நடிகர் விஷால் அடுத்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கியவர் அவர்.
இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிகர் ஆர்யா தான் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவன் இவன் படத்தில் ஒன்றாக நடித்த அவர்கள் அதன் பிறகு தற்போது மீண்டும் கூட்டணி சேர்கின்றனர்.
படத்தில் மோதவுள்ள இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் மிக நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகையான சன்னி லியோன், அடுத்ததாக கோர் எனும் படத்தில் சூப்பர் வுமன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
ஆபாச படங்களில் நடித்து கொண்டிருந்த சன்னி லியோன் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். இந்தியில் தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் வரை நடித்துவிட்டார். தான் நடிக்கும் படத்தின் கதைக்காக தனது கணவர் டேனியல் வெப்பருடன் கைகோர்த்தார். இருவரும் மணிக்கணக்கில் ஒன்றாக அமர்ந்து கலந்துபேசி கதையை முடிவு செய்தனர்.
படத்துக்கு கோர் என பெயரிடப்பட்ட நிலையில் அதற்கான வீடியோ ஒன்றை சன்னி வெளியிட்டிருக்கிறார். அதில், ‘கோர் இந்த கிரகத்தை சேர்ந்தவள் இல்லை. ஆனாலும் தீய சக்திகளிடமிருந்து உலகை காக்க தயாராக இருக்கிறாள்’ என தெரிவித்துள்ளார்.
கோர் கதாபாத்திரம் பற்றி சன்னி லியோன் கூறும்போது, ‘சூப்பர்வுமன் கதையை நானும் எனது கணவர் டேனியல் வெப்பரும் இணைந்து உருவாக்கி னோம். அந்த வகையில் கோர் கதாபாத்திரம் தீய சக்திகளை அழிக்க வருகிறது’ என்றார்.
கேரள மாநிலம் பரவூர் பகுதியை சேர்ந்த மம்முட்டியின் ரசிகர் ஒருவர் பட ரிலீசுக்காக திருமண தேதியை மாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.கேரள மாநிலம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் மேமன் சுரேஷ்.
இவர் நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகர். மம்முட்டி படம் வெளியாகும் போதெல்லாம் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது இவரது வழக்கம். மேமன் சுரேசுக்கு வருகிற 21-ந் தேதி திருமணம் செய்ய அவரது வீட்டாரால் தேதி குறிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் மம்முட்டி நடிப்பில் மாமாங்கம் என்ற புதிய திரைப்படம். மேமன் சுரேசுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியில் வெளியாக இருந்தது.
தன்னுடைய திருமண நாளிலேயே தனக்கு பிடித்த நடிகரின் திரைப்படமும் வெளியாக உள்ளது என்பதால் தனது திருமணத்தை மேமன் சுரேஷ் கடந்த மாதம் 30-ந் தேதிக்கு மாற்றி வைத்திருக்கிறார்.
மேமன் சுரேசுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி அவருக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் நல்ல முறையில் திருமணம் நடைபெற்றது. புது மனைவியுடன் தனக்கு பிடித்த மம்முட்டியின் திரைப்படத்தை வருகிற 21-ந்தேதி முதல் நாளே பார்க்கலாம் என்று சந்தோஷமாக காத்திருக்கிறார்.
‘ஆதித்ய வர்மா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது தான் நடிகன் என்பதையே மறந்துவிட்டதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.’ஆதித்ய வர்மா’ படத்தின் மலையாள பதிப்புக்கான விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று கேரளாவில் நடைபெற்றது.
இதில் விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் பிரியா ஆனந்த் மூவரும் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விக்ரம் பேசும்போது, ” ‘ஆதித்ய வர்மா’ எனக்கு படம் தயாரிக்கும், இயக்கும் அனுபவத்தை தந்தது.
சில நாட்கள் இதன் படப்பிடிப்பில் நான் நடிகன் என்பதையே மறந்துவிடுவேன். துருவ்வின் டப்ஸ்மாஷ் வீடியோவை பார்த்துவிட்டு முகேஷ்தான் எங்களை அணுகினார். துருவ் வயதில் சிறியவர் என்பதால் என் மனைவிதான் சற்று யோசித்தார். ஆனால் படத்தை பார்த்த பின் அவர் நடிகனாக ஆரம்பிக்க இதுவே சரியான படம் என்று நினைத்தேன்.
படத்தின் கதை, துருவ்வின் நடிப்பு குறித்து நான் நம்பிக்கையாக இருக்கிறேன். ஆனால் தன் மகன் பள்ளிக்கூடப் போட்டியில் மேடையேறும்போது ஒரு தந்தைக்கு எப்படிப் படபடப்பாக இருக்குமோ அப்படி எனக்கு இருக்கிறது” என்று விக்ரம் பேசினார். ‘ஆதித்ய வர்மா’ படத்திற்கு தணிக்கை குழு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 21-ந் தேதி திரைக்கு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தில் ஆண்ட்ரியாவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்திருக்கிறார்.
பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் தற்போது ‘தளபதி 64’ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகை ஆண்ட்ரியா இணைந்திருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. தற்போது இப்படக்குழுவுடன் பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகை ரம்யா இணைந்திருக்கிறார்.
விஜய்யின் ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யாவிற்கு, தற்போது விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் இணையத்தில் லீக்காகி இருக்கிறது.கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. 23 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார். காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர், வித்யுத் ஜம்வால், டெல்லி கணேஷ் என ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
முழு வீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடந்த 6-ந் தேதி ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் பாபி சிம்ஹா தன்னுடைய பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதன்மூலம், பாபி சிம்ஹாவும் இந்தப் படத்தில் நடிப்பது உறுதியானது.
அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியாத நிலையில், போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ‘இந்தியன்’ முதல் பாகத்தில் நெடுமுடி வேணு போலீசாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 3வது சீசனில் பலரின் கவனத்தை ஈர்த்தவர் தர்ஷன். தனது விளையாட்டில் சரியாக இருந்த அவர் டைட்டில் பெறவில்லை என்ற வருத்தமும் சிலருக்கு இருக்கிறது.
நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து தர்ஷன் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்த நேரத்தில் தான் அவரது காதலி என்று கூறப்படும் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டா போஸ்டில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், நான் அதிகமாக கேட்பதாக கேட்கவில்லை என்று இப்போது புரிகிறது, ஆனால் தவறான நபரிடம் கேட்டுவிட்டேன். யாராவது விலகி செல்ல நினைத்தால் விட்டுவிடுங்கள், காலம் அவர்களுக்கு பதில் சொல்லும் என பதிவு செய்துள்ளார்.
தொகுப்பாளினிகளில் கடந்த 10 வருடங்களை தாண்டி இப்போதும் கலக்கி வருபவர் டிடி. இவர் நிகழ்ச்சி என்றால் மிகவும் கலகலப்பாக இருக்கும். அடுத்து இவர் என்ன நிகழ்ச்சி தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அண்மையில் இதுனால் வரையிலான தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
பேட்டியில் அவரிடம் இனி அவரை மட்டும் பேட்டி எடுக்கவே கூடாது என்று நீங்கள் நினைப்பது யார் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் இனி மிஷ்கின் அவர்களை எடுக்க கூடாது என்று நினைக்கிறேன். அவரை ஒருமுறை பேட்டி எடுக்க கஷ்டப்பட்டேன். சாதாரணமாக நன்றாக பேசுகிறார், கேள்வி கேட்கும்போது மிகவும் சீரியஸாக பார்ப்பார், எனக்கு என்ன செய்வது என்றே தெரியாது.
இதன் காரணமாக பேட்டி எடுக்கக்கூடாது என்ற லிஸ்டில் வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்
தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் தென்னவன். இவர் சில சீரியல்களிலும் சில ரோல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்தி வந்துள்ளது. இது சினிமா துறையினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருடத்தின் சிறந்த படம், நடிகர் என பல விஷயங்களுக்காக கருத்துக் கணிப்புகள் நடந்து வருகின்றன. விநியோகஸ்தர்களில் எப்போதும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிகள் கொடுப்பவர் திருப்பூர் சுப்பிரமணியம்.
அண்மையில் இவர் கொடுத்த பேட்டியில் 2019ம் ஆண்டின் லாபம் கொடுத்த படங்கள் என்னென்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்,
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, பேட்ட என 3 படங்களின் பெயர்களை கூறியுள்ளார்.