விலையுர்ந்த பரிசை சர்ப்பிரைஸாக கொடுத்த அசத்திய பிரபாஸ்! அசரவைத்த புகைப்படம் இதோ..!

நடிகர் பிரபாஸ்…

தென்னிந்திய சினிமாவில் அதிகம் பேசப்படக்கூடிய நடிகர். பாகுபலி என்னும் பிரம்மாண்ட படம் மூலம் வசூல் சாதனை அள்ளி பின் சாஹோ படத்திலும் பெரும் வசூல் கலெக்‌ஷன் பெற்றார்.

அவரின் அடுத்த படமாக ஆதி புருஷ் ரூ 500 கோடி பட்ஜெட்டில் இதிகாசமான ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் அவரின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் அவர் ராமனாக நடிக்கவுள்ளாராம். உடல் மேல் மிகுந்த அக்கறை கொண்ட பிரபாஸ் ஃபிட்னஸ் விசயத்தில் ரொம்ப ஃபெர்ஃபெக்ட் எனலாம்.

அப்படி அவரை பெர்ஃபெக்ட்டாக காட்ட மிகவும் உறுதுணையாக இருப்பவர் ஜிம் மாஸ்டர் லக்‌ஷ்மன் ரெட்டி.

இதனால் பிரபாஸ் அவருக்கு விலையுயர்ந்த Land Rover Range Rover காரை பரிசாக கொடுத்த அசத்தியுள்ளார். பிரபாஸ் உடன் லக்‌ஷ்மன் ரெட்டி மற்றும் மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள்.

வெற்றிமாறன் அடுத்தடுத்த படங்கள் – டாப் ஹீரோக்களுடன் செம்ம மாஸ் கூட்டணி..!

வெற்றிமாறன்…

பொல்லாதவன் படத்தின் மூலம் ஒரு இயக்குனராக அறிமுகமாகி இதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என மாபெரும் வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு தனது இயக்கத்தின் மூலம் தந்தார் வெற்றிமாறன்.

அதிலும் சென்ற வருடம் வெளிவந்த தனுஷின் அதிரவைக்கும் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தனுஷின் திரை வாழ்வில் மாபெரும் சாதனை செய்து வெற்றி பெற்றது.

மேலும் தற்போது சூரியை வைத்து ஒரு படமும், சூர்யாவை வைத்து வாடி வாசல் எனும் படமும் இயக்கவிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

இந்நிலையில் இப்படங்களுக்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்தடுத்த வெளியாகவுள்ள படங்களின் வரிசைப்படுத்தி பட்டியலிட்டு இருக்கிறோம்.

1. வாடிவாசல்

2. சூரியுடன் ஒரு படம்

3. விஜய்யுடன் ஒரு படம்

4. தனுஷ் வைத்து ஒரு படம்.

இந்தியன் 2 நடிகை காஜல் செய்த மாஸான சாதனை! குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை காஜல் அகர்வால்…

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் எடுக்கப்பட்டுவந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்திருந்தார்.

படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விபத்து, 3 பேர் உயிரிழப்பு ஆகியன பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் சில நாட்கள் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் கொரோனா ஊரடங்கு ஆகியவற்றால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த வரும் காஜல் கடைசியாக தெலுங்கில் Sita என்ற படத்தில் நடித்திருந்தார்.

Mosagallu படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் Aacharya படத்திலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் அவரை இன்ஸ்டாகிராமில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 15 மில்லியனாக அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் ஆரவ் திருமணம் முடிந்தது, இதோ போட்டோஷுட் புகைப்படங்கள்…!

ஆரவ் திருமணம் முடிந்தது…

திருட்டு கதையில் சிக்கிய ஜெயம் ரவியின் திரைப்படம்!! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

ஜெயம் ரவி…

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் முன்னணி நடிகர் ஜெயம் ரவி. இவர் தற்போது ஜன கண மன, பொன்னியின் செல்வன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

லட்சுமணன் இயக்கத்தில் இவர் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் பூமி. கொறோனா காரணமாக தற்போது இப்படத்தின் ரிலீஸ் சற்று தள்ளிப்போய் இருக்கிறது.

ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளிவந்து தமிழ் திரையுலக ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இப்படத்தின் ஒன் லைன் கதை என்வென்றால் ஒரு சைண்டிஸ்ட் விவசாயத்திற்காக தனது துறையில் இருந்து விலகி விவசாயத்தில் களமிறங்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என துணை இயக்குனர் ஒருவர் பூமி படத்தின் மீது திரையுலக எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் பூமி கதை என்னுடையது என புகர் அளித்த துணை இயக்குனரின் பக்கம் நியாயம் இருக்கிறது என்று தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சிலரால் கூறப்படுகிறது.

ஆனால் இது உண்மையா அல்லது பொய்யா என எழுத்தாளர் சங்கத்தில் இருந்து தெரிவிக்கும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாட்டு பாடுவதாக கூறி அட்டகாசம் செய்த பிரபல தொகுப்பாளினி பிரியங்கா! இதில ஏகப்பட்ட டுவிஸ்ட்! இறுதியில் வேற வெல்..!

பாட்டு பாடுவதாக கூறி அட்டகாசம் தொகுப்பாளினி பிரியங்கா…

கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் பல இடங்களில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை ரசிகர்களுக்கு அறிவிக்கும் விதமாக இசைக்கலைஞர்களுடன் பாடல் பாடியுள்ளார்.

இறுதியில் வழமை போல பிரியங்காவின் சேட்டையை காட்டியுள்ளார்.

குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

View this post on Instagram

 

#songugangu😎 #funnyguys Time ipo therinjuchu naa 7.30pm parunga naa! Parunga naa! @vijaytelevision

A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande) on

 

View this post on Instagram

 

#SonguGangu😎 @vijaytelevision Nanga veraaa maaari 😝😝 Start Music Season 2, every Sunday 7.30pm. Do not miss it makkaleeee😍

A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande) on

 

View this post on Instagram

 

Start Music Season 2 paatu, enjoy pannunga ketu! #SonguGangu 😎 @djblackchennai @djgowthamofficial @krishnaaajay @srisha04 😎

A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande) on

அச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய விஸ்வாசம் அனிகா, ரசிகர்களே குழம்பிய போட்டோ..!

நயன்தாரா போலவே மாறிய அனிகா…

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெரிதளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரே நடிகை நயன்தாரா.

இவர் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் தர்பார். மேலும் தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக முன்னணி நடிகைகளை போலவே சிலர் தங்களது முகங்களை மேக்கப் மூலம் வடிவமைத்து அதனை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வைரல் ஆகி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அஜித்துடன் இரு படங்கள் மகளாக நடித்து 15 வயது இளம் நடிகை அணிகா சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே தெரிகிறார் நடிகை அனிகா.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஒரு நிமிடம் இது நயன்தாரா தான் என்று நம்பிவிட்டனர்.

பிக்பாஸ் ஆரவ் திருமணம் முடிந்தது, கௌதம் மேனன் நாயகியை மணந்தார், இதோ புகைப்படங்கள்…

ஆரவ்….

பிக்பாஸ் முதல் சீசனில் மிகவும் பாப்புலராக பேசப்பட்டது ஓவியா மற்றும் ஆரவ் காதல் விவகாரம் தான். மருத்துவ முத்தம் என்பதும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விஷயமானது.

இந்நிலையில் இவர்கள் காதல் பிரேக் அப் ஆனது, அதுவும் பலருக்கும் தெரியும்.

அதை தொடர்ந்து ஓவியா பலமுறை தான் சிங்கிள் தான் என்பதை கூறிவிட்டார், ஆரவ்வும் சிங்கிள் என்பதை தெரிவித்துவிட்டார்.

சில தினங்களுக்கு முன் ஆரவ் கௌதம் மேனன் இயக்கி வரும் ஜோஸ்வா படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ராஹியை காதலித்து வருவதாகவும் இவர்களுக்குள் நிச்சயதார்த்தம் நடந்ததாகவுக் கூறப்பட்டது.

தற்போது இவர்களுக்கு திருமணமே நடந்து முடிந்துவிட்டது, இதி

All in All புதுமுகங்கள் நடித்திருக்கும் கோலிவுட் திரைப்படம் !

கநாதன்………

பொதுவாக ஒரு வருடத்தில் 200 சொச்சம் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும், அதில் வெறும் 20 படங்கள் மட்டுமே வெற்றி அடையும், அதில் இரண்டு படங்கள் நமக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் நடித்த படங்களாக இருக்கும்.

இந்த நிலையில், Triangle 369 மற்றும் பால்ராஜ் கிரியேஷன்ஸ் இணைத்து தயாரித்துள்ள திரைப்படம் கநாதன்.

இதில் நடித்த அனைவருமே புதுமுகங்கள், கதாநாயகனாக லீ போல்ட் நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருதி ஜெ .பிரகாஷ் அறிமுகமாகிறார்.

இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் அமைத்து கொடுத்துள்ளார் இசை அமைப்பாளர். தமிழ் நாடு, கேரளா,கர்நாடகா போன்ற மாநிலங்களில் படமாக்கப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாக தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீடு கோயம்புத்தூரில் மிக சிறப்பாக நடைபெற்றது என்பது கூடுதல் தகவல்

3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கச்சியாக நடித்த கேப்ரியலாவின் Latest Glamour Clicks !

கேப்ரில்லா…

2012 – இல் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் கேப்ரில்லா. 3 படத்தை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது அதில் கொஞ்சம் கவர்ச்சி கோடி இளம் நடிகைகள் அளவிற்கு மாறியுள்ளார் கேப்ரில்லா.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது வாய்ப்பில்லாத நிலையில் தொடர்பில் இருக்கும் சில டைரக்டர்களை சந்தித்து வருகிறார்.