க/பெ ரணசிங்கம் மாபெரும் வெற்றி: இயக்குனருக்கு மாருதி காரினை பரிசளித்த தயாரிப்பாளர்!!

க/பெ ரணசிங்கம்………..

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே ராஜேஷ் அப்படத்தின் இயக்குனர் விருமாண்டிக்கு மாருதி கார் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த இத்திரைப்படத்தை பெ. விருமாண்டி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். கே.ஜெ.ஆர் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார்.

க பெ ரணசிங்கம் திரைப்படம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நேரிடையாக ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஊரடங்கு நேரத்தில் படம் வெளியானதால் மக்கள் குடும்பத்துடன் அமர்ந்து வீட்டில் படத்தைப் பார்த்தனர்.

இந்நிலையில் இப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கே.ஜே ராஜேஷ் இயக்குனர் விருமாண்டிக்கு மாருதி xl காரை அன்பு பரிசாக வழங்கியுள்ளார்.

பாடலான தம்பி என்னும் பாடல் வெளியானது “இரண்டாம் குத்து” சிங்கிள் !

இரண்டாம் குத்து……..

சில வாரங்களுக்கு ரிலீசான இரண்டாம் குத்து படத்தின் டீஸரை பார்த்து எல்லோரும் முகள் சுழிக்க, சினிமாக்காரர்கள் மட்டும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தார்கள் ( பாரதிராஜாவை தவிர)

இந்த படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் டீசரை பார்த்த எல்லோரும் என்ன தான் அடல்ட் படமாக இருந்தாலும் இவ்வளவு ஆபாசம் தேவையா ? என்று கேட்டார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது யூடியூபில் இருந்து தூக்கி விட்டார்கள். மீண்டும் டிரெண்டில் இருப்பதற்காக இந்த படத்தின் சிங்கிள் பாடலான தம்பி என்னும் பாடலை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.

“ஊரான் வீட்டு தம்பி எல்லாம் ஊட்டி வளர்த்தேனே, என்னோட தம்பி என்னை தலை குனிய வெச்சாயே” என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை சற்று நேரத்திற்கு மேல் கேட்க முடியவில்லை.

அடுத்தவ புருஷன கைக்குள்ள போட்டுகிட்டு இருந்தவள்ளாம் அம்மனா ? நயன்தாராவை விளாசிய மீரா மிதுன் !

மீரா மிதுன்…

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே சூப்பர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். ஒயில்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார்.

சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவை விட மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலத்தை திட்டி விமர்சித்துப் பேசி தவறான வழியில் பிரபலமானவர் என்பது உலகறிந்த விஷயம்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, Lady Superstar ஆன நயன்தாராவை திட்டி பிரபலமாக யோசித்து வருகிறார்.

விஷயம் என்னவென்றால், RJ பாலாஜி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தின் சிங்கிள் பாடல் ஆன ஆடி குத்து பாடலை வெளியிட,

உடனே அந்த டுவீட்டை Quote செய்த மீரா மிதுன், “அடுத்தவ புருஷன கைக்குள்ள போட்டுகிட்டு இருந்தவள்ளாம் அம்மனா ?” என்று கன்னா பின்னா என்று நயன்தாராவை விளாசியுள்ளார். சும்மா இருப்பார்களா நம்ம நயன் Fans, மீராவை இந்த நொடி வரை கெட்ட கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

அஜித்தை பார்த்து வெட்க்கபட்டு சிரிக்கும் கரீனா கபூர் – வைரலாகும் Rare Video !

கரீனா கபூர்….

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

அப்படிப்பட்ட Hit படம் தான் 2002-இல் தீபாவளிக்கு வெளியான வில்லன். இந்த படம் எவ்வளவு பெரிய வெற்றி என்றால், அஜித்துக்கு Filmfare award கிடைத்தது, கே.எஸ் ரவிகுமாருக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது.

இந்த படம் வெளியான 18 வருடங்கள் ஆன நிலையில், 18YrsofMegaBBVillain என்று டிவிட்டரில் டிரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி எல்லா Tweet-யும் தேடி பார்க்கையில், ஒரு வீடியோ சிக்கியுள்ளது. அதில், வில்லன் பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.

அதில் கரீனா கபூர் மற்றும் அபிஷேக் பச்சன் ஒரு ஹிந்தி படத்தின் பாடல் காட்சிக்காக அதே Location வர, உடனே அஜித்தையும், கிரணையும் சந்தித்து உள்ளார்கள் அந்த ஹிந்தி படக்குழு.

அதில் அஜித் நடனமாட, உடனே கரீனா வெட்கத்தால் சிரிக்க, அந்த பாடல் காட்சிக்கு அபிஷேக் பச்சன் Cut சொல்ல, விடியோ இப்போ செம்ம வைரல்.

அப்பாவான காமெடி நடிகர் சதீஷ் ! பூமிக்கு வந்த குட்டி தேவதைக்கு குவியும் வாழ்த்துக்கள் !

காமெடி நடிகர் சதிஷ்…

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் சந்தானத்தின் காமெடி குறைந்து போன நிலையில் தற்போது பல்வேறு காமெடி நடிகர்கள் ஆக்கரமித்துள்ளனர். அந்த வகையில் காமெடி நடிகர் சதீசும் ஒருவர்.

காமெடி நடிகர் சதிஷ் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

அதன் பின், சிக்ஸர் பட இயக்குனரின் தங்கையை கரம்பிடித்து, இன்று அவரின் முதல் பெண் குழந்தையை கையில் ஏந்தியுள்ளார்.

இதை நடிகர் சதீஷ் அவர்களே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் அந்த குட்டி தேவதைக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள்.

புற்று நோய்க் காரணமாக இறந்த தனுஷின் ஆஸ்தான எடிட்டர் !

கோலா பாஸ்கர்…

இயக்குனர் ஒரு படத்தை எப்படி எடுத்து இருக்கிறார்? அந்த படம் ஓடுமா? ஓடாதா? நல்லா இருக்கா? நல்லா இல்லையா? மக்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா? என்பதை முதலில் பார்த்து கூறுபவர் எடிட்டர்.

இரவும் பகலுமாக அந்த படத்தில் உள்ள குறைகளை மறைத்து நிறைகளை ஏற்றி இந்த சீனை மட்டும் திருப்பி எடுத்துட்டு வாங்க, இந்த சீன் வேண்டாம் என்று இயக்குனர்களுக்கு எடுத்துச் செல்பவர் எடிட்டர். எடிட்டர் தான் ஒரு படத்தின் காப்பாளன்.

அந்த வகையில், தமிழ் தெலுங்குத் திரைப்பட எடிட்டர் கோலா பாஸ்கர் அவர்கள் திடீரென இன்று புற்று நோய் காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக எடிட்டர் கோலா பாஸ்கர் தொண்டை புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஐதராபாத்தில் காலமானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, போக்கிரி ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களுக்கும் அவர் எடிட்டிங் செய்துள்ளார்.

தனது மகனை ஹீரோவாகி மாலை நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தை அவர் தயாரித்துள்ளார் என்பதும் இந்த படத்தை செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாம்பை பிடித்து விளையாடியதால், சிம்பு படத்துக்கு வந்த வம்பு !

சிம்பு…

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கையில் ஒரு பாம்பை அசால்ட் ஆக பிடித்து செம்ம ஃபிட் ஆக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட நிலையில், இப்போ சிக்கல் ஆகியுள்ளது.

என்ன விஷயம் என்றால், ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் நிஜ பாம்பை மரத்திலிருந்து பிடித்து சாக்குப் பையில் போடுவது போன்ற ஒரு காட்சி உள்ளதால் தற்போது சிக்கல் உருவாகியுள்ளது.

வன உயிரினப் பாதுக்காப்புச் சட்டத்தின் கீழ் பாதுக்காக்க வேண்டிய உயிரினங்களில் இந்தியாவில் உள்ள அனைத்துப் பாம்புகளும் உள்ளது. சிம்பு இப்படி பாம்பை எல்லாம் சித்திரவதை செய்வதால் சிம்பு மீது வன உயிரின ஆர்வலர்கள் புகாரளிக்கவுள்ளனர்.

மேலாடை எதுவும் இன்றி அனுயா வெளியிட்ட செம்ம Glamour புகைப்படம் !

அனுயா…

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார்.

தற்போது வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி நின்று கொண்டு தன்னுடைய Armpit காட்டியபடியும், போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், Armpit-ஐ வர்ணித்து வருகிறார்கள்.

பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார்.

நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம் ! எடக்கு மடக்கான கருத்துக்களை தெரிவித்து வரும் ரசிகர்கள் !

நீலிமா ராணி….

சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் கடுகடுப்பான முகத்துடன் பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் தோற்றம் அழிக்கும் நடிகை நீலிமா ராணி.

தமிழில் தம் மற்றும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் விதவிதமாக போட்டோக்களை எடுத்து வெளியிடுவார்.

இதுவரை பல படங்கள் மற்றும் சீரியலில் நடித்திருந்தலும் இவர், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

அப்படி இருக்கும் நிலையில் மறுபடியும் ஒரு போட்டோ ஷூட் நடத்தி உள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் எடக்கு மடக்கான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

“பிகினி போட ஓகே” முதல் முறையாக பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் !

கீர்த்தி சுரேஷ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது ‘தலைவர் 168’ என்னும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது தற்போது Corona காரணமாக ரஜினி வர பயப்படுவதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாலிவுட் படம் ஒன்றில் கமிட்டான கீர்த்தி சுரேஷிடம் பிகினி உடையில் சில காட்சிகளில் நடிக்க கேட்டு இருந்தார்கள். அப்போது, “இந்த Dress – ஆ, இது ரொம்ப செ க் ஸியா இருக்கு நான் போடமாட்டேன்” என அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “மகாநதி படத்திற்கு பிறகு நான் அதிகம் பணியாற்றத் தொடங்கினேன். நான் நிறைய எடை குறைத்ததற்கு மிஸ் இந்தியா ஒரு காரணம். நான் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் என்னிடம் கேட்டுருந்தார். தற்போது, எனக்கு பிகினி கூட பொருந்தும் ”என்று கீர்த்தி சுரேஷ் கூறினார்.