கணவரைப் பற்றி நடிகை குஷ்பூ வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!!

நடிகை குஷ்பூ வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு..

1980 முதல் இன்று வரை தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வளம் வருபவர் நடிகை குஷ்பூ. அவருக்காக கோவில் கட்டும் அளவிற்கு சென்றவர்தாம் நம் தமிழ் ரசிகர்கள்! அந்த அளவிற்கு ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர்.

பிறந்தது வட மாநிலமாக இருந்தாலும் தமிழில் சரளமாக பேச மற்றும் எழுதும் திறமை உள்ளவர். தமிழக அரசியலில் நுழைந்த அவர், முதலில் திமுக வில் சேர்ந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்திதொடர்பாளராக இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான “சுந்தர்.சி” குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் “சுந்தர்.சி” என்ற பெயரில் நிறைய போலி அக்கவுண்ட்கள் இருக்கின்றனவாம்.

அவற்றுள் ஒன்றைக் குறிப்பிட்டு “இந்த பக்கம் ஒரு போலியான பக்கமாகும். யாரும் இதை பின்தொடராதீர்கள். நான் மறுபடியும் கூறுகிறேன். என் கணவருக்கு எந்த ஒரு சமூகவலைதள பக்கங்களும் கிடையாது. எனவே இது போன்ற போலி அசிக்கவுண்ட்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்” என்று அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை ராய் லக்ஷ்மியின் காதலன் யார் தெரியுமா : பலரும் அறியாத உண்மை தகவல்!!

நடிகை ராய் லக்ஷ்மியின் காதலன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ராய் லட்சுமி. இவர் பல படங்களிலும் நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மறறும் இந்தியிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில் ‘நீயா 2’ படத்தில் ஜெய் உடன் இணைந்து நடித்தார்.

தொடர்ந்து, தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பட வாய்ப்புகளுக்கான வேட்டையில் தீவிரமாக உள்ள இவர் சமூக வலைதளங்களில் பயங்கர ஆக்டிவாக இருப்பவர்.

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இன்று, தனது நண்பர் வீர் ஆர்யன் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது, உன்னுடன் பல ஆண்டுகளாக நான் பயணித்து வருகிறேன். இனிவரும் உன்னுடைய பிறந்தநாட்களையும் நான் உன்னுடன் கொண்டாட வேண்டும். உணர்வுப்பூர்வாமாகவும், அக்கறையுடனும், புத்திசாலித்தனத்துடனும், காதலுடனும், நட்புடனும் ( ஓ.. அதை நான் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன்.) என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் தனது காதலன் இவர் தான் என லக்ஷ்மி ராய் கூறியுள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்

என் மனைவி அழகாய் இருப்பது பலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை : ஷாக் கொடுத்த பிகில் அட்லி!

ஷாக் கொடுத்த பிகில் அட்லி..

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் இயக்குநராக இருப்பவர் அட்லி இவர் முதன்முதலாக இயக்குனர் சங்கர் அவர்களின் உதவி இயக்குனராக அறிமுகமானார் அதன் பிறகு நடிகர் ஆர்யா மற்றும் ஜெய் நடிப்பில் உருவான ராஜாராணி திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இந்த திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி பெற்றதால் இவர் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக கண்டறியப்பட்டார்.

ராஜா ராணி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களை இயக்கினார் இந்த திரைப்படங்கள் ஆனது மாபெரும் வெற்றி பெற்று தற்போது இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக தற்போது அட்லி உள்ளார்.

மேலும் இயக்குனர் அட்லி மூன்றாவது முறையாக தற்போது நடிகர் விஜய்யை வைத்து பிகில் எனும் திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

தற்போது பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் அட்லி என் நிறத்தை வைத்து பலரும் என்னை கிண்டல் செய்தார்கள் எனவும் எனக்கு இதுபோன்ற அழகான மனைவி கிடைத்திருக்க கூடாது எனவும் பலரும் என் காதில் படும்படி கூறியுள்ளனர் எனவும் நிறமொரு தடையே இல்லை என தற்போது கூறியுள்ளார்.

போட்டியாளர்களை திட்டமிட்டு ஏமாற்றிய செரின் : ஏமாற்றப்பட்டது தெரியாமல் தர்சன்,முகென்,சாண்டி..டைட்டில் வின்னர் செரின் தான்.. இத பாருங்க புரியும்!!

போட்டியாளர்களை திட்டமிட்டு ஏமாற்றிய செரின்

பிக் பாஸ் வீட்டில் அனைவரும் டைட்டிலுக்காக போராட ஆரம்பித்து விட்டனர். ஆனால் டைட்டில் வெற்றிபெற டாஸ்க்குகள் முக்கியம் இல்லை என்பதை சில போட்டியாளர்கள் மறந்துவிட்டார்கள். குறிப்பாக தர்சன், முகென், சாண்டி , ஆகியோருக்கு இது புரியவில்லை. காரணம் இவர்கள் மக்களின் வாக்குகள் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. Ticket to finale வெற்றி பெற மட்டுமே டாஸ்குகள் உதவும்.

பைனல் வெற்றிபெற மக்களின் வாக்குகள் மட்டுமே உதவும். அதனை செரின் நன்றாக புரிந்து வைத்துக் கொண்டார். ஆரம்பத்தில் வனிதா, சாக்‌ஷி ரேஷ்மாவுடன் ஒட்டிக் கொண்டிருந்த செரின் அதன் பின் தர்சனுக்கு கிடைத்த கைதட்டுகளால் தர்சனின் பக்கம் சாய்ந்துகொண்டார். அதன் பின் மக்கள் யாருக்கு அதிக கைதட்டல் கொடுக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அவர்களை கெட்டவராக சித்தரிக்க ஆரம்பித்தார்.

அபி தன் காதல் பற்றி ஷெரினிடம் கூறினார் அபிக்கு வாழ்த்து சொல்லி அவருடன் நன்றாக இருக்கும் போதே கவினுக்கு என் மீது ஈர்ப்பு இருக்கிறது என சாக்‌ஷி செரினிடம் கூற விட்டுவிடாதே கவினை காதலி என்ற செரினிடம் அபி கவினை காதலிக்கிறாளே என்றதற்கு இது உன் வாழ்க்கை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே என சாக்‌ஷியின் மனதை மாற்றி கவினுடன் காதலில் கோர்த்து விட்டார்.

அதன் பின் லொஸ்லியாவின் முன் தர்சனுக்கு என இதய வடியில் தோசை போட்டு லொஸ்லியாவை வெறுப்பேற்றி லொஸ்லியாவை கெட்டவராக சித்தரித்தார். அதன் பின் அவரது கண்களுக்கு மதுமிதா பட்டார். மது தமிழ் பெண் நிச்சயம் பைனல் வந்தால் வெற்றி பெறுவார் என்பது புரிந்தது. அதனால் மொழி பிரச்சனையை இழுத்து மதுவை வெளியேற்றினார். ஆனால் செரின் எது செய்தாலும் போட்டியாளர்கள் முன் அப்பாவி போல் அழகாக நடித்தார்.

நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தாச்சு புகைப்படம் உள்ளே!!

நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தாச்சு

தமிழில் ஆர்யா நடித்து வெளியான மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். இதனைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து எந்திரன் திரைப்படத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் ஹிந்தி மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டார். அதன்பின் எமி ஜார்ஜ் பனாயோட்டா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவருடைய வளைகாப்பு சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அந்த புகைப்படத்தை எமிஜாக்சன் கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து தனது கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில் எமிஜாக்சன் நீல நிற உடையில் அவர் பின்னால் பலூன்களை தொங்க விட்டவாறு இருந்தது. எனது ஆண் குழந்தை நல்ல நண்பன் மற்றும் சிறந்த குடும்பத்தினரிடம் கொண்டாடும் அழகான பிற்பகல் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனது மகன் பல அற்புதமான பெண்களை தன் வாழ்வில் பெற்ற அதிர்ஷ்டசாலி என்றும் நான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணர்வதாக தெரிவிக்கிறேன் என்றும் எமி ஜாக்சன் கணவர் கருத்துகளை பதிவு செய்தார். இந்நிலையில் இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

பாஷா கதாநாயகி நக்மாவின் சுவாரசியமான நிஜ காதல் கதை!!

நக்மாவின் காதல் கதை

நடிகை நக்மா ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். கவர்ச்சியால் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் இவர்தான். இவரது தங்கை ஜோதிகா யவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். முதலில் சரத்குமாருடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.

பின்னர் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியைதான் காதலித்து வந்தார் என்று செய்திகள் பரவியது. அவர்கள் இருவரும் வெளிப்படையாகவே ஒன்றாக வெளியில் சுற்றினார்கள். சவுரவ் கங்குலி நக்மா ஆகியோரின் புகைப்படங்கள்தான் அவ்வப்போது பத்திரிகைகளில் மற்றும் மீடியாக்களில் அடிக்கடி ட்ரெண்ட்டாகும்.

கிரிக்கெட் போட்டியில் சவுரவ் கங்குலி சரியாக விளையாடவில்லை என்றால் நக்மா மீது மிக மோசமான விமர்சனங்கள் வந்து குவியும். இதையெல்லாம் பார்த்த ஜோடி தங்கள் இருவரின் கேரியரும் பாதிக்கப்படுவதை அறிந்து ஒத்த மனதுடன் பிரிய முடிவெடுத்து விட்டனர். அதன்பின்னர் நக்மா சினிமாவில் வாய்ப்புகள் குறையவே அரசியலில் பிஸியாகி ஆகிவிட்டார்.

தனது தங்கைக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறது. ஆனால் 45 வயதைக் கடந்தும் இன்று வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்து வருகிறார் நக்மா.

லண்டன் கணவருடன் ஏற்பட்ட பிரிவு : இலங்கையை சேர்ந்த நடிகை ராதிகாவுக்கு சரத்குமாருடன் காதல் ஏற்பட்டது எப்படி?

காதல் ஏற்பட்டது எப்படி?

பிரபல நடிகை ராதிகாவுக்கும், பிரபல நடிகர் சரத்குமாருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளான். சரத்குமாருக்கு ராதிகா இரண்டாவது மனைவியாவார். அதே போல ராதிகாவுக்கு சரத்குமார் மூன்றாவது கணவராவார்.

நடிகை ராதிகா இலங்கையை சேர்ந்தவர். நடிகர் எம். ஆர். ராதாவுக்கும் இலங்கையை சேர்ந்த அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் தான் ராதிகா.

அவர் கடந்த 1985ஆம் பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்த நிலையில் அடுத்த ஆண்டே அவரை பிரிந்தார்.

பின்னர் லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை1990ஆம் ஆண்டு மணந்த ராதிகா அவரை 1992ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

இந்த தம்பதிக்கு ராயான்னே ஹார்டி என்ற மகள் உள்ளார். இந்த சூழலில் ராதிகாவுடன் சரத்குமார் நட்பானார். பின்னர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போக காதலிக்க தொடங்கியுள்ளார்.

திருமணத்திற்கு முன்னர், இருவரும் சேர்ந்து ரகசிய போலிஸ், நம்ம அண்ணாச்சி, சூரியவம்சம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அப்போதே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இது பின்னர் காதலில் தொடங்கி திருமண பந்தத்தில் இருவரையும் இணைத்தது.

இரண்டு நாயகிகளுடன் ரொ மான்ஸ் செய்யும் விஷால்!!

இரண்டு நாயகிகளுடன் விஷால்..

கோலிவுட்டின் பிரபல கதாநாயகர்களுள் ஒருவரான விஷால் திரையுலகில் எண்ட்ரி கொடுத்து 15 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதை சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடினார்கள். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோக்கியா படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது.

அதைத் தொடர்ந்து தற்போது இவர் தனது 28வது படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கி வரும் இந்த படத்தை, விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா என்று இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளார்களாம். இது தவிர படத்தை பற்றிய மற்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் கடைசியாக தல அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்திலும், ரெஜினா கசாண்ட்ரா சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திலும் நடித்துத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பலரையும் மயக்கிய பிரபல பாடகி என்ன ஆனார் தெரியுமா?

பலரையும் மயக்கிய பிரபல பாடகி

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகிகள் சினிமாவில் முகம் பார்க்கா முடியாவிட்டாலும் பலரின் குரல் இன்னும் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அதில் ஒருவர் பாடகி மின்மினி. மணிரத்னம் இயக்கத்தில் ரஹ்மான் இசையமைப்பில் ரோஜா படத்தில் வந்த சின்னச்சின்ன ஆசை பாடல். இன்னும் பள்ளிக்கூட விழாக்களில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

இப்பாடலுக்கு பிறகே மின்மினி யார் என பலருக்கும் தெரியவந்தது. பின்னர் அரண்மனைக்கிளி படத்தின் அடி பூங்குயிலே, சின்ன மாப்பிள்ளை படத்தில் கண்மனிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் பாடல், எங்க தம்பி படத்தின் மலையோரம் மாங்குருவி என பல பாடல்கள் சூப்பர் ஹிட் தான்.

அண்மைகாலமாக இவர் என்ன ஆனார்? எப்படி இருக்கிறார்? என செய்திகள் இடம் பெற்று வருகிறது.இந்நிலையில் இசை விமர்சகர் ஷாஜி என்பவர் மின்மினி மீண்டும் பாடத்தயார். அவரது குரலை இசையமைப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா: பரபரப்பின் உச்சம் அப்போ சம்பவம் இருக்கு!!

அதிரடி டுவிட் போட்ட வனிதா.

பிக்பாஸ் வீட்டில் தனக்கு தோன்றியதை செய்து எப்போதும் மற்றவர்களிடம் ச ண்டையில் ஈடுபட்டவர் வனிதா.

அந்த வீட்டிற்குள் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்துமே பிக்பாஸிற்கு சவால் விட்ட வனிதா இப்போது வெளியே வந்துவிட்டார்.

இதுநாள் வரை டுவிட்டர் பக்கம் வராமல் இருந்த அவர் ஒரு டுவிட் போட்டுள்ளார். அதாவது அவர் டுவிட்டரில் லைவ் வர யோசித்துள்ளாராம்.

அப்படி மட்டும் அவர் வந்தால் கண்டிப்பாக எல்லோரையும் பற்றி கிழி கிழி என கிழித்து விடுவார் என ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.