தன் அடுத்தப்படத்தை இயக்க முன்னணி நடிகருக்கு அழைப்புவிடுத்த ரஜினிகாந்த் : ஆனால்?

ரஜினிகாந்த்…!

ரஜினிகாந்த் இவருடன் பணியாற்ற ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இயக்குனர்களின் கனவும் ரஜினியுடன் ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது தான்.

ஆனால், ரஜினியே தன் அடுத்தப்படத்தை இயக்க வாய்ப்பு அழைத்தும் ஒரு நடிகரால் அந்த படத்தை இயக்க முடியாமல் போனதாம்.

ஆம், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ப்ரித்விராஜ் நடிகர் மட்டுமின்றி இயக்குனரும் கூட, இவர் இயக்கிய லூசிஃபர் படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

அந்த படத்தின் படப்பிடிப்பின் போதே இவர் ரஜினியிடம் ஒரு கதை சொல்லியிருப்பார் போல, அந்த கதை ரஜினிக்கு பிடித்து போக, நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி ஓகே சொன்னாராம்.அந்த நேரத்தில் ப்ரித்விராஜ் வேறு ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்க, தன்னால், இந்த நேரத்தில் உங்கள் படத்தை இயக்க முடியாது என்று ஒரு நீண்ட மன்னிப்பு கடிதத்தை எழுதி அனுப்பியதாக அவரே கூறியுள்ளார்.

திருநங்கையாக நடிக்க வேண்டும், சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்!!

சூப்பர் ஸ்டார்…!

ரஜினி முதன் முறையாக எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் தான் தர்பார்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை மும்பையில் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் அந்த ட்ரைலர் லான்ச் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பல கேள்விகள் கேட்டனர்.

அதில் ஒருவர் நீங்கள் இதுவரை இல்லாமல் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, ரஜினி ‘திருநங்கையாக நடிக்கவேண்டும்’ என்று கூறி அதிரவைத்தார்

அஜித் நடிக்கும் வலிமை படத்தில் இணைந்த பிரபல நடிகை!!

அஜித் படத்தில்..!

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்கள். போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கிவிட்டன. ஏற்கனவே அஜித்தின் லுக் இது தான் என வெளியிடங்களில் எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் வந்தன.

ஆனால் படத்தில் உள்ள அஜித்தின் லுக் ரகசியம் காக்கப்படுகிறதாம். இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் யாமி கௌதம் நடிக்கிறாராம்.

மும்பையை சேர்ந்த இவர் கௌரவம் படத்தில் கடந்த 2013 ல் நடித்திருந்தார். ஹிந்தி, தெலுங்கு, மராத்தி என பல மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார்.

அவர்கள் பேசியது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது : பரத்!!

பரத்….!

காளிதாஸ் படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் பேசிய பரத், அவர்கள் பேசியது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது என்று கூறினார்.

பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் காளிதாஸ். படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் நன்றி அறிவிப்பு சந்திப்பு நடைபெற்றது. இதில் பரத் பேசியதாவது: “வெற்றி நாயகன் என்ற வார்த்தையை கேட்டு ரொம்பநாள் ஆச்சு. நேற்று மும்பையில் ஷூட்டிங்கில் இருக்கும் போது காளிதாஸ் சக்சஸ் மீட் இருக்கு என்று சொன்னார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

நான் சினிமாவிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. எனக்கும் சில படங்கள் தவறி இருக்கிறது. அது எல்லா ஹீரோக்களுக்கும் வரும் தான். ஆனால் என்றாவது ஒருநாள் நமக்கு ஒரு நல்லபடம் அமையும் என்று நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது.

சினிமா என்பது வணிகம் சார்ந்தது. நிறைய நல்லபடங்கள் நடித்திருந்தாலும் வணிக ரீதியான வெற்றி ரொம்ப முக்கியம். இப்படம் 2017- ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. சினிமாவில் நிறையபேர் இந்தப்படத்தை பார்த்து விட்டார்கள். நிறையபேர் படம் நல்லாருக்கு. ஆனால் இவர் நடித்து இருக்கிறார். இவருக்கு மார்க்கெட் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

அது எனக்கு நிறைய மன உளைச்சலைத் தந்தது. ஆனால் இந்த படத்தை முதலில் பார்த்த பத்திரிகையாளர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். இப்போ ஒரு நல்லபடம் எடுத்தால் மட்டும் போதாது. அதை வாங்கியவர்கள் எப்படி வெளியீட வேண்டும் என்பது மிக முக்கியம். அதை அபிஷேக் சார் சிறப்பாக செய்தார்.

அடுத்த வாரம் ஹீரோ, தம்பி, தபாங் 3 ஆகிய படங்கள் வெளிவருகிறது. அதோடு நாங்கள் நிற்க வேண்டும். இயக்குநர் ஸ்ரீசெந்தில் மிக நேர்த்தியாக உழைத்து இருக்கிறார். ஒரு இயக்குநராக அவர் நின்றுவிட்டார். தமிழ்சினிமாவில் ஒரு தரமான இயக்குநர் லிஸ்டில் அவர் இருப்பார். ரொம்ப வருசம் கழித்து எனக்கு ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது”என்றார்.

ஒரே நேரத்தில் 5 படங்கள் தயாரிக்கும் பா.ரஞ்சித்!!

பா.ரஞ்சித்…!

இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் 5 படங்களை ஒரே நேரத்தில் தயாரிப்பதாக அறிவித்திருக்கிறார்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் 5 தமிழ் படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர்கள் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, பா.ரஞ்சித்தின் குழுவில் இருந்த சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ் மற்றும் பிராங்க்ளின் ஆகியோர் இந்த 5 படங்களை இயக்க இருக்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனுஷ் படப்பிடிப்பில் தனது இரண்டாவது படத்தை முடித்த பின்னர் இது மாரி செல்வராஜின் மூன்றாவது படமாகவும், விஜய் சேதுபதி தயாரித்த மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்குப் பிறகு லெனின் பாரதியின் இரண்டாவது படமாகவும் இருக்கும். மேலும் இந்த படங்கள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படவுள்ளன.

பிரபல நடிகர் மீது ஈர்ப்பு : சுனைனா!!

சுனைனா…!

தமிழில் காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, வம்சம், மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்த சுனைனா, பிரபல நடிகர் மீது ஈர்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்.

சமீபகாலமாக நடிகைகள் தங்களை ஈர்த்த ஆண்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். பரதேசி, பேராண்மை, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சாய் தன்சிகா, நடிகர் சிம்பு மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாக கூறினார். அவரை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விகா தனக்கு நடிகர் விஜய் சேதுபதி மீது ஈர்ப்பு என கூறி அதிர வைத்தார்.

இந்நிலையில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை சுனைனா ஈர்ப்பு குறித்து தெரிவித்திருப்பது ரசிகர்களை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, வம்சம், மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்தவர் சுனைனா. ட்விட்டரில், ரசிகர் ஒருவர் சினிமாத்துறையில் உங்களின் முதல் ஈர்ப்பு யார்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுனைனா, பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது தான் முதலில் ஈர்ப்பு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கோய் மில் கயா படம் ரிலீஸான போது அந்தப் படம் தனது வாழ்க்கையில் மிகப் பெரிய பங்கு வகித்தது என்றும் கூறியுள்ளார்.

இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் : கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..!

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இது என்ன மாயம் படம் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இப்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இதற்கிடையே, இந்தியில் மைதான் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில் அஜய் தேவகன் மனைவியாக, நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன்.

இது இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு பகுதியை பேசும் சினிமா. இது, எந்த குறிப்பிட்ட மொழி மற்றும் பகுதியைச் சேர்ந்த படம் இல்லை.ஆனால், உலகம் அறிந்து கொள்ள வேண்டிய படம்.

சவாலான கேரக்டர்களை தேர்வு செய்தே நடித்து வருகிறேன். எனக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை இது’ என்று கூறியிருந்தார்.

படம் முழுக்க தல தளபதியுடன் வடிவேலு.. பழைய வைகை புயலாக திரும்பும் கைப்புள்ள!!

வைகை புயல்..!

நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின் செகண்ட் இன்னிங்சில் கத்தி சண்டை படத்தில் அடியெடுத்து வைத்தார். ஆனால் எதிர்பார்த்தபடி அந்த படம் அவ்வளவாக போகவில்லை.

சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் இவருடைய தொந்தரவால் படமே நின்றது. ஹாலிவுட்டிற்கு செல்லும் வடிவேலு என்ற செய்திகள் வந்தது அதுவும் நின்றது.அதன்பின் பெயர் வைக்காத ஜி.வி.பிரகாஷ் படம் உள்பட சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

இதுபோன்ற சின்னச்சின்ன படங்களில் மட்டும் தலையைக் காட்டிக்கொண்டு இருந்தால் முன்பு போல பெரிய ரவுண்ட் வர முடியாது என்று கணித்துவிட்டார் வடிவேலு. எனவே உச்ச நட்சத்திரமான விஜய், அஜித் படங்களில் நடிப்பதற்கு முடிவுசெய்து, அதற்கான வேலை செய்யும் நடவடிக்கைகளில் இறங்கி விட்டார் வடிவேலு.

ரஜினியுடன் நடிக்கும் தனுஷ்?

தனுஷ்..?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினியும்-தனுஷும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளது. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இது அவருக்கு 40-வது படமாகும், இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தனுஷின் 41-வது படத்தை மாரி செல்வராஜும், 42 வது படத்தை ராம்குமாரும் இயக்க உள்ளனர்.​ இந்தப் படங்களைத் தொடர்ந்து தனது 43-வது படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க தனுஷ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது, சிறுத்தை சிவா இயக்கத்தைத் தொடர்ந்து, ரஜினி அடுத்ததாக நடிக்கவுள்ள படம் தனுஷின் 43-வது படமாக இருக்கும் எனத் கூறப்படுகிறது. தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

நான் பலரின் கன்னங்களை பழுக்க வைத்திருக்கிறேன் : ராணி முகர்ஜி!!

ராணி முகர்ஜி..!

பாலிவுட் நடிகையான ராணி முகர்ஜி, தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்களை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார்.

‘ஹேராம்‘ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி. இவர் நடித்த “மர்தானி2” என்ற இந்தி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மும்பையில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமாவுக்கு வந்த புதிதில் தவறாக நடந்து கொண்டவர்களிடம் இருந்து எப்படி உங்களை பாதுகாத்து கொண்டீர்கள் என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ராணி முகர்ஜி, “என்னிடம் தவறாக நடந்து கொண்டவர்களை கன்னத்தில் அறைந்துள்ளேன். நான் துர்கா தேவியை பார்த்து வளர்ந்தவள். எனவே குழந்தையாக இருந்தபோதே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது அறைந்திருக்கிறேன். நான் பலரின் கன்னங்களை பழுக்க வைத்திருக்கிறேன். இதற்கான கணக்கு என்னிடம் இல்லை”.