ஆட்டோகிராபில் நடித்த நடிகையா இது?
சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களை விட பல்வேறு நடிகைகள்தான் விரைவில் காணாமல் போய் விடுகிறார்கள்.
அதுவும் திருமணத்திற்கு பின்னர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற விவரம் கூட தெரியாமல் போய்விடுகிறது.
அந்தவகையில் சேரன் நடித்து இயக்கிய “ஆட்டோகிராஃப்” படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே அதிகம் பேசப்பட்டவர் கோபிகா.
இந்த படத்திற்கு பிறகு தான் கோபிகா சினிமா திரை உலகில் பரவலாகப் பேசப்பட்டார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 40 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் படங்களுக்கும் உலகில் ஆட்டோகிராப், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அதற்குப் பின்னர் அஜிலேஷ் சக்கோ என்பவரை 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அயர்லாந்தில் அஜிலேஷ் சக்கோ அவர்கள் மருத்துவராக பணிபுரிகிறார்.
திருமணத்திற்கு பிறகு கோபிகா அயர்லாந்திலே செட்டில் ஆகிவிட்டார். அதற்குப் பிறகு நடிகை கோபிகா சினிமா துறையில் எட்டிப் பார்க்கவே இல்லை.
அதுமட்டும் இல்லாமல் கோபிகா திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். தற்போது குடும்ப வாழ்க்கையிலேயே முழு கவனமும் செலுத்த தொடங்கினார்.
இவருக்கு இரண்டு அழகான குழந்தைகள் இருக்கின்றனர். சமீபத்தில் கோபிகா அவருடைய கணவர், குழந்தைகளோடு எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஆட்டோகிராப் கோபிகாவா இவர் என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த அளவு அடையாளம் தெரியாமல்போய்விட்டார். அது மாத்திரம் அல்ல, அவருக்கு அழகிய குழந்தைகளும் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.