிட்டுவிட்டாராம்.

திரைப்படங்களில் அமிதாப் புகைப்பிடிப்பது போல் நடித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் அவர் புகைப்பிடிக்க மாட்டாராம். ஆனால், ஆரம்ப காலத்தில் அந்த பழக்கத்தை வைத்திருந்த இவர், பின்னர் அதனை கைவிட்டுவிட்டார்.