பெண் வேடத்தில் நடிக்கும் அங்காடித்தெரு மகேஷ்!!

அங்காடித்தெரு மகேஷ்!!

அங்காடித்தெரு படம் மூலம் மிகவும் பிரபலமான மகேஷ், தற்போது தேனாம்பேட்டை மகேஷ் படத்தில் பெண் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் எம்.சித்திக் கூறும்போது, ‘எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என்று இருக்கிறார் மகேஷ். இவரை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார் இவரது தந்தை. ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்கு தெரிய வருகிறது. அதன்பின் மகேஷின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறேன்.

இப்படத்தில் மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபராகவும் பெண் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இவருடன் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் ஓனர் சி.டி.கணேசன், ‘குட்டிபுலி’ ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ஒளிப்பதிவு – முனீஷ், இசை – ஸ்ரீ சாய் தேவ், எடிட்டர் – பாசில், கலை – கார்த்திக், நடனம் – தீனா, பாடலாசிரியர் – சிவசங்கர், சண்டை பயிற்சி – எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்’ என்றார்.

2 மாதம் தான் ஆயுள் : சீமான் தயவுசெஞ்சு என்ன நிம்மதியுடன் வாழவிடுங்க.. கண்ணீர் விட்டு க தறிய நடிகை!!

விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கோரிக்கை விடுத்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் ரஜினகாந்திடம் உதவி கேட்டு நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டார். சில தினங்களுக்கு பிறகு ரஜினி தன்னை தொடர்புக்கொண்டு பேசிய உதவி செய்ததாக மற்றொரு வீடியோ பதிவிட்டார்.

தற்போது, சீமானுக்கு கோரிக்கை விடுத்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த உதவி செய்ததை பலர் அரசியல் ஆக்குகிறார்கள். என்னை தவறான பெண்ணாக சித்தரித்து பலர் செய்தி வெளியிடுகின்றனர்.

இதனால், நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். எனக்கு இதயப்பிரச்சினை இருக்கிறது, 2 மாதம் தான் ஆயுள் அதற்குள் குடும்பத்திற்காக எதாவது நான் செய்ய வேண்டும். கமல், ரஜினி என யாரிடம் வேண்டுமானாலும் நான் உதவி கேட்பேன். அதை அரசியல் ஆக்குகிறார்கள்.

சீமானுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எனது வாழ்கை சூழ்நிலையே மோசமாக மாறிவிட்டது. அவருக்கு ஆதரவாக எழுதும் பலர் என்னை தவறாக சித்தரிக்கின்றனர். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நான் முன் குறிப்பிட்டது போல் அனைத்தையும் விளாவாரியாக எழுத்து வைத்து த ற்கொ லை செய்துக்கொள்வேன். உங்களுக்கு தான் பிரச்சினை.

எனவே, சீமான் நீங்கள் உங்கள் ஆதவாளர்களிடம் இனி என்னை தவறாக சித்தரித்து எழுதுவதை நிறுத்தும் படி கூற வேண்டும். அந்த நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள் என கோரியுள்ளார்.

புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்த நடிகை!!

நடிகை சரண்யா

புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான சரண்யா கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

கேரளாவில் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதிலிருந்து தற்போது வரை 7 முறை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்துவிட்டார். இவருடைய சம்பளத்தில் மட்டுமே குடும்ப செலவுகள் அனைத்தும் கவனிக்கப்பட்டு வருவதால், 8வது முறை அறுவை சிகிச்சை செய்வதற்கு போதிய பணம் இல்லை என கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைத்தளத்தில் கோரிக்கை வைத்தார்.

அதனை பார்த்த சில நடிகர்கள் அவருக்கு பண உதவி கொடுக்க முன்வந்தனர். இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை, கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு நடிகை சரண்யா கொடுத்துள்ளார்.

அவருடைய இந்த சேவையினை இணையதளவாசிகள் பாராட்டி வருகின்றனர். இதேபோல நடிகர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிவாரண நிதியினை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

பிக்பாஸ் தர்ஷனின் உண்மை முகமே இதுதான் : போட்டுடைத்த இளம் நடிகர்!!

பிக்பாஸ் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 க்கு இலங்கையை சேர்ந்த தர்ஷன் போட்டியாளராக வந்துள்ளார். அவருக்கு பெண் ரசிகைகள் நிறைய கிடைத்துள்ளார்கள்.

வெளியில் மட்டுமில்லாது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அனைவருக்கும் பிடித்தமான நபராக இருக்கிறார். அவருக்கும் அண்மையில் சில விசயங்களில் கோபம் வருகிறது.

அதை தூண்டிவிட்டது வனிதா என்பது உங்களுக்கே தெரியும். இந்நிலையில் அவருடன் படத்தில் பணியாற்றிய நடிகர் டாம் அபிலாஷ், தர்ஷன் பற்றி பேசியுள்ளார்.

தர்ஷன் மிக பணிவாக இருப்பான். ஹீரோ என அலட்டல் இருக்காது. சாதாரணமாக இருப்பான். நிறைய விசயங்கள் பேசுவான். ஆனால் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் அவனை 5 சதவீதம் மட்டுமே காட்டியுள்ளார்கள் என தோன்றியது.

தற்போது அவனை அதிகம் காட்டுகிறார்கள். நிறைய பேசுவது தெரிகிறது. தர்ஷணுக்கு கோவம் வரும். வந்தால் அவ்வளவு தான். முகமே காட்டிவிடும் என கூறியுள்ளார்.

SIIMA 2019 – விருது விழாவில் படு மோ சமான கவர்ச்சி உடையில் தோன்றிய நடிகை..!

ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
படங்களில் நடித்து வரும் சமயத்தில் சில உணர்வுபூர்வமான பாடல்களை பாடி ரசிகர்களை மெய்மறக்க செய்யும் ஆண்ட்ரியாவின் வாழ்க்கையில் உணர்வுபூர்வமான சில வலிகளை கடந்து வந்துள்ளார்.

ஆம், சமீபத்தில் பெங்களூரில் நடந்த கவிதை போட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியா சோகமான சில கவிதைகளை வாசித்தார்.ஏன் உங்கள் கவிதையில் இவ்வளவு சோகம் என கேட்டதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, திருமணம் ஆன நபர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த இருண்டகால துயரத்தை தன்னால் அடக்க முடியவில்லை என கூறினார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, யார் அந்த திருமணம் ஆன நபர் என்று ரசிகர்கள் தேடலில் ஈடுபட்டு இறுதியில் பிரபல வார இதழ் ஒன்றில் வந்த கிசுகிசு செய்தி மூலம் இவர் தான் என்று அந்த நடிகரை கண்டு பிடித்தும் விட்டார்கள்.

இப்படிபட்ட பரபரப்பு கிசுகிசு தன்னை சுற்றி போய் கொண்டிருக்கும் நிலையில், ஆன்டிரியா நேற்று நடைபெற்ற SIIMA 2019 விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிகப்பு கம்பளத்தை அலங்கரித்தார்.தன்னுடைய முழு முதுகும் பளீச்சென தெரியும் படி, அழகான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மட்டக்களப்பு மச்சான்: பிரபல இயக்குனருடன் காதல் வாழ்க்கை குறித்து நடிகை மௌனிகா!!

மௌனிகா

இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு திருமணமாகி அகிலா என்ற மனைவி இருக்கையில் நடிகை மௌனிகாவுடன் குடும்பம் நடத்தி வந்தார்.இவர்கள் இருவரின் விவகாரம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், பாலு மகேந்திரா 1998-ல் தாலி கட்டி நடிகை மௌனிகாவை மணந்தார். இதனை 2004-ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இ றந்தபோது அவரது உடலை பார்க்க மௌனிகாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இயக்குநர் பாலா, நடிகைகள் அர்ச்சனா மற்றும் ஈஸ்வரி ராவ் போன்றவர்கள்தான் மௌனிகா அங்கு வரக்கூடாது என்று பிடிவாதம் செய்தனர்.

போராட்டத்திற்கு பிறகு, மௌனிகாவுக்கு, பாலு மகேந்திராவின் உடலை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை பங்குபோட்டவர் என்ற குற்றச்சாட்டு மௌனிகா மீது சுமத்தப்பட்டது. இதனால் பல்வேறு மன வேதனைகளுக்கு ஆளான மௌனிகா தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பாலுமகேந்திரா குறித்து மனம் திறந்துள்ளார். நான் இன்னொரு பெண்ணின் புருஷனை பங்கு போட்டது தவறானஒ ஒன்றுதான். ஆனால் அந்த வாழ்க்கையை நான் எவ்வித பிரச்சனைகளும் இன்றி சரியாக வாழ்ந்தேன்.இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து பரஸ்பரமாக வாழ்ந்தோம்.

நான் பாலுமகேந்திராவுடன் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் அழகிய காலம். அவரை நான், திமிங்கலம், மட்டக்களப்பு மச்சான், மிஸ்டர் மகேந்திரா என செல்லமாக அழைப்பேன். அவர் கடைசியாக என்னிடம் இரண்டு சத்தியம் வாங்கினார்.

ஒன்று, நான் இ றந்தபிறகு நீ படங்களில் நடிக்கலாம், உனக்கு பிடித்தமான இயக்குநர்களுடன் வேண்டுமானால் பணியாற்று, ஆனால் நடிக்காமல் இருக்காதே. நீ மிகவும் திறமையான நடிகை என்று கூறினார்.

இதற்கு நான் சம்மதம் தெரிவித்து சத்தியம் செய்துகொடுத்தேன். இரண்டாவது, நீ ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு, உனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள் என்று கூறினார்.

ஆனால், இதற்கு நான் சத்தியம் செய்து கொடுக்கவில்லை. ஏனெனில் அவர் இருந்த இடத்தில் வேறாரு நபரை வைத்துப்பார்க்க எனது மனம் இடம்கொடுக்கவில்ல. நடக்காத ஒன்றுக்கு எதற்காக சத்தியம் செய்துகொடுக்க வேண்டும் என்பதற்காக, நான் சத்தியம் செய்துகொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

கர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா… வைரலாகும் நளினி மகளின் பதிவு!!

மதுமிதா

பிக்பாஸில் ஹலோ டாஸ்கின் போது நடிகை மதுமிதா இதை தான் பேசினார் என நளினியின் மகள் கூறியதாக பதிவொன்று வைரலாகியுள்ளது. விதிமுறைகளை மீறி தனக்கு தானே தீ ங்கிழைத்துக் கொண்டதாக மதுமிதாவை வெளியேற்றினார் பிக்பாஸ்.

தற்கொ லை முடிவுக்கு காரணங்கள் சொல்லப்பட்டாலும் தெளிவாக எதுவும் தெரியவரவில்லை. இந்நிலையில் நளினியின் மகள் கூறியதாக சமூகவலைத்தளங்களில் பதிவொன்று வைரலாகி வருகிறது.

அதாவது, ஹலோ டாஸ்கில் பேசிய மதுமிதா, “வருண பகவான் கூட கர்நாடககாரரோ. கொஞ்சம் கருணை காட்டி இங்கேயும் மழை கொடுக்கலாமே”, எனும் கருத்து கூறியதாக நளினி மகள் தெரிவித்துள்ளார்.

இதை கூறியதற்காகத் தான் சக போட்டியாளர்கள் மதுவை மிக மோசமாக நடத்தியதாகவும், இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்றவர் தற்கொ லை முடிவை கையிலெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக முதலுதவி வழங்கி பிக்பாஸ் குழு காப்பாற்றியதாகவும், எது எப்படியிருப்பினும் மதுமிதா செய்தது தவறு தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.

பிக்பாஸ் வீட்டுக்கு போனவங்களுக்கு இந்த கொடுமை தான் நடக்கும் : அதிர்ச்சியான உண்மையை கூறிய இளம் நடிகை!!

சம்யுக்தா ஹெட்ஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 55 நாட்களை கடந்து இறுதியை நோக்கி பயணித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி மொழிகளில் நடைபெற்று வருகிறது.

சர்ச்சைகள், எதிர்ப்புகள் இருந்தாலும் அதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தமிழில் அதிகரித்துள்ளது. அண்மையில் வந்துள்ள கோமாளி படத்தில் நடித்திருப்பவர் சம்யுக்தா ஹெட்ஜ், பிக்பாஸ் பற்றி பேசியுள்ளார்.

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 ல் தான் போட்டியாளராக சென்றதாகவும், உள்ளே சென்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

ஸ்கிரிப்டாக இல்லாவிட்டாலும் அந்த இடம் ஒருவரை அவருக்கு பிடிக்காததை அவருக்கு எதிராக செய்யும் நிலைக்கு தள்ளும். பிக்பாஸ் கெட்டது, நம்மை பெரிதாக தூண்டிவிடும் என கூறியுள்ளார்.

வெளியிடுவதற்கு முன்னரே நம்பர் 1 இடத்தை பிடித்தது விஜய்யின் பிகில்!!

பிகில்

அட்லீ-விஜய் இணைந்தாலேயே அவர்களது படம் ஹிட் தான் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படி மூன்றாவது வெற்றியை அடைய இருவரின் உழைப்பில் தயாராகி வரும் படம் பிகில்.

படம் வரும் தீபாவளி ரிலீஸ் தேதி மட்டும் இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் மிர்சி டாப் 20 பாடல்கள் லிஸ்டில் விஜய்யின் பிகில் பட சிங்கப்பெண்ணே பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

படம் ரிலீஸுக்கு முன்னரே பாடல்கள் டாப்பில் இருப்பது ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தியாக இருக்கிறது.

அழகை காட்டி ஆண்களை மயக்கிய நடிகை : வெளியான வீடியோவால் ஏற்பட்ட சிக்கல்!!

சுருதி

வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் அழகை காட்டி பண மோ சடி செய்த வழக்கில் சிக்கிய சுருதி தனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாக சித்தரிக்கப்படுவதால் தனது திருமணம் தடைபடுவதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜேர்மனியில் பணிபுரிந்து வரும் நிலையில், மேட்ரிமோனியல் திருமண தகவல் மையம் மூலம் சுருதி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆடி போனா ஆவணி படத்தில் கதாநாயகியாக சுருதி நடித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் மூன்று மாதங்கள் பழகியுள்ளனர்.

இந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பாலமுருகனிடம் கூறிய சுருதி அவரிடம் 45 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து பாலமுருகன் அந்த பணத்தை சுருதி வங்கி கணக்கில் செலுத்திய பின்னர் அவருடனான தொடர்பை சுருதி துண்டித்தார்.

இதையடுத்து சுருதி மோ சடி பேர்வழி என்பதை உணர்ந்த பாலமுருகன் பொலிசில் புகார் அளித்தார். விசாரணையில் வெளிநாட்டில் வாழும் பலரிடம் சுருதி மோ சடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து பொலிசார் சுருதி உள்ளிட்ட மூவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில் நேற்று கோவை சைபர் க்ரைம் பொலிஸ் அலுவலகத்துக்கு வந்த சுருதி புகார் ஒன்றை கொடுத்தார். பின்னர் நிரூபர்களிடம் பேசிய அவர், நான் கைதுசெய்யப்பட்ட போது ஒளிபரப்பான வீடியோக்கள், சமூக வளைதளங்களில் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாக என்னுடைய திருமணம் தடைபடுகிறது.

எனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாக சித்திரிக்கப்பட்டு பரப்பப்படுவதோடு எனது குடும்பத்தினர் குறித்தும் அசிங்கமான வகையில் தகவல்களைப் சிலர் பரப்புகின்றனர். இது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றவேண்டும் என புகார் கொடுத்தேன் என கூறியுள்ளார்.