அஜித்துக்கும், உங்களுக்கும் எப்போது ஆகாதா என்று கேட்ட தொகுப்பாளர்- தளபதி விஜய் கொடுத்த பதில்!!

அஜித்-விஜய்…!

அஜித்-விஜய் தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரங்கள். ரஜினியை அடுத்து பெரிதாக இவர்களது படங்கள் தான் அதிகம் கொண்டாடப்படும்.

அதிலும் பாக்ஸ் ஆபிஸில் படத்துக்கு படம் இவர்களது படம் உலகளவில் பேசப்படும்.ஒரு காலத்தில் தொகுப்பாளர்களில் கலக்கியவர் ஆனந்த கண்ணன்.

இவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் விஜய் மற்றும் அசினை பேட்டி எடுத்தது பற்றி பேசியிருந்தார்.

அப்போது விஜய்யிடம், உங்களுக்கும் அஜித்துக்கும் எப்போதும் ஆகாதா என்று கேட்டேன். அதற்கு விஜய் அவர்கள் மிகவும் கூலாக எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தலைமுடியை வெட்டிய சம்பவம் : தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்!!

ஷேன் நிகம்..!

ஒரு படத்திற்காக தலைமுடியை வளர்த்து வெட்டிய சம்பவத்தால் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் மலையாளர் நடிகர் ஷேன் நிகம்.

மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் சர்ச்சையில் சிக்கி உள்ளார். வெயில் என்ற படத்தில் ஷேன் நிகமுக்கு தலைமுடியை நீளமாக வளர்த்து நடிக்கும் கதாபாத்திரம். ஆனால் படப்பிடிப்பு முடியும் முன்பே தலைமுடியை வெட்டி தோற்றத்தையும் மாற்றியதால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.

இதையடுத்து மலையாள தயாரிப்பாளர் சங்கம் ஷேன் நிகம் சினிமாவில் நடிக்க தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷேன் நிகம் தயாரிப்பாளர்கள் மனநலம் பாதித்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் என்று சாடினார். ஷேன் நிகமை தமிழில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.

விக்ரம் படம் உள்ளிட்ட எந்த தென்னிந்திய மொழி படங்களிலும் ஷேன் நிகமை நடிக்க அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்தி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மலையாள திரைப்பட வர்த்தக சபை கடிதம் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் ஷேன் நிகம் தான் பேசியதை தவறாக சித்தரித்து விட்டனர் என்று முகநூல் பக்கத்தில் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டு கருத்து பதிவிட்டார்.

ஆனால் அவரது மன்னிப்பை ஏற்க முடியாது என்று மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளர் இடைவேளை பாபு தெரிவித்துள்ளார். ஷேன் நிகம் பிரச்சினை குறித்து வருகிற 22-ந்தேதி நடக்கும் நடிகர் சங்க கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பிக்பாஸ் காஜலை மிகவும் மனம் பாதிக்க வைத்த சோக சம்பவம்!!

காஜல் பசுபதி..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை காஜல் பசுபதி. இந்நிகழ்ச்சியின் அடுத்த சீசன்களை தொடர்ந்து பார்த்து தன் கருத்துக்களை கூறி வந்தார்.

இதனால் ரசிகர்கள் இவரை விடாது டிவிட்டரில் சாட் செய்து வந்தார்கள். அவரும் சலிக்காமல் அதற்கு பதிலளித்து வந்தார். பல விஷயங்கள் குறித்து ட்விட் போட்டு வரும் அவர் தற்போது ராஜஸ்தானை சேர்ந்த 7 வயது சிறுவன் ஓம்கார் பிரஜாபத்துக்கு ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறான்.

அவனின் சிகிச்சைக்கு ரூ 12 லட்சம் செலவாகும் என மருத்துவமனை கூறியுள்ளது. அந்த தாயின் கண் முன்னே மகன் செத்துக்கொண்டிருப்பது குறித்து மன வேதனையுடன் காஜல் குறிப்பிட்டுள்ளார்.

இனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வேறொரு தொகுப்பாளர் : யார் தெரியுமா?

பிக்பாஸ்..

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3 வருடங்களுக்கு முன் புதிதாக வந்தது. முதல் சீசனின் போது பல சர்ச்சைகள், பிரச்சனைகள் எழும்பின.

அதன்பின் 2,3 சீசன் எல்லாம் சுமூகமாக ஓடியது. புதிய வருடம் வர இருக்கும் நிலையில் அடுத்த சீசன் பற்றி மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.ஹிந்தியில் பிக்பாஸ் 13வது சீசன் நடந்து வருகிறது, நிகழ்ச்சிக்கு டிஆர்பி அதிகமாகியுள்ளதால் 5 வாரத்தை நீட்டிக்க நிகழ்ச்சி குழு முடிவு செய்துள்ளனர்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கானால் இந்த 5 வாரத்தை தொகுத்து வழங்க இயலாதாம்.இதனால் மீதம் உள்ள 5 வாரத்தை நடன இயக்குனர் ஃபரான் கான் தொகுத்து வழங்குவார் என்கின்றனர்.

அஜித்படத்தில் நடிக்கும் பிரபல நடிகை!!

அஜித்..!

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் வலிமை படத்தில் பிரபல நடிகை நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கிய இந்தப் படம், இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக். இதில், அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்.

இந்த படத்துக்கு ‘வலிமை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 10-ந் தேதி இதன் பூஜை நடைபெற்றது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. அத்துடன், அஜித்துடன் நடிப்பவர்கள் யார், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்ற விவரமும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வடிவேலு, நஸ்ரியா உள்ளிட்ட சிலர் இந்தப் படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. ஒருவழியாக நாளை படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார் போனி கபூர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், அஜித் ஜோடியாக யாமி கவுதம் நடிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. ‘கவுரவம்’ மற்றும் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். அடுத்த வருடம் (2020) தீபாவளிக்கு ‘வலிமை’ படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

சினிமாவே அதிர்ந்து பார்க்கும் அளவிற்கு அஜித் செய்த விஷயம் : மாஸ் காட்டும் ரசிகர்கள்!!

அஜித்…!

அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர். இவரது படங்கள் கடந்த சில வருடங்களாக பாக்ஸ் ஆபிஸில் அதிகம் சாதனை படைத்து வருகிறது.

இந்த வருடம் வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களே உதாரணம். இப்போது அவர் வலிமை படத்தின் படப்பிடிப்பை தொடங்கி அதில் பிஸியாக இருக்கிறார்.

படத்தின் அப்டேட் எதுவும் வரவில்லை, ஆனால் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் இன்று பெரிதாக உள்ளது. ஏனெனில் அவரது நடிப்பில் தமிழ் சினிமாவே வியந்து பார்த்த பில்லா படம் வெளியான நாள்.

இன்றோடு படம் வெளியாகி 12 வருடங்கள் ஆன நிலையில் ரசிகர்கள் #12YrsOfSovereignBILLA என டிரண்டிங்கில் இறங்கியுள்ளனர். படம் உருவான விதம், கதை, பின்னணி இசை, அஜித் ஸ்டைல், மாஸ் வசனங்கள் என ஒட்டுமொத்தமாக கொண்டாடும் அளவிற்கு படம் இருந்தது.தங்களுக்கு படத்தில் பிடித்ததை எல்லாம் ஷேர் செய்து வருகிறார்கள் தல ரசிகர்கள்

ஹீரோவாக நடிக்கின்றாரா அனிருத்?

அனிருத்…

இசையமைப்பாளர், பாடகர் என தற்போது கலக்கிவருபவர். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். ஒரு சில பாடல்களில் மட்டும் நடனம் ஆடுவதற்காக மட்டும் அவர் இதுவரை திரையில் தோன்றியிருக்கிறார்.

இந்நிலையில் அனிருத்திடம் கேள்வி கேட்ட ரசிகர் ஒருவர் ‘ஹீரோவாக நடிக்கும் ஐடியா எதுவும் இருக்கிறதா?’ என கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அனிருத் “இல்லை பிரதர். இப்போது செய்யும் வேலையை சந்தோசமாக செய்கிறேன்’ என கூறியுள்ளார் அவர்.

சூப்பர் ஹீரோ ஸ்டைலில் ‘ஹீரோ’ சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயன்..!

‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது ‘ஹீரோ’ படத்தில் நடித்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

மேலும் ஆக்சன் கிங் அர்ஜூன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு இந்திய திரைப்படத் தணிக்கைத்துறை U சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதன் முறைகயாக தளபதி 64 இசையை பற்றி மனம் திறந்து பேசிய அனிருத்!!

அனிருத்..!

நடிகர் விஜய் முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் தளபதி 64.

மேலும், தளபதி விஜய்யுடன் இரண்டாம் முறை இணைந்து இசையமைத்து வருகிறார் அனிருத்.

அனிருத் மற்றும் விஜய்யின் கத்தி காம்போ என்றதால் ரசிகர்கள் பெரும் ஆவளோடு இருக்கிறார்கள்.

இந்நிலையில் ட்விட்டரில் #AskAnirudh என்பதன் மூலம் “தளபதி 64 இசை எப்படி வந்துள்ளது” என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

இதக்ரு பதிலளித்த அனிருத் “நன்றாக வந்துள்ளது, நாங்களும் உற்சாகமாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

தோல்வியை கண்டு துவளக்கூடாது : ரகுல் பிரீத் சிங்!!

ரகுல் பிரீத் சிங்..

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் பிரீத் சிங், தோல்வியை கண்டு துவள கூடாது என தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:- “வாழ்க்கையில் தோல்விகள் வந்தால் துவள கூடாது. தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் முதல் படி என்பதை புரிந்து கொண்டால் இன்னும் பல வெற்றிகள் நம்மிடம் கைகுலுக்க வரும்.

நான் செய்ய வேண்டும் என்று நினைத்த வேலையை தன்னம்பிக்கையோடு ஆரம்பிப்பேன். என் மீது எனக்கு நம்பிக்கை அதிகம்.எல்லோருக்கும் இருக்க வேண்டிய அளவு தன்னம்பிக்கை தான் எனக்கும் இருக்கிறது. அந்த தன்னம்பிக்கையோடு தான் எனக்கு கொடுத்த வேலையை நான் ஆரம்பிக்கிறேன்.

ஆனால் அளவு கடந்த தன்னம்பிக்கை நல்லது இல்லை. நமக்கு என்ன சக்தி இருக்கிறது என்பது நமக்கு தெரியும். சில நேரங்களில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தோல்விகள் வந்து கவலையை கொடுக்கும்.

அதை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதனால் தோல்வி வந்தது. நாம் அதில் என்ன தவறு செய்தோம் என்று யோசித்தால் அதன்பிறகு வரும் வாய்ப்புகளை நன்றாக உபயோகித்துக் கொள்ளலாம்.நமக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்பதை தெரிவிப்பது தோல்விகள்தான்.

அந்த தோல்விகளில் இருந்து வெளியே வர நமது முழு பலத்தையும் அப்போது தான் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். வாழ்க்கையில் பாடங்கள் கற்றுக்கொள்ள தோல்விகள்தான் சரியான வழி.”