அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகும் தேசிய விருது பெற்ற தமிழ் ஸ்டார்!

அல்லு அர்ஜூன்

பிரபல இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் அல வைக்குந்தபுரமுலோ (Ala Vaikunthapuramulo) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹாரிகா மற்றும் ஹாஸின் கிரியேஷன்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் சார்பாக அல்லு அரவிந்த் மற்றும் ராதா கிருஷ்ணா ஆகியோர் தயாரிக்கின்றனர்.

அல்லு அர்ஜூனின் 19வது படமான இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப், ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு தமன் இசையமைக்க, பி.எஸ்.வினேத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக பிரபல தமிழ் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கவிருக்கிறாராம்.

நடிப்பிற்கு முழுக்கு போட்ட நடிகை : கர்ப்பமாக இருப்பதுதான் காரணமாம்!!

பேபி நடிகை

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை, கர்ப்பமாக இருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாராம்.

பேபி நடிகை தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறாராம். இவர் இரண்டு மொழி படங்களிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளாராம். இவர் தற்போது தமிழில் சக்கைப்போடு போட்ட நம்பர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறாராம்.

பேபி நடிகை கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல தெலுங்கு நடிகரை திருமணம் செய்தாராம். ஆனால் திருமணத்துக்கு பிறகும் பேபி நடிகை மார்க்கெட் குறையவில்லையாம். தற்போது சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்க பேபி நடிகை முடிவு செய்துள்ளாராம். அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறதாம்.

சினிமாவில் நடிப்பது அவருக்கு பிடிக்காது : ரேகா உருக்கம்!!

ரேகா

 

கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரேகா, சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாவில் நடிப்பது அவருக்கு பிடிக்காது என்று கூறியிருக்கிறார்.

பாரதிராஜா இயக்கிய கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ரேகா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து புகழ்பெற்ற ரேகாவுக்கு புன்னகை மன்னன் மிகப்பெரிய வெற்றியையும் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது.

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரேகா, சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில், தான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும் தான் தனது தந்தை பார்த்துள்ளார் என்றும் சினிமாவில் நடிப்பது தந்தைக்கு பிடிக்காது என்றும், அதற்கு காரணம் என் மீது அவர் வைத்திருந்த அதிக அன்பும் அக்கறையும் தான் என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், தந்தையின் மறைவுக்குப் பின் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவருக்கு ஒரு கல்லறை எழுப்பியதாகவும், தான் இறந்த பின், தந்தையை அடக்கம் செய்த இடத்துக்கு அருகில் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் ரேகா விருப்பம் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் தனுஷின் மற்றொரு பாடலுக்கு கிடைத்த மரியாதை : கலக்கிய இளைஞர்கள்!!

தனுஷ்

தனுஷ் யு-டியுப் உலகின் சூப்பர் ஸ்டார் என்று கூட சொல்லலாம். இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறி, ரவுடிபேபி ஆகிய பாடல்கள் அடைந்த உயரத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் இதை தொடர்ந்து மேலும் ஒரு தனுஷ் பாடல் தற்போது உலக அளவில் பெயர் பெற்றுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் இடம்பெற்ற தரலோக்கல் பாடல் செம்ம ஹிட் அடித்தது.

இந்த பாடலுக்கு உலகளவில் மிக பிரபலமான அமெரிக்காஸ் காட் டேலண்ட் ஷோவில் இளைஞர்கள் நடனமாடி அசத்தியுள்ளனர்.

உலக மக்களை பெரிதும் உலுக்கிய துயர சம்பவம் : பொங்கி எழுந்த சிம்ரன் கேட்ட கேள்வி!!

சிம்ரன்

ஸ்டார் ஹீரோயினாக கனவு கன்னியாக பலருக்கும் இருந்த நடிகை சிம்ரன் பல வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

ரஜினிக்கு ஜோடியாக நடித்த பேட்ட படம் அவரின் ரீ எண்ட்ரி எனலாம். பின் சமந்தாவுக்கு அம்மாவாக சீமராஜா படத்திலும் அவர் நடித்திருந்தார்.

தற்போது அவர் டிவிட்டரில் கோபத்துடன் கேள்வி கேட்டுள்ளார். பூமியின் நுரையீரல் எரிந்துகொண்டிருக்கிறது. உலகை காப்பாற்ற நாம் இன்னும் என்ன செய்யப்போகிறோம். பூமியில் 20 சதவீதம் ஆக்ஸிஜனை வெளியிடும் காடுகளை எரிவதை பார்க்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது.ஏன் இந்த சம்பவம் குறித்து ஊடகம் என கேட்டுள்ளார்.

Simran

@SimranbaggaOffc
The “lungs of the planet” are burning.
What can we do more to save the planet?
It’s painful to see the forest that creates 20% of the earth’s oxygen has been on fire with NO media coverage!!

சினேகா-பிரசன்னா வீட்டில் விசேஷம் : வாழ்த்து கூறும் மக்கள்!!

சினேகா-பிரசன்னா

பிரபலங்களில் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகள் அதிகம் உள்ளார்கள். அப்படி ஒரு சில பிரபலமான ஜோடி நடிகர்களே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அப்படி சினேகா-பிரசன்னாவை கூறலாம். 2012ம் ஆண்டு மே மாதம் இவர்களுக்கு திருமணம் நடந்தது, 2015 செப்டம்பர் மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு விஹான் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

தற்போது சினேகா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாராம், இதை அறிந்துகொண்ட ரசிகர்களுக்கு அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

பேமென்ட் தர்றோம்னு சொல்லிட்டு புகார் கொடுத்திருக்காங்க : மதுமிதா!!

மதுமிதா

தனியார் நிறுவனம், தன்மீது காவல் நிலையத்தில் ஒரு பொய்யான புகாரை கொடுத்துள்ளதாக மதுமிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர், நடிகை மதுமிதா. இவர், தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சில தினங்களுக்கு முன், நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாகத் திடீரென அதிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நிறுவனத்தின் சார்பில் மதுமிதா மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுமிதா செய்தியாளர்களைச் சந்தித்தார். “தனியார் நிறுவனம் என்மீது காவல் நிலையத்தில் ஒரு பொய்யான புகாரைக் கொடுத்துள்ளது. இந்தப் புகாரை கொடுப்பதற்கு முன், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, உங்களுக்கு வரவேண்டிய செட்டில்மென்டுகளைக் கொடுத்துவிடுகிறோம். இன்வாய்ஸ் அனுப்புங்கள் என என்னிடம் கூறினர். என் கணவர் மூலமாக அவர்கள் கேட்டதைக் கொடுத்துவிட்டோம். உங்களுக்கான தொகை விரைவில் வந்துவிடும் எனக் கூறி அனுப்பினர். அதன் பின்னர், ஏன் இப்படி ஒரு புகாரை அளிக்க வேண்டும் என எனக்குத் தெரியவில்லை.

என்மீது புகார் கொடுத்ததே எனக்குத் தெரியாது. நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து என்னிடம் கேட்டபோதுகூட அப்படி இருக்காது. வாட்ஸ்அப்-பில் பரவும் வதந்தியாகத்தான் இருக்கும் என முதலில் நினைத்தேன். அதன்பின்னர் வந்த தொடர் அழைப்புகளையடுத்து, எனது வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு, காவல்நிலையத்தில் விசாரிக்கச் சொன்னேன். இதுதொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் விசாரித்தபோது, புகார் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

கடந்த 10 வருடங்களாக நான் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். யார்மீதும் நான் இதுவரை புகார் கொடுத்ததில்லை. என் மீதும் ஒரு சிறிய புகார் கூட வந்ததில்லை. என் மீதான புகாரையடுத்து நான் நிர்வாகத்தைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். என்னால் அவர்களை அணுகமுடியவில்லை. எனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையைத் தர தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் சம்மதம் தெரிவித்த பின்னர், ஏன் புகார் கொடுக்க வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை” என்றார்.

தனியார் நிறுவனத்திடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தினால் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என முடித்துக்கொண்டார்.

கவினை ரொம்ப பிடிக்கும் : ஆனால் என் பெற்றோர்…உண்மையை போட்டுடைத்த லாஸ்லியா!!

லாஸ்லியா

லாஸ்லியா மற்றும் கவின் ஆகியோரின் பிக்பாஸ் காதல் கதை அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அது பற்றி அவர்கள் வெளிப்படையாக அறிவித்ததில்லை.

இந்நிலையில் இன்று சேரன் பேசியபோது அவர்கள் இருவரும் காதலை உறுதி செய்தனர். லாஸ்லியா பேசும்போது “முன்பு எனக்கு கவினை பிடிக்கும், தற்போது அது ரொம்ப பிடிக்கும் என்கிற நிலைக்கு மாறிவிட்டது. ஆனால் என் பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என தெரியவில்லை. அதனால் எங்கள் நட்பை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வது வெளியில் சென்ற பிறகுதான்” என கூறினார்.

இதனால் பெற்றோர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே கவின் உடன் காதல் தொடரும் என்பதை லாஸ்லியா மறைமுகமாக கூறியுள்ளார்.

மேலும், கவின் பேசும்போது நான் லாஸ்லியாவை குழந்தைபோல பார்த்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.

நடிகையின் மன அழுத்தத்துக்கு இதுதான் காரணமா?

நடிகை

எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் மன அழுத்தத்தில் இருந்த நடிகை, எதற்கு அப்படி இருந்தார் என்பதற்கான காரணம் வெளியாகி இருக்கிறதாம்.

நடிகையாகவும், பாடகியாகவும் மிகவும் பிரபலமானவர், சில மாதங்களாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்தாராம். மன அழுத்தம், காரணமாக உடல் மற்றும் மனரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதால் விலகியிருந்ததாக தெரிவித்திருந்தாராம்.

திருமணமான ஒரு நபருடன் உறவு வைத்திருந்ததுதான் இதற்கு காரணம் என்று தற்போது கோலிவுட்டில் பேசி வருகிறாராம். நடிகையோ தற்போது மன அழுத்தத்தில் இருந்து மீண்டு இருப்பதாக நடிகை தரப்பில் கூறுகிறார்களாம்.

திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ஜனை : புதிய அப்டேட்!!

கர்ஜனை

சுந்தர் பாலு இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் கர்ஜனை படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கர்ஜனை’. இதில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சுந்தர் பாலு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அவர் தயங்காமல் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தை பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.