யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

சாண்டியின் முதல் மனைவி

குணச்சித்திர வேடங்களில் பல திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை காஜல் பசுபதி. இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை பார்த்து அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் புதிய பதிவை வெளியிடுபவர் ஆவார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை காஜல் பசுபதியும் , இந்நிகழ்ச்சியைப் பற்றி என தன்னுடைய சொந்த கருத்துக்களை தினந்தோறும் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் கவின் மற்றும் இலங்கையை சேர்ந்த பெண்ணான லாஸ்லியா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது கவின் , லாஸ்லியா இடையேயான காதல் விவகாரம்தான்.

கவின் , லாஸ்லியா இடையேயான காதல் விவகாரத்தை பற்றியும் நடிகை காஜல் பசுபதி தினமும் புதிய வெளியிட்டவர் பதிவுகளை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

கடந்த சில வாரங்களாகவே நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் வந்து அவர்களை ஊக்குவிப்பதற்காக வந்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் லாஸ்லியாவின் பெற்றோரும் இலங்கையிலிருந்து அவரைக் காண்பதற்காக வந்திருந்தனர் . அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனே லாஸ்லியாவிடம் கவின் உடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கத்தை பற்றி கோபமாக கேட்டனர்.

இதனால் பிக்பாஸ் வீடு பரபரப்பு நிறைந்த இடமாக மாறியது. லாஸ்லியாவின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த எபிசோடை பார்த்த நடிகை காஜல் பசுபதி,

“இனிமேல் நான் கவின் லாஸ்லியா ஆகியோரின் காதலைப் பற்றி விமர்சிக்க போவதில்லை” என்று கூறியுள்ளார். இதனை பார்த்த காஜல் பசுபதி ரசிகர்கள் எதற்காக இந்த முடிவை எடுத்துள்ளீர்கள் என்று கமென்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

நடிகை காஜல் பசுபதி ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்தாண்டு போட்டியாளராக பங்கேற்றார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் ஷாக்

தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இருக்கிறது. போட்டியாளர்களுக்கு பைனல் என்ற உணர்வை பிக்பாஸ் ஏற்படுத்தி பல டாஸ்குகள் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு இப்போது வைக்கப்பட்டுள்ள போட்டிகளில் யார் ஜெயிக்கிறார்களோ அவர் பைனலுக்கு போகும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் வீட்டைவிட்டு வெளியேறப்போகும் 3 போட்டியாளர்கள் யார் என கேட்டிருந்தார். ஒவ்வொருவரும் 3 பெயர்கள் கூறியிருந்தனர், ஆனால் கடந்த வாரம் வனிதா மட்டுமே எலிமினேட் ஆனார்.

போட்டியாளர்கள் சொன்னதில் லாஸ்லியா மற்றும் கவினுக்கு தான் அதிக ஓட்டு, இதனால் இவர்கள் இருவருமே அடுத்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் ரசிகர்களிடம் உள்ளது.
நடிகர்

நடிகர் ஒருவர் நடிகை ஒருவரை தன் படங்களுக்கு பரிந்துரை செய்வதை நிறுத்திக் கொண்டுள்ளாராம். கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர் அந்த நடிகர். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு பல இளைஞர்கள் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

நடிகருடன் ஒரு திறமையான நடிகை பல படங்களில் நடித்துவிட்டார். அந்த நடிகையை தனது படங்களில் பரிந்துரை செய்து வந்தார் நடிகர். அதனால் அவருக்கும், நடிகைக்கும் இடையே ஏதோ இருக்கிறது என்று எல்லாம் பேச்சு கிளம்பியது. ஆனால் நடிகர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நடிகைக்கு சிபாரிசு செய்தார்.

மேடைகளில் நடிகையின் திறமையை பாராட்டி பேசி வந்தார். அந்த நடிகையுடன் சேர்ந்து நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. இதை பார்த்த நடிகர் அவர் ராசியில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதையடுத்து நடிகையை தனது படங்களில் நடிக்க வைக்குமாறு பரிந்துரை செய்வதை நிறுத்திவிட்டார்.

நடிகர் ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நேரத்தில் தான் இந்த காரியத்தை செய்திருக்கிறார். தன் பெயர் கெட்டபோது எல்லாம் செய்யாத ஒரு காரியத்தை ராசிக்காக செய்திருக்கிறார் நடிகர்.

இவர் மட்டும் அல்ல மற்றொரு முன்னணி நடிகரும் ராசி காரணமாக ஒரு நடிகையை ஒதுக்கி வைத்துள்ளார். முன்பெல்லாம் நடிகைகள் தான் ராசி பார்த்தார்கள், தற்போது நடிகர்கள் பார்க்கிறார்கள்.
சனம் ஷெட்டி செய்த நெகிழ்ச்சியான விஷயம்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இலங்கையை சேர்ந்த தர்ஷனை காதலித்து வருவதாக நிகழ்க்ச்சி துவங்கிய போதே செய்திகள் வந்தது. அப்போதே அதை உறுதி செய்யும் விதத்தில் அவர் பேட்டி கொடுத்தார்.

அதன்பிறது இது தர்ஷனுக்கு சிக்கல் ஏற்படுத்துகிறது என கூறி தர்ஷன் வாழ்க்கையில் இருந்து விலகுவதாகவும் பின்னர் அறிவித்தார் அவர்.

இந்நிலையில் தர்ஷன் பிறந்தநாளை சனம் ஷெட்டி குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடியுள்ளார். குழந்தைகளில் பலர் தர்ஷனின் ரசிகர்களாக இருப்பதாக குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவர்.
ஸ்ரீரெட்டி திடீர் விஜயம்!

சமீபத்தில் #me too மூலம் சினிமா உலகத்தில் பல ச ர்ச்சைகள் உருவாக்கியவர் ஸ்ரீ ரெட்டி. அவரால். பல சர்ச்சைகள் எழும்பினாலும் ஸ்ரீ ரெட்டிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

அவ்வப்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அதை தொடர்ந்து ஸ்ரீ ரெட்டியின் முகப்புத்தகத்தில் அவர் நெல்லூரில் உள்ள தர்காவில் இருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

மேலும் நடிகை சமந்தா அல்லது ஸ்ரீ ரெட்டி யார் மிகவும் என்று ரசிகர்கள் இடையே கேள்வி எழுப்பியுள்ள புகை படமும் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை

நடிகை ஒருவர் ஒரு விரலை காட்டியதால் ஹீரோயினை மாற்றுவது குறித்து யோசிக்கிறாராம் தயாரிப்பாளர். பிரபல நடிகை ஒருவருக்கு அண்டை மாநிலத்தை சேர்ந்த பெரிய இடத்து பையனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

அம்மணியும் பெரிய இடமாச்சே என்று சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டார். நடிக்கிறேன் என்று கூறிவிட்டு சம்பளமாக இந்த தொகை வேண்டும் என்று ஒரு விரலை காட்டினாராம். அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் தயாராக இல்லையாம்.

அம்மணியை நடிக்க வைப்பதா இல்லை வேறு நடிகையை நடிக்க வைக்கலாமா என்று தயாரிப்பாளர் யோசிக்கிறாராம். அந்த நடிகை கேட்ட சம்பளத்தை விட மிக குறைந்த பணத்திற்கே சிறப்பாக நடிக்கும் நடிகைகள் அந்த மாநிலத்தில் உள்ளார்கள்.

அதனால் அம்மணி போட்ட கன்டிஷனால் படக்குழுவுக்கு எந்த வருத்தமும் இல்லை. நடிகையை நம்பி வெயிட்டான கதாபாத்திரங்களை கொடுக்க பெரும்பாலான இயக்குநர்கள் தயாராக இல்லை. இந்நிலையில் தான் நடிகை தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தியுள்ளார்.

நானும் நடிகை தான், நான் நல்லா நடிப்பேன் என்று அவர் மீண்டும் மீண்டும் கூறி வருவதை நம்ப யாரும் தயாராக இல்லை. நடிகையின் நிலைமை பாவமாக உள்ளது. ஆனால் அவர் கேட்கும் சம்பளத்தால் அவரை பார்த்து பரிதாபப்படக் கூட ஆள் இல்லை.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வனிதா வந்த பின்னரே நிழ்ச்சி மிகவும் சுவாரஷ்யமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த வாரம் வனிதா எலிமினேட் ஆனார் என்ற தகவல் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த பல பிரச்சினைகளுக்கு வனிதாதான் காரணமாக இருந்தார் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் அவரை நாமினேட் செய்தனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா எவிக்ட் செய்யப்பட்டார். இந்த வாரம் தான் வனிதா அமைதியாகவும் மற்றவர்களுக்கு நல்ல மாதிரியான அட்வைஸ்களையும் கொடுத்து தனக்குள் இருக்கும் இன்னொரு முகத்தையும் காட்டினார். மக்கள் மத்தியில் வனிதா ஒரு சிறந்த போட்டியாளர் என்ற பெயர் வரும் போது அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது தான் அவரின் உண்மையான குணம் என்பது பலருக்கு அவர் வெளியேறும் தருணத்தில் தெரிய வந்துள்ளது. நிகழ்ச்சியின் இறுதியில் கூட வனிதாவை கமலே பாராட்டியுள்ளார். இப்படியான ஒரு சூழலில் அவர் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இன்னும் நிகழ்ச்சி முடிய சில வாரங்களே இருக்கும் நிலையில் வனிதா இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்கும் என்பது பார்வையாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி கட்டத்தை எட்டிவரும் நிலையில் போட்டியாளர்களின் நிலை என்ன என்பதைக் குறித்து பார்வையாளர்கள் அதிகமாகவே ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

தற்போது நடக்கும் நிகழ்ச்சியில் இதுவரை போட்டியாளர்களுக்கு கஷ்டமான டாஸ்க் என்பதை இன்னும் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.பிக்பாஸ் சீசன் 1 யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். அதிலும் சுஜா, சினேகன் பங்கேற்று கடைசிவரை முட்டிக்கொண்டிருந்த கார் டாஸ்க்கை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள்.

டிக்கெட் டூ பினாலே என்று ஆரம்பித்த கடினமான டாஸ்கில் சினேகள் வெற்றி பெற்று கோல்டன் டிக்கெட்டினைப் பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக தெரிவானார். இவருக்கு கமல் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து இந்த டிக்கெட்டினைக் கொடுத்தார்.

அதே போல் இரண்டாவது சீசனில் ஜனனி நேரடியாக இந்த டாஸ்க் மூலமாக தெரிவானார்.தற்போது இந்த சீசனுக்கு இறுதிப்போட்டிக்கு நேரடியாக தெரிவு செய்வதற்கு டிக்கெட் டூ பினாலே என்ற தலைப்பில் கடுமையான போட்டி இந்த வாரம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபலம் ஒருவர் உள்ளே நுழைந்து டிக்கட் டூ பினாலேவிற்கான டாஸ்கை போட்டியாளர்களுக்கு அறிமுகம் செய்யவிருக்கிறாராம்.

இந்த பகுதி இன்று நிகழ்ச்சியில் ஒளிபரப்பபடும் என்று எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில், இதுவரை கஷ்டமான டாஸ்க்கினை சந்திக்காத போட்டியாளர்கள் இனி கடுமையான டாஸ்க்கினை செய்யும் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுகின்றார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாமே….