மஹி நான் பெற்ற மகள் : நடிகை ரேவதி வெளியிட்ட அதிரடியான உண்மை!!

மஹி நான் பெற்ற மகள்

நடிகை ரேவதி டெஸ்ட் டியூப் மூலம் 5 வருடங்களுக்கு முன்னால் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மண்வாசனை படம் மூலம் தமிழி சினிமாவில் அறிமுகமானவர் ரேவதி. அதன் பின் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல முன்னணி கதாநாயகர்களுடன் அவர் நடித்துள்ளார். புதிய முகம் படத்தில் நடித்த போது அப்படத்தில் ஹீரோவாக நடித்த ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவாகரத்து பெற்று தனிமையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், டெஸ்ட் டியூப் மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுபற்றி ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த ரேவதி “வாழ்க்கையில் பல பிரச்சனைகள கடந்து வந்துள்ளேன்.

தாய்மை என்பது ஒரு பெண்ணின் முழுமை. அதற்காக ஏங்கியிருக்கிறேன். எனவே, டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமடைந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். அவள் பெயர் மஹி. அவளை நான் தத்தெடுத்துவளர்ப்பதாக வதந்தி பரவுகிறது.

அதில் உண்மை இல்லை. அவளுக்கு தற்போது 5 வயது. அவளே என் சந்தோஷம். அவளே என் உலகம். யாரிடமும் இதுபற்றி நான் பேசியதில்லை” என ரேவதி கூறியுள்ளார்.

சம்பளத்தை குறைத்த காஜல் அகர்வால்.. இவ்வளவு தானா?

சம்பளத்தை குறைத்த காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்கள் ஒரு படத்திற்கு 2 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறுகின்றனர். இங்கு தென்னிந்திய சினிமாவில் வடநாட்டு நடிகைகள் பலரும் இந்த லிஸ்டில் உள்ளனர். ஆனால் இங்கிருந்து சென்று பாலிவுட்டில் ஜெயித்தவர்கள் ஒரு சிலரே. அசின், த்ரிஷா, காஜல், ராகுல் என பல நடிகைகள் அங்கு நடித்தாலும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவர்கள் வாங்கும் சம்பளமும் மிக குறைவு தான்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு ஹிந்தி படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் Mumbai Saga என்ற படத்தில் காஜல் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்காக காஜல் வெறும் 30 லட்சம் ருபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.பாலிவுட் வாய்ப்பிற்காக சம்பளத்தை இவ்வளவுக்கு குறைத்துவிட்டாரா என பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

 

ஜெயலலிதாவாக முன்னணி தமிழ் நடிகை.. மாஸான ’குயின்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

ஜெயலலிதாவாக முன்னணி தமிழ் நடிகை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணத்தை வெப் சீரிஸாக இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிவருகிறார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது.

குயின் என பெயரிடப்பட்டுள்ள இதில் 18-30 வயதான கதாப்பாத்திரத்தை நடிகை அஞ்சனாவும் அதனை தொடர்ந்து ஜெயலலிதா ரோலில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஏற்று நடிக்கிறார்.

ஜெயலலிதா கொண்டு எடுக்கும் படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் கௌதம்மேனன் திரை உலகில் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டம் சம்பாதித்தவர். அவர் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்ட ரிலீஸ் எப்போ என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் குயின் போஸ்டர் வந்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த வாரம் வெளியே போனது இவர்தான்.. பிக்பாஸ் பற்றி உறுதியான தகவல்!!

வெளியே போனது இவர்தான்

இந்த வாரம் வெளியே போனது இவர்தான்.. லேட்டஸ்ட் பிக்பாஸ் அப்டேட். சென்ற வாரம் எலிமினேஷன் இல்லை, ஆனால் இந்த வாரம் நிச்சயம் இருக்கும் என கமல் கூறினார்.

இந்நிலையில் இன்று இயக்குனர் சேரன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டதாக உறுதியான தகவல் வந்துள்ளது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருந்தினர்களாக சென்ற சாக்ஷி உள்ளிட்ட மற்றவர்களும் வெளியே சென்றுள்ளனர்.

மக்களை நாய் என்று சொன்னீர்களா? சாக்‌ஷியிடம் மேடையிலேயே கேள்வி கேட்டு உண்மையை வாங்கிய கமல்!!

உண்மையை வாங்கிய கமல்!!

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ச ர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சாக்‌ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி, பிறகு வீட்டில் கெஸ்டாக வந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சாக்‌ஷி வீட்டில் இருக்கும் போது மக்களை நாய் என்று குறிப்பிட்டார் என்று ஒரு செய்தி பரவியது, பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அது குறித்து கமல் மேடையிலேயே கேட்க, சாக்‌ஷி ‘சார் ஒருபோதும் என்னை வளர்த்த மக்களை பார்த்து நான் அப்படி சொல்ல மாட்டேன்.நான் கூறியது வீட்டில் நடக்கும் விஷயங்களை, அது தவறாக பிரதிப்பலித்துவிட்டது’ என்று மன்னிப்பு கேட்டார்

வனிதாவை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன், கொந்தளித்த தர்ஷன், ஷெரீன்- பெரும் ச ண்டையில் பிக்பாஸ்!!

வனிதாவை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்

வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்தாலே பி ரச்சனை தான். அதனாலேயே மக்கள் அவரை வாக்களித்து வெளியே அனுப்பிவிட்டனர்.

ஆனால், மீண்டும் மக்கள் விரும்புகிறார்கள் என்று அவரை உள்ளே அனுப்பினார்கள், வழக்கம் போல் அவர் செம்ம ச ண்டையை உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய பிக்பாஸில் கமல்ஹாசன், வனிதாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு கலங்கடித்துவிட்டார். இதில் குறிப்பாக ஷெரின் அழும் போது சும்மா இருக்கீங்க, ஆனால், சாண்டி அழுதால் நாடகம் என்கின்றீர்கள் என்று கண்டித்தார்.

அதோடு ஷெரீன் காதல் குறித்து கமல் கேள்வி கேட்க, அப்போது வனிதா, வெளியே நடந்த சில விஷயங்களை சொன்னார்.

அதில் வனிதா, ஷெரீன் வெளியே ஒருவரை காதலித்தார் என்பதை சுட்டிக்காட்ட, உடனே தர்ஷனும், ஷெரீனும் கோபப்பட்டு வனிதாவை வார்த்தைகளால் தா க்க ஆரம்பித்துவிட்டனர்.

பிக்பாஸ் தர்ஷன் காதலி சனம் ஷெட்டிக்காக த ற்கொ லை செய்துகொண்ட பிரபல நடிகர் : அ திர்ச்சி சம்பவம்!!

பிக்பாஸ் தர்ஷன் காதலி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களின் காதல் மன்னனாக இருப்பவர் தர்ஷன். இவரும் நடிகை சனம் ஷெட்டியும் காதலிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

திடீரென சனம் ஷெட்டி நேற்று இனி தர்ஷன் வாழ்க்கையில் நான் இல்லை என்று அ ழுதபடி வீடியோ வெளியிட்டார், இது பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது சனம் ஷெட்டிக்காக த ற்கொ லை செய்துகொண்ட ஒரு நடிகரின் விவரம் வைரலாகி வருகிறது. சனம் 2012ம் ஆண்டு வெளியான அம்புலி 3டி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் நாயகனாக நடித்த அஜய், சனம் ஷெட்டியை காதலித்துள்ளார்.

அவரது காதலை சனம் ஏற்க மறுத்ததால், அஜய் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் த ற்கொ லை செய்துக்கொண்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலாவின் தற்போதைய புகைப்படங்கள்!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை மனிஷா கொய்ராலாவின் அழகிய புகைப்படத்தொகுப்பு.

வனிதாவை அசிங்கப்படுத்திய கமல்.. கைகொட்டி சிரித்த தர்ஷன்!!

வனிதாவை அசிங்கப்படுத்திய கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சனி மற்றும் ஞாயிறு கிழமை என்றால் டிஆர்பி எகிறும். அதற்கு காரணம் நடிகர் கமல்ஹாசன் தான்.

அவர்நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை அசிங்கப்படுத்தியுள்ளார். தான் பேசியதை எடிட் செய்து வெளியில் காட்டுகிறார்கள், அதை பார்த்து மக்கள் தன்னை தவறாக நினைப்பதாக கூறினார் வனிதா.

“கிரிக்கெட் மேட்சில் ஹைலைட் காட்டுகிறார்கள். அதில் ஸ்கோர் ஒண்ணுதான் ஆனால்..” என கூறி கமல் வனிதாவை அசிங்கப்படுத்தியுள்ளார்.

மேலும் அதை பார்த்து தர்ஷன் கைகொட்டி சிரித்த நிலையில், “என்ன தர்ஸன்.. உனக்கு கிரிக்கெட் புடிக்குமா, இல்லை நான் சொன்னதை கேட்டு சிரிக்கிறியா?” என கேட்க. அதற்கு அவர் “நீங்க சொல்வதை கேட்டு தான் சார்” என கூறியுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த நடிகருக்கு நேர்ந்த சோகம்!

நடிகருக்கு நேர்ந்த சோகம்..

சிவகார்த்திகேயன், சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கும் அப்பாவாக கருப்பசாமி கோவில் பூசாரியாக நடித்தவர் தவசி. இப்படத்தில் அவர் பொய்யாக சாமி ஆடிக்கொண்டே சொல்லும் கருப்பன் குசும்புக்காரன் என்ற காமெடி அதிக வரவேற்பை பெற்றது.

அவர் தற்போது இயக்குனர் ராஜ் கபூர் எடுக்கும் சீரியலில் நடித்து வருகிறார். திண்டுக்கல் தேனி நெடுஞ்சாலையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துகொண்ட அவருக்கு காரில் திரும்பி சென்றபோது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து கடும் விபத்திற்குள்ளானது. இதில் அவருக்கு படுகாயமடைந்ததால் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறாராம்.