கவர்ச்சியை தெறிக்க விடும் வாணி போஜன் : கண்டுக்காத தமிழ் சினிமா!!

வாணி போஜன்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் வாணி போஜன். அந்த சீரியலுக்கு பிறகு சில சீர்யல்களில் நடித்தவருக்கு சினிமா வாய்ப்புகள் வர தொடங்கினாலும், சொல்லும்படியான வாய்ப்புகள் எதுவும் வராததால் பொருமையாக இருந்தவர்,

இப்படி பொருத்து பொருத்து போனால், சினிமாவில் ஹீரோயினுக்கு பதிலாக அக்கா, அண்ணி வேடம் தான் வரும், என்பதை புரிந்துக் கொண்டவர், நடிகர் நித்தின் சத்யா தயாரிக்கும் படத்தில் நடிக்க ஓகே சொன்னார்.

’லாக்கப்’ என்ற தலைப்பில் அப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டிரைலர் வெளியானாலும், அதில் வாணி போஜனுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை என்பது நன்றாக தெரிகிறது.

மேலும், நித்தின் சத்யா தயாரித்த முதல் படமான ‘ஜருகண்டி’ மிகப்பெரிய தோல்விப் படம் என்பதால், ‘லாக்கப்’ படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்களாம்.

இதனால், படம் ரிலீஸாவதற்கு சில பல ஆண்டுகள் ஆகும் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. இதனால் அப்செட்டான வாணி போஜன், தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க, அதிலும் அவருக்கு இரண்டம் பட்சம் வேடம் தானாம்.

இது போக், வாணி போஜன் நடிக்கும் ‘ஓ மை கடவுளே’ என்ற தமிழ்ப் படத்திலும் அவர் இரண்டாவது நாயகியாக தான் நடிக்கிறாராம்.

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜன் வெள்ளித்திரையில் நயன்தாரா, போல வரவில்லை என்றாலும், ஒரு அமலா பால் போன்றாவது வந்துவிடலாம், என்று ஆசைப்பட்டார். ஆனால், அவருக்கு இதுவரை கிடைத்திருக்கும் சினிமா வாய்ப்புகள் அவரது ஆசையை நிராசையாக்கிவிடும் போன்றே இருக்கிறது.

இந்த நிலையில், எப்படியாவது பெரிய படங்களில் நடித்துவிட வேண்டும் என்பதற்காக வாணி போஜன், பல்வேறு வகையில் போட்டொ ஷூட் நடத்தி அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அப்படி இருந்தும் அவர் எதிர்ப்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து, க வர்ச்சியாக நடிக்கவும் தான் ரெடி, என்பதை அறிவிக்கும் விதமாக சில கவர்ச்சியான புகைப்படங்களை வாணி போஜன் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், புடவையில் வாணி போஜன் வெளியிட்ட சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், வாணி போஜனின் புகைப்படங்கள் வைரலாவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், அவரது இந்த கவர்ச்சியை தமிழ் சினிமா தான் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது.

கணவர் கொடுத்த கஷ்ட்டம் : மேடையில் கதறி அழுத சாயா சிங்!!

சாயா சிங்

2000 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘முன்னுடி’ (Munnudi) என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமான சாயா சிங், 2003 ஆம் ஆண்டு தனுஷின் ‘திருடா திருடி’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அப்படத்தை தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்தவர், ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததும் ஒரு பாடலுக்கு நடனம் ஆட செய்தார்.

2018 ஆம் ஆண்டு சீரியல் மற்றும் சினிமா நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சாயா சிங்கிற்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த சாயா சிங், குழந்தை வளர்ந்துவிட்டதால், மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

சீரியல் மற்றும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சாயா சிங், கடந்த ஆண்டு விஷாலின் ‘ஆக்‌ஷன்’ படத்தில் நடித்தார். தற்போது விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், சன் தொலைக்காட்சி குடும்ப விழா என்ற தலைப்பில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களி சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதன் இரண்டாம் பகுதி இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

இதில், கிருஷ்ணாவும், சாயா சிங்கும் விருது பெறுகிறார்கள். அப்போது, பேசிய கிருஷ்ணா, தான் தனது மனைவிக்கு ரொம்பவே கஷ்ட்டம் கொடுத்திருக்கிறேன், நிறைய முறை அழ கூட வைத்திருக்கிறேன். ஆனால், அனைத்தையும் பொருத்துக் கொண்டு அவர் என் முன்னேற்றத்திற்காக துணை நின்றார் என்று கூறுகிறார்.

உடனே சாயா சிங், வாழ்க்கையில் எனக்கு நல்ல துணை அமைய வேண்டும் என்று நினைத்தேன். நான் ந் இனைத்தது போலவே எனக்கு கிருஷ்ணா சிறந்த வாழ்க்கை துணையாக அமைந்திருக்கிறார், என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். அவர் அழுவதை பார்த்தவர்கள் அப்படியே திகைத்து போய் விட்டார்கள்.

நடிகை சாய சிங்கின் கணவர் கிருஷ்ணா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொடரில் பிரகாஷ் என்ற வேடத்தில் வாணி போஜனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் புதிய திருப்பம் : அவரது இறப்புக்கு இது தான் காரணமாம்!!

நடிகை ஸ்ரீதேவி

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி, கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் உறவினர் திருமணத்தில் பங்கேற்ற போது, தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவரது மரணம் குறித்து பல சர்ச்சையான தகவல்களும் வெளியாகின. மேலும், துபாயில் இருந்து அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதிலும் பல சிக்கல்கள் இருந்தது.

அனைத்தையும் சமாளித்து ஸ்ரீதேவியின் குடும்பத்தார் அவரது உடலை இந்தியா கொண்டு வந்த நிலையில், அவரது மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறியதால், ஸ்ரீதேவியின் குடும்பத்தார் மன வேதனை அடைந்தனர்.

பிறகு ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று பற்றி வெளியாகியிருக்கும் புத்தகத்தில், ஸ்ரீதேவிக்கு ரத்த அழுத்த நோய் இருந்ததாகவும், அதனால், அவர் இரண்டு மூன்று முறை வீட்டு பாத்ரூமில் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல், அவர் துபாய் ஓட்டல் அறை பாத்ரூமிலும் ரத்த அழுத்தத்தால் மயங்கி விழுந்து இறந்திருப்பார், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முடிவுற்ற ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக மீண்டும் சர்ச்சையான தகவல்கள் பரவ தொடங்கியிருக்கிறது.

பிக் பாஸ் ஜூலியை விடாது துரத்தும் சோகம் : புது வருடத்திலும் இப்படியா!!

பிக் பாஸ் ஜூலி

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியாளர்களில் மக்களிடம் அதிகம் கவனம் பெற்றவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போ ராட்டம் முலம் சோசியல் மீடியாவில் டிரெண்டான ஜூலிக்கு, பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததும், ஜல்லிக்கு போ ராட்டத்தைப் போலவே பொண்ணு பிக் பாஸ் போட்டியிலும் வெலுத்து வாங்கப் போகிறது, என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் ஜூலி செய்த சில காரியங்களால் அவர் மீது ரசிகர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டதோடு, அவரை வில்லியாகவே பார்த்தனர். அவரும் தொடர்ந்து தான் செய்யும் அனைத்து விஷயங்களாலும் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி வந்தார்.

இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஜூலிக்கு சினிமா வாய்ப்புகள் பல கிடைத்து பிஸியானாலும், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் அவரை அசிங்கப்படுத்தி நிகழ்ச்சியில் பாதியில் இருந்து வெளியேற்றுவதை தொடர்ந்து செய்தார்கள்.

இதனால், ஒரு கட்டத்தில் ஜூலி, பொது நிகழ்ச்சிகளில் தலை காட்டுவதை நிறுத்தியே விட்டார். இந்த நிலையில், புத்தாண்டுக்காக மலையாளத் திரைப்படம் ‘பிரேமம்’ படத்தின் பாடல் ஒன்றுக்கு நடித்து வீடியோ ஒன்றை ஜூலி வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் ஜூலியை தாறுமாறாக திட்டி கமெண்ட் போட்டு வர்கிறார்கள். சிலர் வாழ்த்தவும் செய்திருக்கிறார்கள்.

பிக் பாஸ் முதல் சீசன் முடிந்து சில ஆண்டுகள் ஆனாலும், ஜூலியை திட்டுவதையும், அசிங்கப்படுத்துவதையும் நிறுத்தாத ரசிகர்களால், புத்தாண்டு துவக்கத்திலேயே ஜூலி ரொம்ப அப்ஷட்டாகிவிட்டாராம்.

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வயதில் மூத்த பெண்ணுடன் 2வது திருமணம் : பிரபல நடிகரின் பக்கா பிளான்!!

விஷ்ணு விஷால்

வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பிரபலமான விஷ்ணு விஷாலுக்கும், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஆனா ஜுவாலா காட்டாவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைதளத்தில் திருமண செய்தியை இருவரும் வெளியிட்டு உள்ளனர்.

தமிழ் திரையுலகிற்கு வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில், விஷ்ணுவிஷால் கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இதற்கிடையில், ராட்சசன் படத்தில் ஹீரோயினாக நடித்த அமலாபால்வுடன் திருமணம் என்ற வதந்திகளும் வந்தன. ஆனால் அதனை மறுத்துவிட்டனர் இருவரும்.

ஆனால் இதற்கிடையில், பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் காதலித்து வருவதாக தகவல்களும் வெளியானது.

தகவல்கள் ஒருபுறம் கசிந்த வண்ணம் இருக்க, இவர்கள் இருவரும் புத்தாண்டு தினத்தன்று இவர்கள் கொண்டாடி மகிழ்ந்த சில புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்ப தாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த செய்திகள் வைரலாகி வருகிறது. மேலும், பலர் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள்.

அமலா பால் ஆடை படத்திற்கு பின் மீண்டும் ஆடையின்றி புகைப்படம்?

அமலா பால்

புத்தாண்டை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அமலா பால் அவரது செல்ல நாய்க்குட்டியுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆடை இல்லாதது போல் தோற்றம் அளிக்கவே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இயக்குநர் எ.எல்.விஜய்யுடன் திருமண வாழ்க்கை முறிந்த பிறகு நடிகை அமலாபால் எப்போதும் தனது நாய்க்குட்டியுடன்தான் வலம் வருவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டுக்குப் பிறகு நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமலா பால் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தவர்கள் ஷாக் ஆகிவிட்டனர். அந்த புகைப்படத்தில் அமலா பால் டிரெஸ் ஏதும் போடலையா என இன்ஸ்டாவில் கமெண்ட்டும் செய்து கலாய்த்து வருகின்றனர்.

முட்டிப் போட்டு தனது தொடையழகு தெரியும் படி நாய்க்குட்டியுடன் இருக்கும் அமலா பாலின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆடை அணியவில்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

அமலா பால் காதுகளில் தோடுகள் அழகாக இருப்பதாக சில ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். க்யூட் ஸ்மைலில் அழகாக இரு பொட்டும் வைத்து அம்சமாக இருக்கிறார் அமலா பால் என்றும் தெரிவித்துள்ளனர்.

அமலா பால் செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டவுடன், அந்த புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். அந்த ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் மீண்டும் சோலோ ஹீரோயினாக நடித்த அதோ அந்த பறவை போல படம் டிசம்பர் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், வெளியாகவில்லை. போல படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இம்மாதம் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது

நீச்சல் உடையில் விஜய் டிவி டிடி : ரசிகர்கள் அதிர்ச்சி!!

விஜய் டிவி டிடி

பிரபல தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொகுப்பாளர் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன‌.

பிரபல தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொகுப்பாளரான டிடி தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் தன்னுடைய கூடப்பிறந்தவர்களுடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகி வருகின்றன.

இவர் தன்னுடைய கூடப்பிறந்தவர்களுடன் நீச்சல் குளத்திலும், மால்கள் மற்றும் பல்வேறு இடங்களில் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்துள்ளனர்.

நயன்தாராவை சுற்றி பாதுகாப்பு வளையம் : போட்டது யார் தெரியுமா?

நயன்தாரா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையோடு வலம் வருகிறார்.

முன்னணி ஹீரோக்கள் படங்களின் முதல் தேர்வாக இருக்கும் நயன், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். நயனை ஹீரோயினாக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் சம்பளத்தை பேரம் பேசாம் வழங்குவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், வேல்ஸ் பிலிம்ஸ் நிருவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்காக நயன்தாராவுக்கு, தற்போது அவர் வாங்கும் சம்பளத்தை இரண்டு மடங்காக வழங்கியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, நயன்தாரா நடித்து வந்த ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கு காரணம், இரண்டு மடங்கு சம்பளம் வாங்கிய மூக்குத்தி அம்மன் படத்தை விரைவாக முடித்துக் கொடுத்துவிட்டு, அந்த பணத்தில் நெற்றிக்கண் படப்பிடிப்பு நடத்தலாம், என்று நயனும், சிவனும் முடிவு எடுத்திருக்கிறார்களாம்.

இந்த நிலையில், ‘நெற்றிக்கண்’ படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவன், நயன்தாராவை சுற்றி பாதுகாப்பு வளையம் ஒன்றை போட்டு வைத்திருந்தாராம். யாராவது நயனை குறுகுறுவென்று பார்த்தார்கள் என்றால், உடனே அவர்கள் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படுவதோடு, படத்தில் இருந்தே தூக்கப்பட்டு விடுவார்களாம்.

மேலும், படத்தில் நடிப்பவர்கள் மற்றும் பிற பணியில் இருப்பவர்கள், தங்களது வேலை முடிந்த பிறகு ஒரு நிமிடம் கூட அந்த இடத்தில் இருக்க கூடாதாம். அப்படி இருக்க விரும்பினால், அவர்களின் வேலையும் காலியாம்.

நயனை சுற்றி சிவன் போட்ட இந்த பா துகாப்பு வளையம் குறித்து நயனுக்கு எதுவும் தெரியாதாம். தெரிந்தால், நயன்தாராவை பார்ப்பவர்களை அப்புறப்படுத்தப்படுவது போல விக்னேஷ் சிவனும், நயன்தாரா வாழ்க்கையில் இருந்து அப்புறப் படுத்தப்படலாம், என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

நடிகர் வடிவேலு இணையதள தொடரில் நடிப்பது தொடர்பாக புத்தாண்டில் அறிவிப்பு!!

வடிவேலு….!

வசனத்தில் மட்டுமல்ல, தனது உடல் மொழியால், மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞன், நடிகர் வடிவேலு. மீம்ஸ்களில் மூழ்கி கிடக்கும், தற்போதைய தலைமுறையின் தலைவனாகவே வலம் வருகிறார், வடிவேலு. அனைத்து விதமான தருணங்களுக்கும், வடிவேலுவின் வசனங்கள் அப்படியே பொருந்தும்.

சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்கள் பெரிய அளவிற்கு சோபிக்கவில்லை. அதன் பின்னர், விஜய்யுடன் மெர்சல் படத்தில் கலக்கினார். மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் வடிவேலு கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில், தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இணையதள தொடர்கள் மீது வடிவேலுவின் கவனம் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் இணையதள தொடர் மக்கள் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

முன்னணி நட்சத்திரங்கள் இணையதள தொடரில் களமிறங்கியுள்ள நிலையில், வடிவேலுவும் இது தொடர்பாக புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இணையதள தொடரில் நடிப்பது தொடர்பாக புத்தாண்டில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவுடன் நடித்தால் சண்டை வரும் : ஜோதிகா!!

சூர்யா – ஜோதிகா…!

கார்த்தியுடன் தம்பி படத்தில் நடித்திருக்கும் ஜோதிகா, சூர்யாவுடன் நடித்தால் சண்டை வரும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தம்பி. இப்படம் குறித்து ஜோதிகா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சூர்யாவுடன் நடிப்பது தான் கஷ்டம். கார்த்தியுடன் நடிப்பது எளிது. சூர்யாவுடன் நடிக்கும்போது அடிக்கடி செல்ல சண்டைகள் வரும்.
அப்படி எதுவும் எனக்கோ, கார்த்திக்கோ கொடுத்தது இல்லை.

எனக்கு நடிக்க வாய்ப்பு இருக்கும் கதைகளாக தேர்வு செய்கிறேன். பழைய குறும்பு நடிப்புகளை குறைத்துக்கொள்கிறேன். எனக்கும் வயதாகிறது எல்லவா?

17 வயதிலேயே நடிக்க வந்து அடுத்த சில ஆண்டுகளில் சென்னையில் செட்டிலாகி விட்டேன். இந்த படத்தின்போது தான் தம்பியுடன் அதிக நேரம் செலவழித்தேன். நிறைய பேசினோம்.