தலைவர் 168 படத்தில் இணைந்த பிரபல நடிகை : அதிகாரபூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருப்பதை அடுக்கு இம்மாத இறுதியில் அவர் நடிக்கும் அடுத்த திரைப்படமான ‘தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது

சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டி இமான் இசையில் உருவாகவ்கிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் சூரி நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்ததை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளது.ஏற்கனவே ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த செய்தியை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘தலைவர் 168’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஆக்ஷன் ராணியாக இறங்கி அடிக்கும் திரிஷா : ட்ரெண்டான ராங்கி!!

திரிஷா….!

தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் கதாநாயகி திரிஷா 96 படத்தின் வெற்றியை தொடர்ந்து கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் “எங்கேயும் எப்போதும்” பட இயக்குனர் சரவணன் த்ரிஷாவை வைத்து “ராங்கி” என்ற படத்தை இயக்கி வருகிறார்.ஹீரோயினை மையப்படுத்தி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

சத்யா இசையமைத்துள்ள இப்படத்தில் திரிஷா Third Eye மீடியா நிறுவனத்தின் CEO வாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் டீசரை நேற்று லைக்கா நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதிரடி ஆக்ஷன் களத்தில் இறங்கி அடிக்கும் த்ரிஷாவை இந்த படத்தில் புது பரிணாமத்தில் பார்க்கமுடிகிறது.

ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த டீசர் தற்போது யூடியூபில் ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

ஆழ்வார் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த விஷயம் : நெகிழ்ச்சியான துணை இயக்குனர்!!

அஜித்..

தல அஜித் எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் அன்பாகவே பேசுவார் என பலர் இதற்கு முன்பு கூறியிருக்கின்றனர். அப்படி ஆழ்வார் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம் பற்றி துணை இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் கூறியுள்ளார்.

அஜித்திற்கு போட்டோகிராபி மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் மற்றவர்களை அஜித் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருப்பார்.

அவர் போட்டோவை கொடுக்கும்போது தான் நமக்கே தெரியவரும். போட்டோ பிரிண்ட் செய்து அதில் ‘With love, Ajith Kumar’ என கையெழுத்திட்டு கொடுப்பார் என அந்த துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

எந்த சுயநலமுமில்லாமல்… நடிகர் சூர்யா குறித்து தமிழக அமைச்சர் பெருமிதம்!!

‘காப்பான்’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தை ‘இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை குனீத் மோங்காவுடன் இணைந்து சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் சர்வம் தாளமயம் புகழ் அபர்ணா முரளி, கருணாஸ், மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேசன் சார்பாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார். இதுகுறித்து சூர்யா குறித்து அவரது ரசிகர் ஒருவர் பெருமையாக ட்வீட் செய்திருந்தார்.

அதனை பகிர்ந்து பதிலளித்த அமைச்சர் கே.பாண்டியராஜன், ”எந்த சுயநலமும் இல்லாமல் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 4000 ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்வி வரம் தந்த சூர்யவிற்கும், அகரம் பவுண்டேசனிற்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள்”என்று குறிப்பிட்டுள்ளார்.

தளபதி 64 படத்தில் இணைந்த பிரபுதேவா சகோதரர்!!

’தளபதி 64’ படத்தில் பிரபுதேவா சகோதரர்…!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அவ்வப்போது சில நட்சத்திரங்கள் இணைந்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தில் ஒரு சில நட்சத்திரங்கள் இணைந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனரும் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா சகோதரர் நாகேந்திர பிரசாத், ’தளபதி 64’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

ஏற்கனவே நாகேந்திர பிரசாத் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படமான ’கில்லி’ படத்தில் விஜய்யுடன் நடித்திருந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விஜய் படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே விஜய்யின் நெருங்கிய நண்பர்களான சாந்தனு, சஞ்சீவ் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு நண்பரான பிரபுதேவாவின் சகோதரரும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை, டெல்லி மீண்டும் சென்னை என மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக படக்குழுவினர் இன்னும் ஒரு சில நாட்களில் கர்நாடகா கிளம்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த தனுஷ் பட நடிகை!!

விஜய் சேதுபதியுடன் ஜோடி…?

தனுஷுடன் நடித்த பிரபல நடிகை தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
விஜய்சேதுபதி இந்த ஆண்டு முதல்முறையாக மார்க்கோனி மத்தாய் என்ற படம் மூலமாக மலையாளத்தில் அடியெடுத்து வைத்தார்.

அதேபோல் மலையாள நடிகை மஞ்சுவாரியர் அசுரன் படம் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தார். இப்போது இவர்கள் இருவரும் இணைந்து தமிழ், மலையாளம் மொழிகளிலும் உருவாகும் படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் பிஜூமேனன்.

ஆர்.ஜே.ஷான் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே மஞ்சு வாரியர் நடித்த சாய்ராபானு என்ற படத்தின் கதாசிரியர்களில் ஒருவராக பணியாற்றியவர். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மஞ்சு வாரியர் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.

மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் கவின் : வாழ்த்தும் ரசிகர்கள்!!

கவின்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து நட்புனா என்னனு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்ட அவர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் Behindwoods Gold Medal விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் கவினுக்கு Most popular person on television Bigg Boss 3 என்ற விருது நடிகர் ரோபோ சங்கர் கையால் வழங்கப்பட்டது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விருதின் ஃபோட்டோவை போஸ்ட் செய்துள்ளார். அதில், ஸ்கூல்ல கூட சில்வர், புரோன்ஸ் தான் வாங்கிருக்கேன். நன்றி Behindwoods என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜித் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்!!

அஜித்.!

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அஜித். ’வலிமை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பட பூஜை மட்டுமே முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் தேர்வு என மும்முரமாக பணிகள் தொடங்கப்பட்டன.

அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிவடைந்துவிட்டாலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. ‘வலிமை’ படப்பிடிப்பு எந்த தேதியில் தொடக்கம் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும், படக்குழு எதையுமே உறுதிப்படுத்தவில்லை.

தற்போது முதன்முறையாக ‘வலிமை’ படம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார் போனி கபூர். சென்னையில் ஒரு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு போனி கபூர் பேசும் போது, “’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13-ந் தேதி முதல் தொடங்கவுள்ளது. அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும். அஜித் இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ‘வலிமை’ படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ பட வெளியீட்டின் போது அளித்த பேட்டிகளில், அஜித் – எச்.வினோத் கூட்டணியின் அடுத்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவித்து வந்தார் போனி கபூர். ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிவிட்டதால், தற்போது ‘வலிமை’ வெளியீட்டை தீபாவளிக்கு மாற்றியுள்ளார்.

விஜய் அழைப்புக்காக காத்திருக்கிறேன் : முன்னணி நடிகர்!!

விஜய் அழைப்புக்காக காத்திருக்கிறேன்..!

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரம். அவருக்கு முன்னணி நடிகர்களே பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

அப்படி அவரது தீவிர ரசிகரான நடிகர் சாந்தனுவுக்கு விஜய் தளபதி64 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அதுபோல எப்போது நீங்களும் நடிக்கபோகிறீர்கள் என நடிகர் சிபிராஜிடம் பலரும் கேட்டு வருகின்றனர். அவரும் விஜய்யின் தீவிர ரசிகர் தான்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ‘காத்திருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

ரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது : முருகதாஸ்!!

முருகதாஸ்..!

தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் முருகதாஸ், ரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் இயக்குனர் முருகதாஸ் பேசியதாவது:

நான் ரஜினியின் சீனியர் ஃபேன்.எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் அவருக்கும் ரஜினிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எம்ஜிஆர், ரஜினி வித்தியாசமானவர்கள்.

தமிழ், இந்தி என அனைத்து நடிகர்களிடமும் ரஜினியின் சாயல் இருக்கும். தலைவர் ரசிகர்கள், என் ரசிகர்கள் கிடையாது. ஏனென்றால் நானே ரஜினி ரசிகன்.

நிலவை காட்டி சாப்பு ஊட்டுவார்கள். ஆனால், ரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது என தெரிவித்தார்.