நடிகர் அஜித் குமார்…

நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது. இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில், இன்று இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

நீண்ட நாட்கள் ஆனதால், அஜித் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது.இந்த நிலையில் வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும்,

அதற்கான செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இருந்தாலும் நம்ம ஆளு அஜித் அந்த படத்தின் படபிடிப்பில் கலந்து கொள்வாரா என்பது மாயமாகவே உள்ளது.

மேலும் வலிமை திரைப்படம் வெளியாகும் அதே நேரத்திலேயே படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் வலிமை திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.











































