“36 வயசுல எப்படி இருக்காங்க” பிரியாமணியின் Latest Clicks !

பிரியாமணி….

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை கடும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.

சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர்.

அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் Structure தெரிவது போல HOT போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “36 வயசுல எல்லாம் கின்னுனு இருக்கு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

30 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நடிகை அமலா! ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

நடிகை அமலா…

நடிகை அமலா தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் மிகுந்த டாப் ஹீரோயினாக இருந்து ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பலருடன் ஜோடியாக நடித்தவர்.

வேலைக்காரன், மாப்பிள்ளை, சத்யா, வெற்றி விழா, அக்னி நட்சத்திரம், நாளைய மனிதன், வேதம் புதிது என பல படங்களில் நடித்தவர்.

1991 ல் கற்பூர முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். இதுவே அவருக்கு தமிழில் கடைசி படம் என கூறலாம்.

30 வருடங்கள் கழித்து தற்போது தமிழில் எட்டிப்பார்க்கப்போகிறாராம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள 18 வது படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாம்.

சர்வானந்த் ஹீரோவாக நடிக்க ரிது வர்மா ஜோடியாக இணைகிறார். ஸ்ரீகார்த்திக் இயக்கும் இப்படத்தின் படபூஜையுடன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

வருமானமின்றி வேறு தொழிலுக்கு செல்லும் அவலம்! எருமை மாடு மேய்க்கும் சீரியல், சினிமா நடிகை!

மஞ்சு பிள்ளை…

கொரோனா இந்த 2020 ல் எதிர்பாராத விதமாய் வந்து மார்ச் மாதம் முதல் அனைத்து தொழில்களையும் ஊரடங்கு, கட்டுப்பாடுகளால் மிகவும் பாதித்துவிட்டது.

கட்டுப்பாடு தளர்வுகள் அரசால் கொடுக்கப்பட்டு வந்தாலும் சினிமா, சீரியல் தொழில் வட்டாரம் மிகவும் பாதித்துள்ளது. காரணம் படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பரவுவதால் தான். அண்மையில் இதன் மூலம் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் இருக்கிறார்கள்.

இதனால் அத்துறை சார்ந்தவர்கள் மாற்று தொழிலில் இறங்கியதும் செய்திகளாக வெளிவந்தன.

இந்நிலையில் மலையாள படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து வந்த மஞ்சு பிள்ளை தற்போது எருமை மாடு வளர்க்கும் தொழிலில் இறங்கியுள்ளார்.

சுஜித் வாசுதேவ் என்ற ஒளிப்பதிவாளரை திருமணம் செய்துகொண்டார். கணவரின் ஆலோசனையால் முரா என்ற 50 எருமை மாடுகளை வாங்கி திருவனந்தபுரம் அட்டிங்கல்லில் பண்ணை வைத்துள்ளாராம்.

மாடு மேய்ப்படுது, தொழுவத்தில் கட்டுவது என புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by manju pillai (@pillai_manju) on

Balcony-இல் நின்று போஸ் கொடுத்த காஜல் அகர்வாலின் Latest Glamour Photo !

காஜல் அகர்வால்…

பாரதிராஜாவின் ப்ராடக்ட்ஸ் எதுவுமே தோற்றுப் போனதாக சரித்திரம் கிடையாது மனோஜ் பாரதிராஜாவை தவிர, ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, ரியாசென், பிரியாமணி என்னும் வரிசையில் காஜல் அகர்வாலை பொம்மலாட்டம் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், Balcony-இல் நின்று போஸ் கொடுத்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், காமெடியாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Appreciation for the little things.

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

சன்னி லியோன், மியா கலீஃபா-வை ஓரம் கட்டும் மஸ்த்ராம் Aunty ஆபா பால் ! பரவிய புகைப்படங்கள் ! மிரண்ட ரசிகர்கள்.!

ஆபா பால்….

Stranger things, dark, peaky blinders, breaking Bad, narcos, family man, இந்த எல்லா Webseries-களை விட பிரபலமானது Mastram தான். ஆனா நல்ல Contentக்காக பிரபலம் ஆகவில்லை, அதில் இருக்கும் சில Adult Contentக்காகதான்.

அதில் பாலிவுட் நடிகை ஆபா பால் நடித்து இருப்பார். ஆபா பால், இதுவரை ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

மஸ்த்ராம் வெப் சீரிஸ் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கி விட்டது என்றுதான் கூறவேண்டும். ஆபா பால் இன்ஸ்டாகிராமிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

நாள்தோறும் புது புது போட்டோக்களை, வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து மிரளவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஆபா பாலின் டூ பீஸ் செம கிளாமர் Selfie புகைப்படங்களை வெளியிட்டு, அது எல்லாமே ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாக பரவுகிறது.

அவரது இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மியா கலீஃபா, சன்னி லியோன்-ஏ தோத்துடுவாங்க என்று தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

REAL EYES, REALIZE, REAL LIES…? 💋. . #selfie #real #eyes #happy #life

A post shared by Aabha Paul (@aabhapaulofficial) on

நடிகை மாளவிகா மோகனின் செம்ம வைரல் புகைப்படம் !

மாளவிகா மோகன்…

2013-ம் ஆண்டு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது. தற்போது செம்ம செக்ஸியாக நீச்சல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், ” அட இங்க ஒரு மச்சம் இருக்கிறது தெரியாம போச்சே ” என்று Comment அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Wednesday afternoons by the pool at this beautiful @airbnb villa 💕🏝 #LiveAnywhere #AirbnbPartner 📸 @the.mad.hair.scientist

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

“ஒரு வருஷம் ஆன அப்புறமும் இன்னும் காசு வரல” பிக்பாஸ் கஸ்தூரியின் Open ஸ்டேட்மென்ட் !

நடிகை கஸ்தூரி…

ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.

இந்நிலையில், இவர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு வருடம் ஆகியும் தனக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து டிவிட்டரில்,

“No words to thank @vijaytelevision who have withheld my payment for over a year.
நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே manumission குழந்தைகளோட ஆப்பரேஷன் செலவுக்காகத்தான். I never believed any of your fake promises, but even I didnt expect this” என்று ஆவேசமாக டிவிட் போட்டுள்ளார்.

இணையத்தில் வைரலாக பரவும் நடிகை வேதிகா Hot புகைப்படங்கள்..!

வேதிகா…

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

தற்போது, இவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இன்று இணையத்தை கலக்குகிறது.

அதுவும் ஒரு புகைப்படம் கையை வைக்க கூடாத இடத்தில் வைத்து சூடான போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.

 

View this post on Instagram

 

🐣🐥

A post shared by Vedhika (@vedhika4u) on

விரைவில் ஓ.டி.டி.யில் வெளியாகிறது விஷாலின் ‘சக்ரா’ : நீதிமன்றத்தின் உத்தரவால் படக்குழுவினர் மகிழ்ச்சி..!

நடிகர் விஷால்…

நடிகர் விஷாலின் சக்ரா திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சக்ரா.

இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், திரைப்படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொன்மகள் வந்தாள், பென்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள், திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது.

அந்த வகையில், விஷாலின் ‘சக்ரா’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட அப்படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், சக்ரா படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விஷாலின் ஆக்ஷன் பட நஷ்டத்திற்காக விஷால் கொடுக்க வேண்டிய ரூ. 8.3 கோடி பணத்திற்கான உத்தரவாதத்தை விஷால் தரப்பினர் வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கடந்த 24ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி, ஒரு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சக்ரா படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க முடியாது என்று டிரைடெண்ட் ஆர்ட்ஸ் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சினிமாவில் வில்லன் நிஜ வாழ்க்கையில் ஹீரோ..! சோனு சூட்டுக்கு விருது கொடுத்து கௌரவித்த ஐநா..!

நடிகர் சோனு சூட்…

கொரோனா ஊரடங்கு காலத்திலும் அதற்குப் பின்னரும் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை தங்கள் சொந்த கிராமங்களுக்கு அனுப்ப முயற்சித்ததற்காக சமூக ஊடகங்களில் ஹீரோவாகப் போற்றப்பட்ட நடிகர் சோனு சூட், ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (யுஎன்டிபி) மதிப்புமிக்க எஸ்.டி.ஜி சிறப்பு மனிதாபிமான செயல் விருதுடன் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோருக்கு உணவு, பேருந்துகள், ரயில்கள் மற்றும் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து, சிறந்த வாழ்வாதாரத்திற்கான வேலை வாய்ப்புகளை வழங்கியதற்காக கடந்த திங்களன்று நடந்த மெய்நிகர் விழாவில் நடிகர் சோனு சூட் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

ஜூலை மாதம் நிசர்கா சூறாவளி மகாராஷ்டிரா கடற்கரையைத் தாக்கும் முன்பு 47 வயதான நடிகர் சோனு சூட் மும்பையில் உள்ள தனது ஹோட்டலை மருத்துவ வல்லுநர்களுக்காக தங்குவதற்கும் மும்பையில் பலருக்கு பாதுகாப்பான தங்குமிடங்களை ஏற்பாடு செய்வதற்கும் முன்வந்தார்.

பிரியங்கா சோப்ரா, லியோனார்டோ டிகாப்ரியோ, ஏஞ்சலினா ஜோலி, டேவிட் பெக்காம், எம்மா வாட்சன், லியாம் நீசன், கேட் பிளான்செட், அன்டோனியோ பண்டேராஸ் மற்றும் நிக்கோல் கிட்மேன் ஆகியோர் ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளால் மனிதாபிமான விருது பெற்ற பிற பிரபலங்கள் ஆவர்.

சோனு சூத்துக்கு வழங்கப்பட்ட விருது குறித்து யு.என்.டி.பி அளித்த அறிக்கையில், “திரு சோனு சூட்டுக்கு வழங்கப்பட்ட சிறப்பு மனிதாபிமான செயல் விருது அவருக்கு நிலையான அபிவிருத்தி இலக்குகள் ஒருங்கிணைப்பின் ஆதரவு மையமாக விளங்கும் பஞ்சாப் அரசின் திட்டமிடல் துறையால் வழங்கப்பட்டது.

ஒரு சுயாதீன நடுவர் மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் விருது பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். யு.என்.டி.பி நேரடியாக இந்த தேர்வில் ஈடுபடவில்லை. இந்த விருதை பெற்ற திரு சூட்டை நாங்கள் வாழ்த்துகிறோம். இந்த சவாலான காலங்களில் மக்களுக்கு உதவும் அவரது மனிதாபிமான முயற்சிகளை பாராட்டுகிறோம்.” எனத் தெரிவித்துள்ளது.

ஊரடங்கின் போது, ​​சோனு சூட் ஒரு கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்ணைக் கூட அறிமுகப்படுத்தினார்.

இதனால் கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது உதவி தேவைப்படுபவர்களுக்கு அவர் உதவ முடியும். சமூக ஊடகங்களில் நிதி உதவி கேட்ட திரைப்பட சகோதரத்துவத்தின் இரண்டு உறுப்பினர்களையும் அவர் அணுகினார்.

தமிழ் உள்ளிட்ட பலமொழித் திரைப்படங்களில் வில்லனாக நடித்து மக்களிடையே பிரபலமான சோனு சூட், நிஜ வாழ்க்கையில் தனது உதவிகள் மூலம் மக்களிடையே ஹீரோவாக வலம் வருகிறார்.

ஐநாவின் இந்த விருதுக்கு அவர் பொருத்தமானவர் தான் என அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.