நடிகர் அப்புக்குட்டி அழகர்சாமியின் குதிரை, வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து காமெடியனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பெயர் பெற்றவர்.
அவர் தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் வாழ்க விவசாயி. இந்த படத்தின் விழாவில் பேசிய நடிகர் அப்புக்குட்டி தான் அடுத்த படத்தில் இருந்து ஒரு கோடி ருபாய் சம்பளம் வாங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் “என்னுடன் நடிக்க நடிகைகள் தயங்குகிறார்கள். நான் நடிகனில்லையா? என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா என்றும் அவர் நடிகைகள் பற்றி பேசியுள்ளார்.
பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்த ‘Paris Fashion Week’ நிகழ்ச்சியில், நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த ஆடை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பாரிஸ் நகரில் நடந்த ‘Paris Fashion Week’ நவநாகரீக அணி வகுப்பு நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் முதல் முறையாக அறிமுகமானார்.
45 வயதாகும் ஐஸ்வர்யா, கண்ணை பறிக்கும் வண்ணமயமான ஆடை அணிந்து ஒய்யாரமாக நடைபோட்டது, காண்போரை வெகுவாக கவர்ந்தது.
சர்வதேச ஒப்பனை அலங்கார நிறுவனமான The L’Oreal, Female empowerment-ஐ கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்தியது. கடந்த 18 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக ஐஸ்வர்யா ராய் உள்ளார்.
ஆனால், ‘Paris Fashion Week’ நிகழ்ச்சியில் தற்போது தான் அவர் அறிமுகமாகியுள்ளார். ஆஸ்காரைப் போல் மதிப்புமிக்க திரைப்பட விழாவான கேன்ஸிற்கு அழைக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய், இதன்மூலம் இந்தியாவை சர்வதேச மட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் வெளியுலக தொடர்பு இல்லாமல் தனியாக வீட்டில் வைக்கப்படுவார்கள். அவர்களே வீட்டில் சமைப்பது உட்பட அனைத்து பணிகளையும் செய்யவேண்டும்.
விரைவில் ஹிந்தியில் பிக்பாஸ் 13வது சீசன் துவங்கவுள்ளது. அதை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியின் டீசரில் காட்டப்பட்டுள்ள ஒரு விஷயம் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளது.
நிகழ்ச்சியில் பிரபங்கள் மட்டுமின்றி ஒரு நாய் குட்டியும் வீட்டுக்குள் செல்லவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் தற்போது இப்படி ஒரு மாற்றம் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
தனுஷ் இந்தியாவே அறியப்பட்ட நடிகர். இவர் நடிப்பில் அடுத்த வாரம் அசுரன் படம் திரைக்கு வருகின்றது.
இப்படத்தை தொடர்ந்து இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இந்த படங்களும் அடுத்தடுத்து தயாராகி வருகின்றது.
இந்நிலையில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் மாரி-2. இப்படத்தில் யுவன் இசையில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் உலகளவில் புகழ் பெற்றது.
இந்த பாடல் தற்போது 650 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது, இந்தியளவில் தற்போது இப்பாடல் 9வது இடத்தில் உள்ளது.
எப்படியும் இந்த வருட இறுதிக்குள் 700 மில்லியனை இப்பாடல் கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சூர்யா பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் தன் திறமையை நன்றாக வெளிப்படுத்தியும் இவ்வருடம் வந்த NGK படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அண்மையில் வந்த காப்பான் படம் அவருக்கு மீண்டும் வெற்றியளித்துள்ளது. ஆரம்பத்தில் அவரின் நடிப்பையும், நடனத்தையும் விமர்சத்திவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரின் அடுத்தடுத்த படங்கள் அமைந்தன.
அதில் ஒன்று கஜினி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 ல் இதே நாளில் வெளியான படம் தற்போது 14 வருடங்களை எட்டிவிட்டது.
காப்பான் பட வெற்றியோடு இதனையும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் #14YearOfGHAJINI என டேக் போட்டு கொண்டாடிவருகிறார்கள்.
அழகர்சாமியின் குதிரை படத்தின் மூலம் பலரையும் திரும்பி பார்க்கவைத்தவர் அப்புக்குட்டி. வீரம் படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார். அஜித்தே இவரை போட்டோ ஷூட் எடுத்திருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்புக்குட்டியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் வாழ்க விவசாயி.
அறிமுக இயக்குனர் பொன்னி மோகன் எடுத்திருக்கும் இப்படத்தின் அப்புகுட்டிக்கு ஜோடியாக வசுந்த்ரா நடித்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய அப்புக்குட்டி இயக்குனர் என்னிடம் படத்தின் கதை சொல்லும் போது என் அம்மாவை நேரில் பார்த்தது போல இருந்தது.
எனக்கு விவசாய நிலம் கிடையாது. என் பெற்றோர்கள் விவசாய கூலித்தொழிலாளிகள். விவசாயம் செய்ய சொந்தமாக நிலம் இல்லை. இருந்திருந்தால் ஆடு, மாடு மேய்த்திருப்பேன். எனக்கு ஒருவேளை சோறு போட கூட என் அம்மாவால் முடியவில்லை. பின் நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என யோசித்த பின் சென்னைக்கு வந்துவிட்டேன்.
விவசாயம் அழிந்துவிட்டது. விவசாயிகள் கஷ்டத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக நான் இந்த கதையை ஓகே சொல்லிவிட்டேன். என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? என்னை ஏற்றுக்கொள்ளக்கூடாதா? என மேடையில் பேசியது மனதை மிகவும் வலிக்கச்செய்துள்ளது.
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் அண்மையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது. சங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
அரசியல் அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், சமுத்திரகனி, விவேக், வித்யுத் ஜமால், காமெடி நடிகர் விவேக் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.
சமூக ஆர்வலராக பசுமை புரட்சி செய்து வரும் நடிகர் விவேக் தற்போது இப்படத்தில் சிபிஐ அதிகாரியாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரே இது குறித்து பேட்டியில் தெரிவித்துள்ளாராம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக சம்பளம் இவருக்கு தானாம்..
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள், ரசிகைகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
ஹிந்தியில் தற்போது 13 ம் சீசன் நாளை முதல் ஒளிபரப்பாகிறது. பிரபல நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். புரமோ வந்திருந்தாலும் இதுவரை யாரெல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது நடிகை ரஷாமி தேசாய் தன்னுடைய காதலர் அர்ஹான் கானுடன் இணைந்து கலந்துகொள்கிறாராம்.
அவருக்கு ரூ 1.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் இந்த நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் பெற்றவர் இவர் தான் என்றும் சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கஸ்தூரி மற்றும் வனிதா இடையே அதிக அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதனால் அவர்கள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் இருவரும் ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் தற்போது இருவரும் மீண்டும் சண்டை போட்டுள்ளனர்.
கவின் விஷயம் பற்றி வனிதா கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி பேசிய கஸ்தூரி ஒரு ட்விட் போட்டார். அதில் வாத்து குறியீடையும் பயன்படுத்தியிருந்தார்.
“என்னதான் #losliya வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாக பழி போடுவது? விட்டுருங்கம்மா!” என்று கஸ்தூரி ட்விட் செய்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த வனிதா, “பலரும் உங்களுக்கு பதிலடி கொடுங்கள் என கூறுகிறார்கள். உங்களுக்கு தகுந்த எமோஜி எதுவுமே இல்லையே” என கூறினார். இப்படியே சண்டை நீண்டு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
சீனுராமசாமி தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். அந்த வகையில் தற்போது இவர் மாமனிதன் என்ற படத்தை இயக்கத்தில் இதை யுவன் தயாரிக்கின்றார், மேலும், யுவனும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். இந்நிலையில் இவர் மீது இளையராகாவிற்கு கோபம் இருப்பதாக செய்திகள் வந்தது, அதுக்குறித்து நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். இதோ…
என் நெஞ்சம் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம், நான் கதை,திரைக்கதை வசனமெழுதி இயக்கிய மாமனிதன் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.
இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை அழைத்துச் சென்றார். இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன் “திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்” என்றேன் ‘அது சரி’ என்று சிரித்தபடி வந்தார். பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம்.
படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார். படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு “உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல” அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன்.
அவ்வளவுதான் 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இசைஞானியை இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார். அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களை கடிதமாக எழுதி தந்தேன்.
அவர் அன்போடு பெற்றுக் கொண்டார். படத்தில் பாடல்கள் என்று வந்த போது “அண்ணன் பழனி பாரதிக்கு கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்” என்றேன் யுவன் தரப்பில் “திரு.பா. விஜய்” என்றார்கள். நான் சம்மதித்தேன். ரெக்கார்டிங் தருவாயில் “பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.
எனக்கு இயக்குநராக முழு சுதந்திரம் தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன். இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் 4வது படம். இசைஞானியுடன் பணி புரியும் முதல் படம் . மாமனிதன் எனக்கு 7வது படம். இளையராஜா அவர்கள் மீது எனக்கு இருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணைபுரத்தில் கதாநாயகன் வாழும் ஊராக படம் பிடித்திருக்கிறேன். இளையராஜா அவர்களின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன்.
இதில் என் பெயரை வைத்து இளையராஜா அவர்களை சிறுமைப் படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான் யாரையும் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை.என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது பொய். நானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம்.
தர்மதுரையில் வைரமுத்து பாடல் வரிகளுக்கு தேசிய விருது கிடைத்தது இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிறோம், நிச்சயமாக இந்த படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமென கருதுகிறேன். அன்புடன் சீனுராமசாமி திரைப்பட இயக்குநர்