தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள்.
மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.
ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.
இந்நிலையில் மலையாள படமொன்றில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்றும், பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் அவர்களுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
என்கிற தகவல் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிய, தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் உள்ள பீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகும் வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு அத்தாட்சியாக இருந்த சிவாஜி கணேசனுக்கு பிறகு இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது நம்ம உலகநாயகன் கமலஹாசன் தான். எந்த கதாபாத்திரங்களில் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்தை தன் கண் முன்னே நிறுத்துவார்.
ராஜேஷ் M செல்வாவை தவிர எந்த இளம் இயக்குனருக்கும் வாய்ப்பளிக்காமல் இருந்த கமல்ஹாசன், அதிசயத்தின் அதிசயமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் லோகேஷ் கனகராஜ்க்கு வாய்ப்பளித்தார். கமல் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் Title Teaser வெளிவந்துள்ளது.
தற்போது அந்த படத்தின் டீசர் ஹாலிவுட் வெப் சீரிஸ் இல் இருந்து சு டப ட்டது என கண்டுபிடித்து விட்டார்கள் நம்ம ஆட்கள். Narcos : Mexico season 2 என்னும் Web Series காட்சியில் இருந்து சு ட் டுவி ட்டார்கள்.
விக்ரம் Teaser-இல் ஒரு தனி வீட்டில் இருக்கும் கமல்ஹாசன், கே ங் ஸ் டர்ஸ் மற்றும் போ லீ ஸ்கா ரர்களை அழைத்து விருந்து வைக்கிறார். அதே போல் தன் அந்த டீசரும் அமைந்துள்ளது. இதைப் பார்த்த சிலர் கமல்ஹாசன் படத்தில் இதெல்லாம் சகஜம் என்று அசால்டாக கூறிவிட்டு செல்கிறார்கள். இன்னும் சிலர், கமல்ஹாசனை ஏ மாத்திட்டாங்க என்று புலம்புகிறார்கள்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜி பிலிம்சிட்டி ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று முதல் அஜித்குமார் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார.
இதில் முதன்மையாக பைக் ரேஸிங் மற்றும் சேசிங் போன்ற காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது தல அஜித் குமாரின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே RX100 என்ற திரைப்படத்தின் நாயகன் கார்த்திகேயா அஜித்திற்கு வலிமையான ஒரு வில்லனாக நடிக்கும் பட்சத்தில் ஒரு பெண் எதிர்மறை கதாபாத்திரமும் இத்திரைப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ், வலிமை ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஒரு படம் வெளியாவதே பெரிய விஷயமாக இருக்கிறது.
அதே நிலைமை தான் தமிழின் முன்னணி கதாநாயகிகளுக்கும். இப்படி இருக்கும் நிலையில் ஒரு கதாநாயகிக்கு ஒரே பண்டிகை தினத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளது.
தற்போதைய லேடி ‘சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா தான் அந்த நடிகை. 2006 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ‘ஈ’, ‘வல்லவன்’, ‘தலைமகன்'(சரத் குமார் நடிப்பில் வெளியான 100 வது திரைப்படம்) ஆகிய படங்கள் வெளியாகின.
இந்த மூன்று படங்களிலும் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் கடைசியாக ஒரே நாளில் மூன்று படங்கள் கொடுத்த ஒரே நாயகி நடிகை நயன்தாரா தான்.
இன்றைய கதாநாயகிகள் மத்தியில் இந்த சாதனை நிச்சயம் நயன்தாராவுக்கும், நயன்தாரா ரசிகர்களுக்கும் இது ஒரு சந்தோசமான நிகழ்வு தான்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். தளபதி திரைப்படத்தை இயக்கிய அடுத்த கணமே உலகநாயகனது திரைப்படத்தினை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
இருப்பினும், தளபதியை வைத்து இயக்கிய மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வராமல் இருக்கிறது. ஓடிடியில் ரிலீஸ் செய்யப் படாது என அனைத்து தரப்பிலும் உறுதியாக தெரிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் வெளியீடு எப்போது படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
திரையரங்குகள் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டாலும் அது ரசிகர்களுக்கு முழு மகிழ்ச்சியைக் கொடுக்காது என்பதால் பட வெளியீடை தள்ளி வைப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர்கள் மற்றும் டீசர்கள் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு தேதி உறுதியாக அறிவிக்கப்பட்ட பின்னரே ட்ரைலர் மற்றும் டீசர்கள் ரசிகர்களுக்காக வெளியிடப்படும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். அவர் நடிகர் கமல்ஹாசனது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கேக் ஒன்றினை செய்துள்ளார். அதில் நம்மவர் எனும் வாசகத்தினை எழுதியுள்ளார்.
மேலும் மக்கள் நீதி மையத்தின் கட்சி கொடியினையும் கேக்கில் வைத்துள்ளார். கமல் சாரின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷலாக செய்தது என்ற வாக்கியங்கள் உடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உலக நாயகன் கமல் ஹாசன் Nov 7 தனது 66வது பிறந்தநாளை கொண்டாடினார் . இவ்வேளையில் தண்டோரா டைம்ஸ் தனது வாசகர்களுக்காக, கமல்ஹாசன் நடிப்பதற்காக துவங்கப்பட்டு கைவிடப்பட்ட படங்களின் ஐந்து முக்கிய படங்களின் வரிசையை இங்கே தொகுப்பாக கொடுக்கிறது.
1.தமிழ் சினிமாவில் மிக குறைந்த பட்ஜெட்டிலேயே திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு கோடி பட்ஜெட்டை தாண்டிய திரைப்படமாகும். 1980களிலேயே இவ்வளவு பெரிய பட்ஜெட்டினை இத்திரைப்படம் கொண்டிருந்தது.
இதனை மணிரத்னம் இயக்க வேண்டி இருந்தது. பின்னர், நடிகரும் இயக்குனருமான ராஜசேகர் இத்திரைப்படத்தின் இயக்கும் பணிகளை மேற்கொண்டார்.
2. கமல்ஹாசன், இயக்குனர் சங்கர் மற்றும் எழுத்தாளர் சுஜாதா கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு முக்கிய திரைப்படம் உருவாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே இந்தியன் திரைப்படத்தில் இந்த இயக்குனர் நடிகர் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று அனைவரின் எதிர்பார்ப்புகளையும் உயர்த்தியது. இரட்டை வேடங்களில் கமல்ஹாசன் நடிகை பிரீத்தி ஜிந்தா உடன் எடுத்த போட்டோ ஷூட் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும் இந்த படம் அந்த சமயத்தில் கைவிடப்பட்டு பத்து வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் எந்திரன் திரைப்படமாக உருவாகியது.
3. சந்திரமுகி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை சந்தித்திருந்த நிலையில் இயக்குனர் பி வாசு உடன் மூன்று வேடங்களில் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்திற்கான வேலைகள் துவங்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் தன்னை பிஸியாக ஆக்கிக் கொண்டதால் இந்த படம் கைவிடப்பட்டது.
4.வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அந்த திரைப்படத்தின் இயக்குனர் சரண் உடன் கமல்ஹாசன் மீண்டும் இணைந்து கலகலப்பான திரைப்படம் ஒன்றை எடுப்பதற்கான அடித்தளம் போடப்பட்டது. ஆனால், தயாரிப்பு பிரச்சனைகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த படம் கைவிடப்பட்டது.
5. இந்திய திரைப்பட வரலாற்றிலேயே அதிக எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்ட மருதநாயகம் திரைப்படம் இன்றளவும் கோடிக்கணக்கான மக்களின் கனவாகவே இருந்து வருகிறது. இந்த திரைப்படம் நினைவாக மாறும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்.
மலையாளத்தில் 2016ம் ஆண்டு கேரளாவில் மிக பெரும் சர்ச்சையை ஏற்பத்திய படம் “ஆதம்”(ADAM). அதன் இயக்குனர் மற்றும் நாயகன் சமர் (ZAMAR). இவர் கடந்த மார்ச் மாதம் தமிழில் ‘அம்பாசடர்’ என்னும் படத்தை தனிஷா இன்டெர்னஷனல் என்னும் தயாரிப்பு நிறுவனத்தில் இயக்க போவதாக அறிவிப்பு வெளியானது, அப்படத்தில் ‘வன்முகம்’ படத்தின் நடிகர் கதிரவன் நாயகனாகவும் ஒப்பந்தமானார்.
இதற்கிடையில், கொரோனா என்னும் வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பிற்கு இந்தியா முழுவதும் தடை போடப்பட்டது. அப்படத்தின் குழுவினரும் பெரும் கவலையுடன் இருந்தனர். ஏழு மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்கு செல்ல பல உத்தரவுடன் தளர்வுகளையும் தமிழக அரசு கொடுத்தது.
ஆனால், இப்பட குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு தளர்வுகள் கிடைக்காத காரணத்தால், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் ஒரு முற்றிலும் மாறுபட்ட கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஆதம் சமர். இதிலும் ‘அம்பாசடர்’ படத்தின் நடிகர் கதிரவன் நாயகனாக நடிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் மலையாள நடிகர் அமல்தேவ் மற்றும் பலர் இந்த த்ரில்லர் சஸ்பென்ஸ் கதையில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.
முதன்முறையாக நவமுகுந்தா என்னும் புது தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தமிழில் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியாகியது, அதன் தலைப்பு ‘சீன் நம்பர் 62’ வெளியாகியது. அப்படம் சமூகவலைத்தளங்களில் மாபெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
வருகிற தீபாவளி சனிக்கிழமையன்று படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குனரும், நல்ல நடிகர்களும் மட்டுமில்லாமல் ஒரு நல்ல திரைப்படமும் வரப்போவதை நினைத்து கோடம்பாக்கம் மகிழ்ச்சிக் கொள்கிறது. புதுப்பட குழுவினர்களுக்கு இப்படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள். கேரளாவிலிருந்து வந்தாரையும் வாழவைக்குமா தமிழகம் என்று பார்ப்போம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுதியுடன் நடிப்பில் படு மாஸாக, மிக சிறப்பாக, வெறித்தனமாக உருவாகியுள்ளது “மாஸ்டர்”.
இந்த படத்தின் டீஸர் எப்போது வெளியாகவுள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இது இல்லாமல் வாத்தி கம்மிங் ஒத்து, குட்டி ஸ்டோரி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஆரவாரமான வரவேற்பை பெற்று வருகின்றது. இவர் கமலை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்று அறிவிப்பு வந்தவுடன் இணைய தளமே அதிர்ந்தது.
அந்த படத்தை பற்றிய எந்த Update வந்தாலும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் கொண்டாடி வருகிறார்கள். கமல் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் Title Teaser வெளிவந்துள்ளது.
Teaser-இல் ஒரு தனி வீட்டில் இருக்கும் கமல்ஹாசன், கேங்ஸ்டர்ஸ் மற்றும் போலீஸ்காரர்களை அழைத்து விருந்து வைக்கிறார். இவர்கள் வருவதற்கு முன்பு பல்வேறு ஆயுதங்களை ஆங்காங்கே மறைத்து வைக்கிறார்.
கடைசியாக இரு கோடரிகளை கைப்பற்றி ஆரம்பிக்கலாமா என்று அவருக்கே உரிய பாணியில் டீசரை முடிக்கிறார். படத்திற்கு பெயர் விக்ரம் என்று வைத்துள்ளார்கள். இது ஏற்கனவே 1986-ல் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைபடத்தின் பெயராகும்.
இதுல கூடுதலான தகவல் என்னவென்றால் லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். ஆக, ஒரு வேட்டையாடு விளையாடு படம் போல் ஒரு சம்பவத்தை எதிர்நோக்கி காத்திருப்போம்.
டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.
இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் மலரும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தற்போது, ஹோட்டல் ரூம் ஒன்றில் அரை குறை ஆடையில் தொடை தெரிய ஆட்டம் போடும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.