பிரபல நடிகர் மனோ விபத்தில் சிக்கி மரணம் : பிரபலங்கள் இரங்கல்!!

953

பிரபல நடிகர் விபத்தில் சிக்கி மரணம்

பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மிக பிரபலமானவர் நடிகர் மனோ. மானாட மயிலாட நிகழ்ச்சியில் காமெடி, மிமிக்ரி, நடனம் என கலக்கிவந்த அவர், அதன்பிறகு சன் டிவியின் லொள்ளு பா நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

அவருக்கு லிவியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று அவர் தன் மனைவியுடன் வெளியில் சென்று திரும்பியபோது அவரது கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மனோ உயிரிழந்தார். மனைவி லிவியா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தின் சிசிடிவி காட்சியும் தற்போது வெளிவந்துள்ளது.நடிகர் மனோவின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக பல சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.