சுர்ஜித் பெற்றோருக்கு நடிகர் ராகவா லாரென்ஸ் உருக்கமான வேண்டுகோள்!!

972

நடிகர்  உருக்கமான வேண்டுகோள்!

சுர்ஜித்தின் மரணத்தால் தற்போது தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. வீட்டுக்கு அருகில் இருந்த மூடப்படாத ஆழ்துளைகிணற்றில் விழுந்த அவரை காப்பாற்ற பல்வேறு வித முயற்சிகள் நடந்தாலும் அவை பலனளிக்கவில்லை.

அவர் இறந்த நிலையில் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது உடல்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சுர்ஜித்தின் பெற்றோருக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். “சுர்ஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகிவிட்டான். அதுபோல் இந்த தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுர்ஜித் என பெயரிட்டு வளருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.”

“அப்படி நீங்கள் குழந்தையை தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்து கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.