பழமொழி சொல்லவே பயமா இருக்கு : பாக்யராஜ்!!

பாக்யராஜ்..!

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய பாக்யராஜ், பழமொழி சொல்லவே பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று கலைவாணர் அரங்கில் துவங்கியது. 19ம் தேதி வரை நடக்கும் விழாவில், 55 நாடுகளை சேர்ந்த, 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவிற்கு, தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் நிதியுதவி தரப்பட்டுள்ளது. முதல் படங்களாக, கொரிய படமான ‘தி பாரசைட்’ மற்றும் ஜெர்மன் படமான ‘கண்டர்மான்’ படமும் திரையிடப்படுகின்றன.

முன்னதாக 17-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் பாக்யராஜ் பேசியதாவது:- அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என பிரார்த்திக்கிறேன். திரைப்படத்துறைக்கு தமிழக அரசு அதிக நிதியுதவி வழங்கி வருகிறது.

‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ என சொல்லி சம்மன் வாங்கியதால் இப்போது பழமொழி சொல்லவே பயமாக இருக்கிறது என்று கூறினார். விழாவில் முக்கிய நிகழ்வாக தனது 90-வது வயதிலும் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வரும் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த படத்தில் மதுஷாலினி!!

மதுஷாலினி..

அவன் இவன், தூங்காவனம், குடாச்சாரி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான மதுஷாலினி, தற்போது இயற்கைக்கு அப்பாற்பட்ட படத்தில் நடித்துள்ளார்.

அவன் இவன், தூங்காவனம், குடாச்சாரி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் மதுஷாலினி. இவர் தற்போது இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த ‘பஞ்சராக்ஷ்ரம்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார்.

இப்படத்தில் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோம், சனா அல்தாஃப் சீமான், ராஜா மற்றும் ஜீவா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

நடைமுறைக்கு மாறாக மற்றும் தற்செயலாக எனத் தொடங்கும் விஷயம் விரைவில் அனைவரையும் நம்பமுடியாத அதிர்ச்சியில் ஆழ்த்தி ஒரு பயங்கரமான கொந்தளிப்பாக மாறுகிறது.

கரி மோட்டார் ஸ்பீட்வேயில் 2 ரெட் டிராகன்கள், 2 ஏ.ஆர்.ஆர்.ஐ அலெக்சாஸ், 7 கோ ப்ரோஸ் மற்றும் 2 டி.ஜே.ஐ ட்ரோன்கள் போன்ற பல சிறப்பம்சங்களைப் பயன்படுத்தி 2 நாட்கள் நேரடியாக படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். ‘பஞ்சராக்ஷ்ரம்’ நேரடி கார் ஃபிளிப் ஸ்டண்ட் இடம்பெறும் முதல் இந்திய திரைப்படமாக இருக்கும்.

இப்படத்தின் இசை டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் உலகளவில் டிசம்பர் 27ம்தேதி வெளியாக இருக்கிறது.

புதிய லுக்கில் மாறிய பிக்பாஸ் தர்ஷன் : புகைப்படம் பார்த்து இவரா என அதிர்ந்த ரசிகர்கள்!!

தர்ஷன்..!

பிக்பாஸ் 3வது சீசனில் கலக்கியவர் தர்ஷன். நிகழ்ச்சி ஆரம்பித்தில் இருந்து ரசிகர்களுக்கு பிடித்தது போல் இருந்து தர்ஷன் 3வது சீசனை ஜெயிப்பார் என்று பலரும் எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால் அது நடக்கவில்லை, இறுதி நிகழ்ச்சிக்கு முன்னரே வெளியேற்றப்பட்டார். தற்போது இவர் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் தர்ஷன் புதிய லுக்கில் ஒரு புகைப்படம் வெளியிட்டு விரைவில் என பதிவு செய்துள்ளார். அது என்னவாக இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகை நிகிலா விமலுக்கு இப்படி ஒரு ஆசையா?

நிகிலா விமல்..!

ஒரு படத்திலாவது சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை இருப்பதாக நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார். வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் ’தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.

திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நிகிலா விமல் கூறியதாவது: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன்.

அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் ‘தம்பி’ படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். ஆனால் கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும் தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறியா? என்றார். அவர் நேர்மையாக கூறியதும் நான் ஒப்புக் கொண்டேன்.

இப்படத்தில் ஜோதிகாவுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்தார். பேச்சிலும் மிக மென்மையானவர். ஜோதிகாவும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பார். இது அவர்களின் குடும்ப வழக்கமாகவே இருக்கிறது.

என்னுடைய தோழி அபர்ணா ‘சூரரைப் போற்று’ படத்தில் நடிக்கிறார். அதை நினைத்து இருவரும் உற்சாகமானோம். சிறந்த நடிகருடன் நடிக்கும்போது இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கும். தங்களுடைய கதாப்பாத்திரத்திற்காக எப்படி மாறுகிறார்கள் என்பதை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகையால், சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் : நடிகை பரபரப்பு புகார்!!

மஞ்சரி பட்நிஸ்…

புதிய படங்களில் நடிக்க அழைத்த இயக்குனர்கள், தங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாக நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

தனுஸ்ரீதத்தா, கங்கனா ரணாவத், ஜீனத் அமன் உள்ளிட்ட இந்தி நடிகைகள் பலர் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளனர். தற்போது நடிகை மஞ்சரி பட்நிஸ் என்பவரும் பாலியல் புகார் கூறியுள்ளார்.

இவர் பரோட் ஹவுஸ், சினா இஜிகா நாம் ஹேய் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் சக்தி படத்தில் நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் தெலுங்கில் கடைசியாக சக்தி படத்தில் நடித்தேன். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. எனக்கும் நிறைய பட வாய்ப்புகள் வந்தன.

ஆனாலும் நான் நடிக்கவில்லை. என்னை புதிய படங்களில் நடிக்க அழைத்த இயக்குனர்கள் எல்லோருமே தங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர்.ஆசைக்கு இணங்கினால் தான் வாய்ப்பு தருவோம் என்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானேன்.

என் திறமை மீது நம்பிக்கை உள்ளது. படுக்கையை பகிர்ந்து வாய்ப்பு பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். சினிமா பின்னணி இல்லாமல் ஜெயிப்பது கஷ்டம்.”

இவ்வாறு அவர் கூறினார். மஞ்சரியை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்கள் யார் என்று தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ரஜினி சாரே சொல்லிட்டாரு! திருமணம் பற்றி வாய்திறந்த யோகிபாபு..

நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம் என சில வாரங்கள் முன்பு செய்திகள் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என அவர் விளக்கம் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று நடத்த இசை வெளியீட்டு விழாவில் யோகி பாபு பங்கேற்றார். மேடையில் அவர் பேசும்போது அவரிடம் திருமணம் எப்போது என VJ ரம்யா கேட்டார்.

அதற்கு பதில் அளித்த யோகி பாபு, “நாட்ல எவ்ளோ
பிரச்சனை இருக்கு. என் கல்யாணம் தான் முக்கியமா உங்களுக்கு.

சீக்கிரம் நடந்துடும். சாரே சொல்லிட்டாரு.. ‘யோகி பாபு உங்களுக்கு தை மாசம் கல்யாணம் நடந்துடும்’னு சொன்னார்” என யோகி பாபு தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகரை டேட்டிங் செய்ய இருக்கிறேன் : யார் என்று தெரிவித்த பிக்பாஸ் ரைசா!!

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து 3 சீசன்கள் வெற்றிகரமாக நடந்தது.

முதல் சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்டவர்கள் ஹரிஷ் கல்யாண்-ரைசா. இருவரும் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி நண்பர்களாக பழகி வந்தார்கள்.

இப்போது ரைசா தனது டுவிட்டர் பக்கத்தில், ஹரிஷ் கல்யாணை டேட்டிங் செய்ய விரும்புகிறேன், தமிழ்நாடு மக்களுக்காக என பதிவு செய்துள்ளார்

அவமானப்படுத்திய தயாரிப்பாளர்.. பல வருடங்கள் முன்பு நடந்த சம்பவத்தை கூறிய ரஜினிகாந்த்!!

ரஜினிகாந்த்….!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அவர் இன்று தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது தான் வாழ்க்கையில் மற்றும் சினிமாவில் சந்தித்த கஷ்டங்கள் பற்றி பேசியுள்ளார்.

நடிக்க துவங்கி நான்கைந்து படங்களே நடித்திருந்தார், 16 வயதினிலே வெளியாகி ஓடிக்கொண்டிருந்த சமயத்தில், ஒரு பிரபல தயாரிப்பாளர் இவரது வீட்டிற்கு வந்து இவரது கால்ஷீட் கேட்டுள்ளார். இவரும் ஓகே சொல்லி 1000 ருபாய் அட்வான்ஸ் கேட்டுள்ளார். இன்னும் இரண்டே நாளில் ஷூட்டிங், இப்போது பணம் இல்லை. நாளை கொடுத்து அனுப்புகிறேன் என தெரிவித்தாராம் அந்த தயாரிப்பாளர்.

ஆனால் மறுநாள் வந்த production மேனேஜரும் பணம் கொண்டு வரவில்லையாம். அதுபற்றி அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து கேட்டபோது நாளை ஷூட்டிங் வாங்க மேக்கப் போடும் முன்பு கொடுத்துவிடுகிறேன் என கூறினாராம் அவர். ஷூட்டிங் சென்றபோது அங்கு பணம் கொடுத்தால் தான் மேக்கப் போடுவேன் என கூறினேன்.

அதன்பிறகு அங்கு வந்த தயாரிப்பாளர் என்னை மோசமாக திட்டி உனக்கு படத்தில் கேரக்ட்டர் இல்லை, வெளியே போ என கூறினாராம். போகிறேன், கார் அனுப்புங்கள் என கேட்டதற்கு, ‘நீ நடந்துபோ’ என கூறிவிட்டாராம்.

அதன் பிறகு வெறிகொண்டு உழைத்து முன்னேறி கார் வாங்கி அதே ஸ்டுடியோவில் கொண்டு சென்று நிறுத்தியதாக ரஜினி கூறியுள்ளார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம் 58 படக்குழு!!

விக்ரம்….!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தின் தலைப்பு குறித்த வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் இப்படத்தில் ஏராளமான கெட்-அப்புகளில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘அமர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில், அது குறித்து விளக்கமளித்துள்ள படக்குழு, இன்னும் இந்த படத்திற்கு தலைப்பு முடிவு செய்யப்படவில்லை என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது

அந்த படத்திற்கு பிறகு இனி அப்படி நடிக்கக்கூடாது என முடிவு செய்துவிட்டேன்!!

ரஜினிகாந்த் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி பேசினார். அப்போது தான் முருகதாஸ் உடன் இணையவேண்டும் என்ற பேச்சுவார்த்தை சிவாஜி பட சமயத்திலேயே ஆரம்பித்தது எனகூறியுள்ளார்.

மேலும் லிங்கா படத்திற்கு பிறகு இனி இளமையாக நடிக்கவே கூடாது என முடிவெடுத்துவிட்டதாக கூறிய அவர், அதனால் தான் கபாலி, காலா போன்ற படங்களில் வயதான ரோலில் நடித்தேன் என்றார்.

மேலும் பேசிய அவர் பேட்ட படம் பார்த்துவிட்டு தான் முருகதாஸ் மறுபடியும் என்னை வந்து சந்தித்தார், தர்பார் படம் உருவானது என்று கூறியுள்ளார் அவர்.