உலகையே அதிரவைத்த ஜோக்கர் படத்தின் வசூல், பிரமாண்ட சாதனை!!

ஜோக்கர்

 உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம் ஜோக்கர் . இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.

தற்போது ஆர் ரேட்டட் படங்களில் உலகிலேயே அதிகம் வசூல் செய்த படமாக ஜோக்கர் அமைந்துள்ளது, இப்படம் உலகம் முழுவதும் 900 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

இவை இந்திய மதிப்பில் சுமார் ரூ 6500 கோடியை தாண்டும், மேலும், 1000 மில்லியன் டாலரை ஜோக்கர் வசூல் செய்யுமா என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

லொஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டங்களை கொண்டவர்களில் லொஸ்லியாவும் ஒருவர். இவர் கவினுடன் காதலில் விழ்ந்து கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் லொஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றத தற்போது என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்து வந்தது.

தற்போது இவர் கொழும்பு விமான நிலையத்தில் ரசிகர் ஒருவருடம் எடுத்த புகைப்படம் இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.இதன் மூலம் லொஸ்லியா மீண்டும் இந்தியா வருவதாக தகவல் பரவி வருகிறது.

அஜித் ஏன் பேட்டியே கொடுப்பதில்லை? இதுதான் உண்மைக் காரணம்!!

 

மற்ற நடிகர்களை போல இல்லாமல் நடிகர் அஜித் மீடியாவை சந்திப்பதையோ   பேட்டி கொடுப்பதையோ நிறுத்திவிட்டார்.
அதற்கான காரணம் என்ன என்பதை விஜய் டிவி கோபிநாத்திடம் ஒருமுறை கூறினாராம் அஜித்.

“ஆரம்பத்தில் நடிக்க வந்தபோது எனக்கு தமிழ் சரியாக தெரியாது. பேட்டி கொடுக்கும்போது ‘தமிழ் நடிகருக்கு தமிழ் தெரியாதா?’ என விமர்சித்தார்கள். அதன் பிறகு ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தேன், ‘தமிழ் நடிகர்.. பெரிய இத்தாட்டம்.. இங்கிலிஷ்ல தான் பேசுவாரு!’ என்று விமர்சித்தார்கள்.

அதன் பிறகு பேட்டி கொடுப்பதையே தவிர்த்தேன். அதற்கும் ‘பேச கூட மாட்டேங்குறாரு.’ என விமர்சித்தார்கள்.

நான் எதார்த்தமாக பேசிய வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் இருந்தால் அதை வேறு விதமாக செய்தி போட செய்தார்கள். அதனால் தான் சைலண்டாக இருக்க ஆரம்பித்துவிட்டேன்” என அஜித் கூறினாராம்.

அட்லீ வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் நன்றாக இருக்கும் : வெளுத்து வாங்கிய பிரபலம்!!

அட்லீ

 அட்லீ இளம் இயக்குனராக சினிமாவில் நுழைந்து இரண்டாவது படத்திலேயே தளபதியை இயக்கும் வாய்ப்பு பெற்றவர்.

தெறி என்ற வெற்றி படத்தை தொடர்ந்து மெர்சல், பிகில் என மூன்று படங்கள் இயக்கிவிட்டார்.

பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் எனக்கு அண்ணன், அவருக்காக நான் தான் நன்றாக செய்வேன் என அப்படி ஒரு நல்ல முறையில் பேசியிருந்தார்.ஆனால் பல இடங்களில் அவர் இயக்கிய பிகில் படத்திற்கு மோசமான விமர்சனங்கள் தான் வருகிறது.

பிரபல பத்திரிக்கையாளரான பனிமலர், அட்லீ படம் இயக்கும் ஸ்டைல் குறித்து அதிகம் பேசுவதால் அவர் வெறுப்பை சம்பாதிக்கிறார் என பதிவு செய்துள்ளார்.

சிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கிய நஸ்ரியா!!

நஸ்ரியா

தமிழில் நேரம், ராஜாராணி, நையாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா, தற்போது சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. மலையாள படங்களில் சிறுவயது முதல் நடித்து பிரபலமானவர். அதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார் நஸ்ரியா. மேலும் நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சில படங்களில் மட்டும் நஸ்ரியா நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதனை தொடர்ந்து அவர் சினிமாவை விட்டு முற்றிலும் விலகினார். இந்நிலையில் தற்போது நடிகை நஸ்ரியா தனது கணவருடன் இணைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

நஸ்ரியா புகை பிடிக்கும் போஸ்டர் தற்போது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. டிரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் நடிகை நஸ்ரியா சிகரெட் அடித்து கொண்டு ரவுடி போல போஸ் கொடுத்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

தாடி பாலாஜி முதல் மனைவி தான் பிரச்சனைக்கு காரணம் : உண்மையை கூறிய நித்யா!!

தாடி பாலாஜி

நாங்கள் பிரிய தாடி பாலாஜி முதல் மனைவி தான் காரணம்! உண்மையை கூறிய நித்யாஅவர்களது விவாகரத்து வழக்கு தற்போது நடந்துவருகிறது.

பிக்பாஸ் வீட்டில் அவர்களை சேர்த்து வைக்க நடந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடைசியில் சேர்ந்துவிட்டார்கள் என காட்டினாலும் தற்போதும் பிரித்து தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் பாலாஜியின் முதல் மனைவி தீபாவின் தற்போதைய கணவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பாலாஜியை தீபா வீட்டுக்கு வரவேண்டாம் என எச்சரித்துள்ளார்.

இது பற்றி பேட்டி அளித்துள்ள நித்யா, “நாங்கள் பிரிய பாலாஜியின் முதல் மனைவி தான் காரணம். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

அவருக்கு பிறந்தநாளுக்கு சைக்கிள் வாங்கி கொடுப்பதாக சொன்னார் பாலாஜி. அதில் ஆரம்பித்தது தான் எங்களுக்குள் பிரச்சனை” என நித்யா தெரிவித்துள்ளார்.

இதயத்தில் பெரிய ஓட்டை : அதிர்ச்சி தகவலை கூறிய பிரபல நடிகை!!

நடிகை ஐஸ்வர்யா சகுஜா

தொலைக்காட்சிகளில் அதிகம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா சகுஜா. இவர் தற்போது Ujda Chaman என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மாடலிங் மூலம் டிவிக்குள் வந்த அவர் விஜேவாக பணியாற்றி, அதன் பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கி அதிகம் பாப்புலர் ஆனார்.

ஐஸ்வர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பிறக்கும்போதே இதயத்தில் ஓட்டையுடன் பிறந்தேன் என ஷாக்கிங்கான தகவலை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி facial paralysis, டிபி உள்ளிட்ட நோய்களால் தொடந்து பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வளவு பிரச்சனைகளை தாண்டி தான் சினிமாவில் அவர் நடிகையாக இந்த இளம் வயதில் வளர்ந்திருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் என்ன தான் உங்களுக்கு கிடைச்சது? எதுக்கு போனீங்க? சேரனின் பகிரங்கமான பதில்!!

சேரனின் பகிரங்கமான பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் இயக்குனர் சேரன். இந்நிகழ்ச்சியால் அவரின் புகழ் இன்னும் கூடியது எனலாம்.

சேரப்பா சேர்ப்பா என ரசிகர்கள் பலரும் அவரை அழைக்கத்தொடங்கினார்கள். அவருக்கு ஒரு சேரன் ஆர்மி என ரசிகர்கள் படையே உருவானது.

இந்நிகழ்ச்சியால் சேரன் கொஞ்சம் புத்தொளி பெற்றார் என்றே தெரிகிறது. தற்போது படங்களிலும் இணைந்துள்ளார்.

அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். இதில் அவரிடம் பிக்பாஸ் வீட்டில் என்ன தான் உங்களுக்கு கிடைச்சது? எதுக்கு போனீங்க? என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் சும்மா வீட்டில் உட்கார்ந்திருந்தால் யாராவது வந்து சோறு போடப்போறாங்களா? கடந்த நான்கு வருடங்களால் நான் படம் பண்ண முடியவில்லை. சூழலும் மோசமாக இருந்தது. பிரச்சனைகளும் இருந்தது.

ஆனால் என் பிரச்சனையை யாரும் வந்து கேட்கவில்லை? படமும் கொடுக்கவில்லை. ஏன் சேரன் படம் பண்ணவில்லை? அவருக்கு என்னாச்சு? என கேட்டு படம் கொடுத்தார்களா யாராவது என கூறியுள்ளார்.

நடிகர் அஜித்தின் முதல் காதலி யார் தெரியுமா?

நடிகர் அஜித்தின் முதல் காதலி

கோலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் அஜித்-ஷாலினி தம்பதியினர் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெண்களின் மீது அதிக மரியாதை வைத்திருக்கும் அஜித், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் செய்யும் வேலைகள் மீது நாம் காட்ட வேண்டிய அக்கறை குறித்து அவ்வப்போது பகிர்ந்துகொள்வார்.

இந்த அன்புதான் அஜித்தை ஷாலினி காதலிக்க அச்சாணியாக இருந்துள்ளது. அஜித்தின் முதல் காதலி பைக். இரண்டாவது காதலி ஷாலினி. இதனை அவரே பலமுறை கூறியிருக்கிறார்.

திருமணத்திற்கு முன்னர் அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர் அஜித், ஆனால் அந்த புகை தனக்கு பகையாக இருக்கிறது என ஷாலினி கூறியதையடுத்து அதனை கைவிட்டார் இன்றுவரை அதனை தொடவில்லை.

அமர்க்களம் திரைப்படத்தின் போது ஒன்றாக நடித்த இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.அத்திரைப்படத்தின் ஒரு காட்சியில், ஷாலியின் கையில் அஜித் கத்தியால் கிழித்துள்ளார்.

தன்னால் இப்படி ஷாலினுக்கு நடந்துவிட்டதே என்று அஜித் பரபரப்பாக இருக்க, எவ்வித அலட்டலும் இல்லாமல், பரவாயில்லை என்று கூறி நிதானமாக இருந்துள்ளார் ஷாலினி.

ஷாலினியின் அந்த நிதானம் அஜித்திற்கு பிடித்துவிட, அப்போதே அவரது இதயத்திற்குள் ஷாலினி குடிகொள்ள ஆரம்பித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் போதே இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். இதுவரை சந்தித்த பெண்களிடம் காண முடியாத தீர்க்கம் ஷாலினின் கண்ணுக்குள்ளும், செயலுக்குள்ளும் ஒளிந்திருப்பதை உணர்ந்த அஜித், எனக்கான தேடல் இவள்தான் என்பதை அறிந்து, நேராக ஷாலினியிடம் சென்று உன்னை கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதே ஆசை, ஷாலினியின் மனதுக்குள்ளும் இருந்ததால், காதலுக்கு பச்சைகொடி காட்டியதால் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.ஷாலினி கிறிஸ்துவர், அஜித் பிராமின், இது அவர்களது காதலுக்கும், வாழ்வியலுக்கும் ஓர் தடையாக இருந்திடவில்லை.

காரணம் யாரும், மற்றொருவருக்காக மதம் மாறவில்லை. மதம் என்பது உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் வளர்வதற்காக தானே தவிர, காதலுக்கு தடையாய் அமைவதற்கு அல்ல.

கணவன்- மனைவி ஆகிய இருவரும், ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து, தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொண்டாலே இல்லறம் இனிக்கும் என்கிறார் அஜித்.

படப்பிடிப்பின்போது வெளியூர்களுக்கு சென்றால் தனது மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு எப்போதும் i Love You என சொல்லிக்கொண்டே இருப்பார். தனது வாழ்க்கையின் தடைகளை உடைத்து தான் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதற்கு ஷாலினிதான் பக்கபலமாக இருந்துள்ளார் என பெருமையாக கூறியுள்ளார் ’தல அஜித்’.

 

நடிகை அசினின் அழகான மகள் : வீட்டில் கொண்டாட்டம் – கண்கவர்ந்த புகைப்படம்!!

நடிகை அசினின் அழகான மகள்

தமிழ் சினிமாவுக்கு மலையாளத்தில் இருந்து வந்தவர் நடிகை அசின். ஒரு நேரத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். அஜித், விஜய், சூர்யா என பல பிரபலங்களுடன் நடித்து வந்தார்.

பெரும் மார்க்கெட் அவருக்கு இருந்த போதிலும் அவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் ஐக்கியமானார்.

பின்னர் படங்களில் அவர் ஏதும் நடிக்கவில்லை. அவருக்கு அரின் என்ற குழந்தையும் இருக்கிறது. அக்குழந்தைக்கு இன்று பிறந்தநாளாம். இதில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.