வசூலில் புதிய சாதனை படைத்த நேர்கொண்ட பார்வை : திரைவிமர்சனம்!!

நேர்கொண்ட பார்வை

போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தைராங் ஆகிய மூவரும் கான்சர்ட் ஒன்றில் கலந்து கொள்கிறார்கள். அங்கே அர்ஜூன் சிதம்பரம், அஸ்வின் ராவ், ஆதிக் ரவிச்சந்திரன், மூவரையும் சந்திக்கின்றனர்.

பெண்கள் யதார்த்தமாக பழக, அந்த ஆண்கள் அதனை அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு 3 பெண்களையும் த வறாக அணுகுகின்றனர். அவர்களை ப லமாக தா க்கிவிட்டு அங்கிருந்து த ப்பிச் செல்லும் 3 பெண்களையும், ப ழி தீர்க்க வேண்டும் என்பதற்காக ஷரத்தாவை கடத்தி பா லியல் து ன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர்.

பா லியல் து ன்புறுத்தல் செய்த பலம் பொருந்திய அர்ஜூன் சிதம்பரம் மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிராக ஷரத்தா தனது தோழிகளுடன் வ ழக்கு பதிவு செய்கிறார். ஆனால், அது அவர்களுக்கே வினையாக மாற, 3 பெண்கள் மீது த வறான பிம்பம் சித்தரிக்கப்படுகிறது.

இதனால் ஆதரவற்று செய்தவறியாமல் திகைக்கும் பெண்களுக்கு ஆதரவாக ஆ பத்பாந்தவனாக களமிறங்குகிறார் பரத் சுப்ரமணியம் எனும் வழக்கறிஞரான அஜித் குமார். அஜித் குமாரின் நேர்த்தியான வாதத்தால் பா திக்கப்பட்ட மூன்று பெண்களுக்கும் நீ தி கிடைத்ததா இல்லையா என்பதே இந்த படத்தின் கதை.

வழக்கறிஞராக சீரான மன நிலையில்லாத வே டம் அஜித்துக்கு. மூன்று பெண்களின் பி ரச்சனைகளை கேட்டு உருகுவது, அ நீதிகளுக்கு எதிராக வெ டிப்பது என அஜித்குமாரின் நடிப்பில் நல்ல முயற்சி. அவரது பாடி லாங்குவேஜ் மற்றும் க ம்பீரமான குரல் என ஒரு வழக்கறிஞரை கண்முன் நிறுத்துகிறார். குறிப்பாக “அப்படி எல்லாம் நடக்காது. நடக்கவும் கூடாது” என்று அவர் சொல்லும் காட்சி மாஸ். ஒரு வழக்கறிஞராக மட்டுமில்லாமல் அன்பான கணவராகவும், அட்டகாசம் செய்யும் ஆ சாமிகளை, படத்தின் ஒரே ஒரு ச ண்டைக் காட்சியில் அ டித்து துவைப்பதும் என மி ரட்டியிருக்கிறார்.

அஜித்திற்குரிய காதல் மற்றும் ச ண்டைக் காட்சிகள் படத்தின் டிராக்கில் இருந்து பெரிதும் மாறாமல் கச்சிதமாக இடம்பெற்றுள்ளது. தனக்கு ஏற்பட்ட பா திப்பை வெளியே சொல்லமுடியாமல் கூச்சம் ஒரு பக்கம், அதனால் ஏற்படும் கோ பம் மறுபக்கம் என இரட்டை மனநிலையை சரியாக கையாண்டிருக்கிறார் ஷரத்தா ஸ்ரீநாத்.

எதிர்தரப்பு வக்கீலாக தனது அழுத்தமான குரலை பதிவு செய்யும் ரங்கராஜ் பாண்டேவிற்கு இந்த படம் நல்ல அறிமுகம் என்று சொல்லலாம். மேலும் வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி , ஆண்ட்ரியா என அனைவரும் தங்களின் வே டத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் யுவன் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். குறிப்பாக யுவனின் இசையால் காட்சிகள் மேலும் உ யிர் பெறுகின்றன. நீதிமன்ற பின்னணியில் நடக்கும் பெரும்பாலான காட்சிகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.

நாட்டில் பெண்களுக்கு எ திரான கு ற்றங்கள் குவிந்துக் கொண்டிருக்கும் சூழலில், அதற்கு எ திராக தனது வலுவான குரலை பதிவு செய்திருக்கிறது. பெண்களுக்கு நிகழும் பி ரச்சனைகளுக்கு பெண்களையே கு ற்றவாளிகளாக்கும் சமூகத்துக்கு சா ட்டையடி கொடுக்கிறது இந்த படம்.

மேலும் தங்களுக்கு நிகழும் அ நீதிகளை பெண்கள் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும் என்ற ஆழமான கருத்தை அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் கவனம் ஈர்க்கிறது இந்த நேர்கொண்ட பார்வை.

புதுமுகங்களின் அட்டகாசமான நடிப்பில் தொரட்டி : திரைவிமர்சனம்!!

தொரட்டி

தயாரிப்பாளர் மற்றும் அறிமுக நாயகன் ஷமன் மித்ரு, சத்யகலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தொரட்டி. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழில் செய்பவர்கள் ஹீரோவின் குடும்பத்தினர். அங்கே நிலவும் க டும் வறட்சியினால் அங்கிருந்து இடம் பெ யர்ந்து மதுரைக்கு வருகிறார்கள்.

அங்கே ஹீரோவுக்கு மூன்று தி ருடர்கள் நண்பர்களாகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து கு டி, சூ தாட்டம் என அலைகிறார். இதனால் கவலை கொள்ளும் ஹீரோவின் அப்பா, பலரின் எ திர்ப்பை மீறி உறவினர் மகளை ஹீரோவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

அந்த நேரம் பார்த்து ஒரு தி ருட்டு வழக்கில் ஹீரோவின் நண்பர்களான மூன்று தி ருடர்களும் சி றை செல்கின்றனர். அதற்கு காரணம் நாயகி தான் என்று அவர்களுக்கு தெரிய வருகிறது.

சிறையில் இருந்து வெளியே வரும் தி ருடர்கள் ஹீரோயினை ப ழி தீ ர்க்க எடுக்கும் நடவடிக்கைகள் என்ன ஆனது என்பதே படத்தின் கதை. 1980களில் நடக்கும் கதையில் அந்த காலத்திய கிராமங்களை முடிந்த வரை கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.

கிராமத்து பின்னணி ஹீரோ, ஹீரோயின் என அந்தந்த வே டத்துக்கு சரியான கதாப்பாத்திரத் தேர்வு தான் படத்துக்கு பிளஸ். பெரும்பாலானோர் முடிந்த வரை நடிகர்களும் தங்களால் இயன்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

வேத் ஷங்கருடைய பாடல்கள் படத்தோடு பார்க்கும் போது நன்றாக இருந்தது. ஜித்தின் கே. ரோஷனின் பின்னணி இசையும் படத்துக்கு துணை புரிந்திருக்கின்றன. ஒளிப்பதிவில் இன்னும் சற்றும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஆடு மேய்ப்பவர்ளின் வாழ்வியல், அவர்களுடைய மொழி மற்றும் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை என இயல்பாக கதை நகர்கிறது. படத்தில் வரும் பெரும்பாலான தி ருப்பங்களை முன் கூட்டியே கணிக்க முடிகிறது.

மேலும் மற்ற எல்லா விஷயங்களிலும் தெளிவானவராக காட்டப்படும் ஹீரோ, பணத்துக்காக தான் தன்னிடம் மூன்று தி ருடர்களும் பழகுறார்கள் என்று தெரியாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் கதையை இயல்பாக சொன்னவிதத்தில் கவனம் ஈர்க்கிறது இந்த தொரட்டி
ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொன்ன விதத்திற்காக இந்த தொரட்டியை ஒரு முறை பார்க்கலாம்.

பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போதே காதலியுடன் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன்!!

பிக்பாஸ் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரம் தான் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக வலம் வந்தவர் தர்ஷன். இவர் வனிதாவை எதிர்த்து பேசியதிலிருந்து யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கிறார் என்று மக்களிடையே அதிகளவில் பேசப்பட்டு வந்தார்.

இவருக்கென தனியாக ஆர்மி தொடங்கப்பட்டது. இதனால் கமலின் பாராட்டையும் அவர் பெற்றார். எனவே, அவரே இறுதி போட்டியாளராக வெற்றி பெறுவார் என பிக்பாஸ் வீட்டிலிருக்கும் பலரே கூற தொடங்கி விட்டனர்.

இந்நிலையில், அவர் நடிக்கவுள்ள ஒரு திரைப்படம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. ரீலீங் பக்ஸ் புரடெக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டேட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில்தான் தர்ஷன் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ‘மேகி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தர்ஷனின் நிஜமான காதலியான சனம் ஷெட்டியே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவலாகும்.

ஏற்கனவே, சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனுடன் அவர் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்திலேயே இத்தனை கோடி சம்பளமா? அதிர்ச்சியில் சினிமா உலகம்!!

ஷ்ரத்தா கபூர்

திரிஷா, நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளையே மிஞ்சும் வகையில் நடிகை ஒருவர் முதல் படத்திலேயே 7 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.

அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற ஒரு சில முன்னணி நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களும் 3 முதல் ரூ.4 கோடிக்குமேல் வாங்கியதாக தெரியவில்லை.

இவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் படத்திலேயே அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார் ஷ்ரத்தா கபூர். பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஷ்ரத்தா.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்து இறுதிகட்ட பணி நடக்கிறது. இம்மாத இறுதியில் ரிலீசாகிறது. வழக்கமாக இந்தி படங்களில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் ஷ்ரத்தா, சாஹோ படத்துக்காக ரூ.7 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

இந்த தகவல் கேட்டு டாப் நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். அதேபோல் இப்படத்தில் நடித்திருக்கும் பிரபாசும் முன்னணி ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

இவர் சம்பளமாக வாங்கிக்கொள்ளாமல் பட விற்பனையில் பங்கு என்ற வகையில் ரிலீசுக்கு முன்பாக ரூ.100 கோடியை தன் பங்காக பெறுகிறாராம்.

கு டிபோ தையில் நடிகையை அடித்த கணவர் கைது!!

நடிகை ஸ்வேதா திவாரி

 குடிபோ தையில் அடித்து து ன்புறுத்துவதாக பிரபல இந்தி கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர் பல இந்தி டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஸ்வேதா திவாரியும், இந்தி நடிகர் ராஜா சவுத்ரியும் நீண்ட நாட்களாக காதலித்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

இந்த நிலையில் இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 9 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு பாலக் என்ற மகள் இருக்கிறார்.

அதன்பிறகு இந்தி நடிகர் அபினவ் கோலிக்கும், ஸ்வேதா திவாரிக்கும் காதல் மலர்ந்தது. 2013-ம் ஆண்டு அபினவ் கோலியை ஸ்வேதா திவாரி 2-வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

அபினவ்வுக்கு கு டிப்பழக்கம் இருந்தது. தினமும் போ தையில் வீட்டுக்கு வந்து ஸ்வேதா திவாரியுடன் ச ண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டது.

குடும்பத்தினர் சமரசம் செய்துவைக்க முயற்சித்தும் பலன் இல்லை. இந்த நிலையில் கணவர் அபினவ் மீது ஸ்வேதா திவாரி மும்பை காந்திவிலி போலீசில் புகார் செய்தார்.

புகார் மனுவில் அபினவ் தன்னையும், தனது மகளையும் தினமும் குடித்துவிட்டு வந்து போ தையில் அ டித்து து ன்புறுத்துகிறார் என்று கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினவ்வை கைது செய்தனர்.

லிப் கிஸ் அடிக்கும் ராகுல் ப்ரீத் சிங் : வைரலான புகைப்படத்தால் எழுந்த ச ர்ச்சை!!

ராகுல் ப்ரீத் சிங்

பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் தெலுங்கில் மன்மதுடு 2 என்ற படத்தை இயக்கியுள்ளார்.

நாகர்ஜுனா மற்றும் ராகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன.

படத்தில் பல காட்சிகளை சென்சார் நீக்கியுள்ளது ஆனால் வெளிநாடுகளில் அப்படியே தான் வெளியாகியுள்ளது. ஒரு காட்சியில் படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங், நடிகை ஜான்சிக்கு லிப் லாக் மு த்தம் கொடுக்கிறார்.

அந்த வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக உங்களது கணவர் என்ன இப்படியெல்லாம் படம் எடுத்திருக்கிறார் என்று சின்மயியை கேள்வி கேட்டு வருகின்றனர்.

வெ டித்தது ச ண்டை, பிக்பாஸ் வீட்டில் சேரை வைத்து தா க்குதல், ஷாக் ஆன பார்வையாளர்கள்!!

பிக்பாஸ் வீட்டில்

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பெரிய ப ரபரப்பை உண்டாக்கி வருகின்றது. அந்த வகையில் இன்று பிக்பாஸ் ப்ரோமோ ஒன்றில் பலரும் ஷாக் ஆகும்படி ஒன்று நடந்துள்ளது.

முகென் மற்றும் அபிராமியிடையே தற்போது மெல்ல அவர்கள் உறவில் விரிசல் விட்டு வருகின்றது, அப்படியிருக்க நேற்று வனிதா இனி முகெனை நம்பாதே என்றே சொல்லிவிட்டார்.

அதை தொடர்ந்து இன்று வந்த ப்ரோமோவில் இருவருக்கு வா க்குவாதம் முற்றியது, ஒரு கட்டத்தில் சேரை தூக்கி அ டிக்க சென்றுவிட்டனர்.

இதை பார்த்த போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளருக்கும் கடும் ஷாக் தான்.

ஆர்த்தியால் அழகாகும் வீடு : காதல் மனைவி பற்றி சிவகார்த்திகேயன் உருக்கம்!!

சிவகார்த்திகேயன் உருக்கம்

வெற்றியடைவது முக்கியமல்ல. அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் பெரும் சவால் என்று கூறுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தோள் கொடுப்பவரே உற்ற துணை. என் அம்மா எனக்குத் தந்த மிகப் பெரிய பரிசு ஆர்த்தி. எத்தனை வருடங்கள் கழித்துக் கேட்டாலும் இது மாறாது.

என் தாய்மாமாவின் மகள்தான் ஆர்த்தி என்றாலும் இருவரும் அவ்வளவாகப் பேசிக்கொண்டதில்லை. நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்துவிட்டு, “மாமா பெண்ணைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறேன்பா” என்று சொன்னார் அம்மா.

திருமணமாகும் போது எனக்குப் பெரிய வசதி இல்லை. ஆனால், ஆர்த்தி வசதியான குடும்பத்துப் பெண். அப்போதும் சரி, இப்போதும் சரி அவர் எதையுமே வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்.

எனக்கு இதெல்லாம் வாங்கிக் கொடுங்க எனக் கேட்டதே கிடையாது. எங்களுக்குத் திருமணமாகும்போது ஆர்த்திக்கு 21 வயது. பொறியியல் படித்திருந்தார். ரொம்ப சீக்கிரமே திருமணம் செய்து கொண்டுவிட்டோமோ என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு.

ஆராதனா பிறந்த நாளை எங்கள் இருவராலும் மறக்க முடியாது. என்ன குழந்தை பிறந்தாலும் சந்தோஷம் என அவர் நினைத்தார். பெண் குழந்தையாக இருந்தால் கூடுதல் சந்தோஷம் என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்தபடியே ஆராதனா கிடைத்தாள்.

எங்களது திருமண வாழ்க்கையை ஆராதனாவுக்கு முன், பின் எனப் பிரிந்துக்கொள்ளலாம். முன்பு நான் மட்டுமே இருந்தேன். இப்போது ஆர்த்தி மேடம், குழந்தை வளர்ப்பில் பயங்கர பிஸி.

இப்போ நாமதான் போன் செய்து அவர்களுடைய வேலையை கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. நீண்ட நாட்கள் படப்பிடிப்பு என்றால் இடைப்பட்ட நேரத்தில் பேசிக்கொள்வோம். ஆராதனாவிடம் பேச வேண்டுமே, இல்லையென்றால் மேடம் கோபித்துக்கொள்வார்.

என் நண்பர்கள் குழுவில் எனக்குத்தான் முதலில் திருமணமானது. திருமணமான புதிதில் என் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ஒரே நேரத்தில் 12 பேருக்குச் சமைத்துக் கொடுப்பார் ஆர்த்தி. மட்டன், சிக்கன் என எதைச் சமைத்தாலும் பிரமாதமாக இருக்கும். சமையலில் புதிதாக ட்ரை பண்ணுவது அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

திருமணத்துக்குப் பிறகு ஆர்த்தியின் முதல் பிறந்த நாளுக்கு என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டேன். எல்லாம் சினிமா பாணியில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தத்தான். வீட்டின் சுவர் ஏறி குதித்து, பால்கனி கதவு வழியாக வீட்டுக்குள் கேக் எடுத்துச் சென்றேன்.

என்னைப் பார்த்ததும் பயந்து அழுதுவிட்டார். அவர் அழ ஆரம்பித்தவுடன் எனக்குப் பயமாகிவிட்டது. அன்றைக்கு வந்திருந்த நண்பர்களும் என்னப்பா ஆச்சு என்று பதறிக் கேட்க, அதிலிருந்து அவரை சர்ப்ரைஸ் செய்வதை நிறுத்திவிட்டேன். என்ன நடந்தாலும் அப்படியே சொல்லிவிடுவேன்.

திரையுலகில் நுழைந்தவுடன் ஆரம்பத்தில் சிறிய வதந்தியில்கூடச் சிக்கவில்லை. ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளேன் என்ற பெரிய வதந்தியில்தான் சிக்கினேன். அப்போது அவர் குழந்தையைச் சுமந்துகொண்டிருந்ததால் ரொம்ப வருந்தினேன், பயந்தேன்.

இந்த நேரத்தில் இந்த வதந்திச் செய்தியைப் படித்தால் என்ன நினைப்பார் என்று நினைத்து அதை அவரிடமிருந்து மறைத்தேன். அடுத்த நாள் அவராகவே, “என்னங்க இப்படியொரு செய்தி வந்துருக்கு?” என்று ரொம்ப யதார்த்தமாகக் கேட்டார்.

அப்போதுதான் எதையுமே நேரடியாக எதிர்கொள்ளக்கூடிய பெண் அவர் என்பது புரிந்தது. “சினிமாத் துறையில் இருந்தால் இதெல்லாம் வரும் என்று தெரியும், பார்த்துக்கொள்ளலாம்” என்று எனக்கு ஆறுதல் சொன்னார்.

அவரது பேச்சுக்குப் பிறகு எனக்குப் பொறுப்பு அதிகமானதுபோல் உணர்ந்தேன். திரைத்துறையில் நுழைந்திருந்த நேரத்தில் இப்படி அவர் சொன்னது ஒரே நேரத்தில் அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

எது உண்மை, எது பொய் என்று புரிந்துகொள்ளக்கூடிய மனைவி நமக்குக் கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ந்தேன். எனது வருமானவரி தொடர்பான வேலைகளை ஆர்த்திதான் கவனித்துக்கொள்கிறார். கடந்த ஆண்டு நான் அனைத்து வரியையும் சரியாகக் கட்டியுள்ளேன் என்று வருமான வரித் துறையில் ‘தங்கச் சான்றிதழ்’ கொடுத்தார்கள். நான் மட்டுமே பார்த்திருந்தால்கூட, சரியாகப் பார்த்துக் கட்டியிருப்பேனா என்று தெரியவில்லை.

இவ்வளவு நேர்த்தியாகச் செய்திருக்கிறாரே என்று ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவர் எனக்குக் கொடுத்த பரிசாக நினைத்து, அதை வீட்டில் ஃபிரேம் செய்து மாட்டியிருக்கிறேன்.

நாம் வரியைச் சரியாகக் கட்ட வேண்டும் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், வீட்டில் குழந்தை வளர்ப்புக்கு இடையே அனைத்தையும் சரிபார்த்து, சரியாக வரியைச் செலுத்தி ‘தங்கச் சான்றிதழ்’ பெற்றுக் கொடுப்பது சாதாரண விஷயமல்ல. வீட்டு விஷயங்களைப் பொறுத்தவரைக்கும் ஆர்த்திதான் எல்லாமே. அவர்தான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்துகொண்டிருக்கிறார்.

வீட்டில் என்ன நடக்கிறது என்ற டென்ஷன், பிரஷர் எதுவுமே இல்லாமல் படப்பிடிப்புக்கு நான் போய்வர ஆர்த்திதான் காரணம். வீட்டை எப்போதுமே ஜாலியாகவே வைத்திருப்பார். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது என்னிடம் கேட்டுக்கொள்வார்.

படப்பிடிப்புக்கு வெளியூர் சென்றால் ஒரு மாதம் வீட்டுக்கு வர முடியாததுதான் சிரமம். முன்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருக்கு ஓடிக்கொண்டிருப்பேன். ஒரு மாதம் வேலை செய்துவிட்டு, ஒரு வாரம்கூட வீட்டில் இருந்தது கிடையாது. அப்போதெல்லாம் அதைப் புரிந்து நடந்துகொண்டார்.

என்னை இந்த ஊருக்குக் கூட்டிட்டுப் போ, இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று இதுவரை ஆர்த்தி சொன்னதில்லை. மனைவியையும் மகளையும் பார்க்காமல் இருக்க முடியாது என்பதால் நானே அவர்களை வெளியூர்களுக்கு வரவழைத்துவிடுவேன். மற்றபடி நான் வீட்டிலிருந்தால் அவருக்குப் போதும்.

பொதுவாகவே எந்த மாதிரியான கதைகளில் நடித்துவருகிறேன், நடிக்கப்போகிறேன் என்பதை அவருடன் விவாதிப்பேன். படப்பிடிப்புக்கும் அவர் வருவதால் வேலையில் உள்ள ப்ளஸ், மைனஸைத் தெரிந்துவைத்துள்ளார்.

வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் அபிராமி : இவர்தான் காதலரா?

அபிராமி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.


விளம்பர மாடலான அபிராமி தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆரம்பத்தில் கவினை காதலிப்பதாக கூறியிருந்தார். எனினும், முகேனுடன் நட்பாக பழகிய அவர் பின்னர் முகேனை காதலிக்க தொடங்கிவிட்டார்.

ஆனால் முகெனுக்கு அபிராமி மிது துளியும் காதல் இல்லை. அபிராமியுடன் நட்பாகவே பழகுவதாக முகேன் பல முறை கூறிவிட்டார். இந்நிலையில் அபிராமி வேறு ஒரு ஆணுடன் நெருக்காமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் அந்த புகைப்படத்தில் யூ ஆர் மைன், என்றும் ஹேப்பி பர்த்டே பேபி என்றும் பதிவிடப்பட்டுள்ளது. அது மாத்திரம் இன்றி ,இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, இது தான் அபிராமியின் காதலரா என்று எண்ணம் தோன்றுகிறது.

அதே போல இந்த புகைப்படத்தையும் அபிராமி பதிவிட்டாரா இந்த அந்த நபர் பதிவிட்டாரா என்பது தான் தெரியவில்லை. எனினும், இதனை பார்த்த நெட்டிசன்கள் அபிராமியை திட்டி வருகின்றனர்.

பிக்பாஸ் அபிராமியின் உண்மை முகம் முகேனால் தான் வெளிப்படும் : எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி அதிரடி!!

பிக்பாஸ் அபிராமி

நடிகர் ஆர்யா கலந்துகொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபர்ணதி. இவர் அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை சென்றார்.

இவர் சமீபத்தில் பிக்பாஸ் குறித்து அளித்துள்ள பேட்டியில், நான் பிக்பாஸை விட்டு வெளியேறினாலும், நான் முகனிடன் இப்போது எப்படி இருக்கிறேனோ? அப்படி தான் இருப்பேன். எப்போதும் மாறமாட்டேன் என்று சொல்வது போல் எல்லாம் அபிராமியால் இருக்க முடியாது. நானும் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் போது அப்படி இருப்பேன், இப்படி இருப்பேன் என்றெல்லாம் கூறினேன்.

ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமாகவில்லையே, இதே முகன் கொஞ்சம் அபிராமியிடம் பேசாமல் விலகி நிற்க சொல்லுங்கள், அப்போது தெரியும் அபிராமியின் இன்னொரு முகம் என்று கூறியுள்ளார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளர்கள் நான்கு பெண்களுடன் சுற்றுவதை நாம் விளையாட்டாக பார்க்கிறோம், ஆனால் அதுவே பெண் என்றால் அவளை ஐட்டம் என்று கூறுகிறோம். கஸ்தூரி கவீனிடம் கேட்டது சரியான கேள்வி தான் என்று கூறினார்.