தொகுப்பாளினியாக பல வருடங்களாக முன்னிலையில் இருந்து வருபவர் டிடி. 20 வருடத்திற்கு மேல் இவர் இந்த வேலையை செய்து வருகிறார்.
எப்போதும் புதுபுது நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். அடுத்து அவர் என்ன மாதிரியான நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது என்றே கூறலாம்.
இந்த நிலையில் டிடி பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயம், பழைய செய்தி தான் ஆனால் சிலர் மறந்திருப்பீர்கள். அதாவது டிடி சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்கள், சீரியல் நடித்துள்ளார்.
மிகப்பெரிய ஹிட் சீரியலான கோலங்களில் டிடி நடித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,
தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடிப்பதாக, இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்குவதாக இருந்தது. தற்போது அதை பற்றிய தகவல்கள் வரவில்லை.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததாகவும் ஆனால் தன்னை அறியாமல் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், அவரது நடிப்பில் வெளியாகியுள்ள BREATH என்ற வெப் சீரிஸின் இரண்டாம் சீசனில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார்.
சென்சார் இல்லை என்பதால் அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை. சக நடிகை ஒருவருக்கு காருக்குள் அமர்ந்தபடி லிப்லாக் அடிக்கும் காட்சியில் நடித்துள்ள அவரது அந்த வீடியோ கிளிப் மட்டும் இணையத்தில் தீயாக பரவி வந்தது.
இந்த முத்த காட்சிகளுக்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரிய சர்ச்சை உருவாகியுள்ளது.
இது போதாதென்று அந்த நேரத்தில் பிகினி உடையிலும் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தார் அம்மணி. “இந்த உடம்பை வச்சுக்கிட்டு எப்படி பிகினி போடுவீங்க?” என்று கை கொட்டி சிரித்தார்கள் அவரது ரசிகர்கள்.
ஆனால், நித்யா மேனன் இதற்காக தன்னுடைய பொசு பொசு உடம்பை குறைத்து ஒல்லியாக மாறி கிண்டலடிதவர்களை வாயடைக்க செய்துள்ளார்.
எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி,
அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.
இந்தநிலையில் சமீபத்தில் இவர் எடுத்த போட்டோ ஷூட் ஒன்றில் தன்னுடைய முழுதொடையழகும் தெரியும் படி படு மோசமான போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “போட வேண்டியதை போடும்மா, எல்லாமே தெரியுது” என்று கிண்டல் கேலி செய்து வருகிறார்கள்.
தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.
இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.
இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கில் அவர் நடித்த “ஆல வைகுந்தபுரமுலு” படம் பேய் ஹிட்.
தற்போது மீண்டும் இந்தி படமான ஹவுஸ்புல் 4 படத்தில் நடித்தார். இப்படி பிஸியாக இருக்கும் பூஜா ஹெக்டே சமீபத்திய பேட்டி ஒன்றில் தென்னிந்திய ரசிகர்கள் தொப்புளை பார்த்தாலே ஆவேசம் ஆகி விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
இதை ஒரு தரப்பு ரசிகர்கள், ஆமாம் என்றும் மற்றொரு தரப்பு ரசிகர்கள் ரசிகர்களை பற்றி இப்படியா மீடியாவிடம் பேசுவது என்று விமர்சித்தும் வருகிறார்கள்.
பிக்பாஸில் இந்த வாரம் அர்ச்சனா, ஆரி, சனம், பாலாஜி, சோம் சேகர், சுரேஷ் மற்றும் அனிதா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் இந்த வாரத்தில் சுரேஷை தவிர மற்ற எல்லோரும் ஓரளவிற்கு சிறப்பாகவே தனது விளையாட்டை விளையாடுகிறார்கள். தற்போது வந்துள்ள தகவலின்படி இதுவரை பதிவான வாக்குகளில் குறைவான வாக்குகளை பெற்றவர் சுரேஷ் சக்கரவர்த்தி என்று கூறப்படுகிறது.
நிகழ்ச்சியின் முதல் சில வாரங்களில், சுரேஷ் சக்கரவர்த்தி அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆப்பு அடித்து கொளுத்தி போட்டு கொண்டு இருந்தார். அவரது விளையாட்டு தந்திரத்தை கேபிரெல்லா, ரம்யா தவிர கிட்டத்தட்ட யாருமே புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் அர்ச்சனா வந்த பிறகு அவருடைய பெர்மார்மன்ஸ் வெகுவாக குறைந்துள்ளது. இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறிவிட்டதாக தகவல் வந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி மற்றும் தீபக் பரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘என் பெயர் ஆனந்தன்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
ஜோஸ் ஃபிராங்க்ளின் இசையமைக்கிறார். மனோ ராஜா ஒளிப்பதிவும், படத்தொகுப்பை விஜய் ஆண்ட்ரூஸ்ம் செய்கிறார்கள்.
காவ்யா புரொடக்ஷன்ஸ் சார்பாக கனகா வெங்கடேசன், சவிதா வெங்கடேசன் மற்றும் கோபி கிருஷ்ணப்பா தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் டீஸரைப் பார்க்கும்போது சினிமாவிற்குள் சினிமா எடுப்பது தான் படத்தின் மையக் கரு என்பது தெரிகிறது. ஒரு படத்தை இயக்குவதற்கு ஒரு இளைஞன் எடுக்கும் முயற்சியும், அதில் வெற்றிப்பெற அவன் சந்திக்கும் துயரங்கள் பற்றி கூறும் படமாக இருக்கும். மேலும், கலை, இசை, ஒளிப்பதிவு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
இந்த பாணியில் இதற்கு முன் சில படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் இப்படம் மக்களை எந்தளவு ரசிக்க வைக்கும் என்பது படம் பார்க்கும்போது தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.
ரசிகர் அனைவரது கவனமும் தற்பொழுது சிலம்பரசனின் ஈஸ்வரன் திரைப்படம் குறித்தே இருக்கிறது. இத்திரைப்படத்தை மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க சுசீந்திரன் திட்டமிட்டுள்ளார். இத் திரைப்படமானது பொங்கலன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அகர்வால் இத்திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க தமன் இசை அமைக்கிறார்.
சமீபத்தில் சரண்யாமோகனிடம் சிம்பு நாட்டியம் கற்றுக் கொள்வது போன்ற புகைப்படங்கள் வெளியானது.
அவர் இந்த திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரண்யா மோகன் வேலாயுதம் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்தவர் ஆவார்.
இந்த வேளையில் புலி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நந்திதா ஸ்வேதா, சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த covid-19 காலகட்டங்களில் அக்ஷய் குமார் தனது திரைப்படம் குறித்த முடிவுகளை மிக தெளிவாக எடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாது தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களிலும் அவர் ஒப்பந்தமாகி வருகிறார்.
அந்த வகையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள லக்ஷ்மி திரைப்படம் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.
மேலும், அக்ஷய் குமார் தனது அடுத்த திரைப்படமான பெல்பாட்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பினையும் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே தெரியவருகிறது.
இந்நிலையில் தற்போது முன்னணி நடிகையான நோரா ஃபேடேகி இத்திரைப்படத்தின் ஒரு குத்து பாடலுக்கு நடனமாட இருப்பதாகவும் அதற்காக அவருக்கு அதிக சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும் தகவல் குறித்து படக்குழுவினர் எதுவும் அறிவிப்பினை வெளியிடவில்லை.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஜீவா. அவர் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கும் திரைப்படம் 83. இதில், ரன்வீர் சிங் தீபிகா படுகோன் மற்றும் பல முன்னணி நாயகர்கள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய தருணத்தை பற்றியும் அதனை சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியும் குறித்து உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்து ஏப்ரலில் வெளியாக வேண்டியது ஆனால் covid-19 காரணங்களால் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.
இருப்பினும் இப்போது மேலும் தள்ளிப்போய் 2021ல் தான் வெளியாகும் என்ற நிலை இப்பொழுது உருவாகியிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. சமந்தாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் மிகவும் அதிகம்.
னது திரைப்படங்களின் மூலமாக கவனம் ஈர்த்து வந்தவர் தற்போது சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது கணவருடன் மரத்திற்கு கீழே நிற்கும் ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது.
அந்த புகைப்படத்தின் கீழே சமந்தாவின் மிக தீவிரமான ரசிகர் ஒருவர், நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள சமந்தா எனக்கு இது மிகவும் கடினமானது உன்னால் செய்ய முடியுமா nag? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சமந்தா தற்பொழுது அமேசான் பிரைம் வீடியோ வில் ஒளிபரப்பாகிவரும் ஃபேமிலி மேன் சீசன்2 வெப் சீரிஸில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அவர் விரைவில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.