பிரபல நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாகும் அழகி இவர் தான் : அப்போ இன்னொரு நடிகை?

955

சந்தானத்துக்கு ஜோடியாகும் அழகி

நடிகர் சந்தானம் தில்லுக்கு துட்டு2, A1 படங்களின் மூலம் தொடர்ந்து ஹிட் கொடுத்துவிட்டார். இவ்விரு படங்களும் காமெடி கலந்ததாக ரசிகர்களை ஈர்த்தன. நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. இதனையடுத்து அவர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் புது படத்தின் நடித்து வருகிறார்.

இவர் சந்தானம் காமெடியனாக நடித்த ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை படங்களை இயக்கியவர். சந்தானத்தின் புதிய படத்திற்கான ஹீரோயின் தேர்வு நடைபெற்று வந்தநிலையில் தற்போது இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவர் ஏற்கனவே A1 படத்தில் அவருடன் டாக்டராக நடித்த தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறாராம். இன்னொரு ஹீரோயினாக மிஸ் கர்நாடகா அழகி பட்டம் வென்ற ஸ்வாதி முப்பாலா தேர்வாகியுள்ளாராம்.