லிப் லாக் முத்தம் : ஊருக்கு உபதேசம் செய்த சின்மயியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

ஊருக்கு உபதேசம் செய்த சின்மயி

சின்மயி தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஆவேசமாக குரல் கொடுத்து வருகிறார். வைரமுத்து மீது #metoo புகாரை முன்வைத்து தமிழ் திரையுலகில் பெரிய சலசலப்பை உருவாக்கினார்.

அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் சில யூடியூப் விமர்சனங்களை கடுமையாக எதிர்த்திருந்தார்.

எந்த பெண்ணாக இருந்தாலும் வேண்டாம் என்று சொன்னால் அவர்களை தொந்தரவு செய்வது குற்றம் தான் என ஆணித்தரமான கருத்தை இந்த நேர்கொண்ட பார்வை படம் எடுத்துரைத்தது. இதற்கான எதிர்மறையான விமர்சனங்களை சின்மயி எதிர்த்தார்.

இந்நிலையில் சின்மயின் கணவர் ராகுல் இயக்கத்தில் இன்று வெளியான தெலுங்கு படம் ‘மன்மதடு2’ . இந்த படத்தில் நாகா அர்ஜூன், ராகுல் பரீத் சிங் மற்றும் ஜான்சி ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்தில் தேவையற்ற இரட்டை அர்த்த வசனங்கள், நடிகைகள் ஒருவருக்கு ஒருவர் முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இது தான் நீங்கள் சொன் பெண் உரிமையா, நமது கலாசாரமா என தெலுங்கு ரசிகர்கள் பலர் சின்மயை ட்விட்டரில் #deeplydisturbing என்ற ஹேஷ்டேகில் விளாசி வருகின்றனர்.

திருமணமான ஆணுடன் தொடர்பு : உருக்கமாக பேசிய நடிகை ஆண்ட்ரியா!!

நடிகை ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் பாடகியாக நுழைந்து பிறகு நடிகையானவர் ஆண்ட்ரியா. அவர் பற்றி சர்ச்சைகளுக்கு என்றுமே பஞ்சமிருந்ததில்லை.

இருந்தாலும், அவ்வபோது தான் நடிக்கும் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுபவர், தற்போது சொல்லும்படியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

இந்த நிலையில், திருமணமான ஆணுடன் ஆண்ட்ரியா தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்த காலத்தை அவர் இருண்ட காலமாக பார்த்ததோடு, அக்காலத்தில் பெரும் சோகத்தில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

தற்போது தனது தகாத தொடர்பினால் ஏற்பட்ட சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதை கவிதையாக எழுதிருக்கும் ஆண்ட்ரியா, ’முறிந்த சிறகுகள்’ என்ற பெயரில் அதை கவிதை தொகுப்பாகவும் எழுதியிருக்கிறார்.

மேலும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதித்திருந்தது, என்று கூறியிருக்கும் ஆண்ட்ரியா, நான் திரும்ப வந்துள்ளேன், என்று தான் நடிக்க ரெடியாக இருப்பதையும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகரை அந்த இடத்தில் பிடித்த டாப்ஸி : இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகை டாப்ஸி இவர் பெண்கள் மீது இடம்பெறும் கொ டுமைகளுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுப்பவர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வந்த இவர் சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் ஹிந்தி பக்கம் சென்றார்.

ஹிந்தி ரசிகர்கள் பற்றி சொல்லவா வேண்டும். நடிகை ஒல்லியாக இருந்தால் போதும் அவரை கொண்டாடுவார்கள். அந்த வகையில், நடிகை டாப்சிக்கும் ஏக வரவேற்பு. அது மட்டுமின்றி.

இவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆகிவிட பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக மாறிவிட்டார்.

இந்நிலையில், இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ஒரு படத்தில் கார் ஓட்டும் காட்சி ஒன்றில் கார் கியருக்கு பதிலாக அருகில் அமர்ந்திருக்கும் நாயகனை அந்த இடத்தில் பிடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் டாப்ஸி-யை கழுவி ஊத்தி வருகிறார்கள்.

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் இவர் தான்!!

இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர்

பிக் பாஸ் சீசன் 3 யில் வைல்ட் கார்டு மூலம் நடிகை கஸ்தூரி எண்ட்ரியாகியிருக்கிறார். அவர் வந்த முதல் நாளில் இருந்தே அதிரடியை காட்ட போட்டி சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதற்கிடையே இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ரவுண்டுக்கான நாமினேட் பட்டியலும் வெளியாகியுள்ளது.

அதில், லொஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். ஏற்கனவே பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் ஆகியோர் எலிமினேஷ் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆகப் போவது யார்? என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்த வாரம் சாக்‌ஷி தான் எலிமினேட் ஆகப் போகிறார். காரணம், கடந்த வாரத்தில் இருந்தே அவருக்கு மக்களின் வாக்குகள் குறைந்து வருகின்றது. மேலும், லொஸ்லியா ரசிகர்களின் பேவரைட் என்பதால், அவரை பிக் பாஸ் வெளியேற்ற மாட்டார். அதே சமயம், அபிராமி குறித்து பெரிதாக எந்த புகாரும் இதுவரை எழவில்லை.

அதே சமயம், சாக்‌ஷி சீக்ரெட் ரூமுக்கு அனுப்ப படலாம், என்றும் பேச்சு அடிபடுகிறது.

ஹீரோவை அந்த இடத்தில் பிடித்த நடிகை டாப்ஸி : வைரலாகும் வீடியோ!!

வைரலாகும் வீடியோ

இந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகை டாப்ஸி இவர் பெண்கள் மீது இடம்பெறும் கொடுமைகளுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுப்பவர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வந்த இவர் சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் ஹிந்தி பக்கம் சென்றார். ஹிந்தி ரசிகர்கள் பற்றி சொல்லவா வேண்டும்.

நடிகை ஒல்லியாக இருந்தால் போதும் அவரை கொண்டாடுவார்கள். அந்த வகையில், நடிகை டாப்சிக்கும் ஏக வரவேற்பு. அது மட்டுமின்றி, இவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆகிவிட பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக மாறிவிட்டார்.

இந்நிலையில், இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ஒரு படத்தில் கார் ஓட்டும் காட்சி ஒன்றில் கார் கியருக்கு பதிலாக அருகில் அமர்ந்திருக்கும் நாயகனை அந்த இடத்தில பிடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் டாப்ஸி-யை கழுவி ஊத்தி வருகிறார்கள்.

காதலனுக்காக வீட்டை விட்டு ஓடிய தேவயானி : இந்த ரகசியங்கள் தெரியுமா?

வீட்டை விட்டு ஓடிய தேவயானி

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளில் இடம்பிடித்தவர் தேவயானி, கொஞ்சும் அழகாலும், அசத்தலான நடிப்பாலும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியவர் என்றே சொல்லலாம். புகழின் உச்சத்தில் இருக்கும் போதே காதலுக்காக வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

அழகான வீடு, கணவர் ராஜகுமாரன், மகள்கள் இனியா மற்றும் பிரியங்காவுடன் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறும் தேவயானிக்கு, அந்தியூர் தாலுக்காவில் சின்ன மங்களம் கிராமத்தில் தோட்டத்துடன் கூடிய வீடொன்று உள்ளதாம்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்துடன் அங்கே சென்று ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளாராம். அந்த இடத்தை வாங்கி வீடு கட்டியவுடன் ”தேவயானி தோட்டம்” என்றே பெயர் வந்துவிட்டதாக கூறுகிறார்.

சாப்பாடு என்றதுமே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர் அம்மா தான், தேவயானிக்கும் அம்மாவின் சமையல் என்றால் அலாதி பிரியமாம், அதிலும் ரசம் சாதம் தான் தனக்கு பிடித்தமான ஒன்று என்கிறார்.

அசைவ உணவுகளில் பிரியாணியும், மீன் குழம்பும் பேவரைட், எந்த வேளை ணவாக இருந்தாலும் தயிர் சாதத்துடன் தான் முடிப்பாராம். வெளிநாடுகளை பொறுத்தவரையில் சுவிட்சர்லாந்து தான் தேவயானிக்கு நெருக்கமான ஒன்றாம், எழில் கொஞ்சும் அழகால் சொக்கிப் போன தேவயானி இரண்டு முறை அங்கு சென்று வந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

தேவயானி பாட்டியின் செல்லமாம், அப்பாவோட அம்மா பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்பதுடன் தன்னுடைய சிறு வயது ரோல் மாடலே பாட்டி தான் என்கிறார். வீட்டில் ஒருவராக வளர்க்கப்பட்ட போமரேனியன் வகையை சேர்ந்த நாய்க்குட்டி, 17 வருடங்களாக எங்களுடனேயே இருந்த பாமி, ஒருநாள் இறந்தது மிகுந்த மனவலியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறார் தேவயானி.

சீரியல்களில் மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பது கோலங்கள், எத்தனை வருடங்கள் கடந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத நெடுந்தொடர், அதில் தான் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்கிறார். மீண்டும் எப்போது சீரியலில் தலைகாட்டுவீர்கள் தேவயானி என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

தினமும் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த நடிகர் : வேதனையில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

விபரீத முடிவு

பிரபல சின்னத்திரை நடிகரான மது பிரகாஷின் மனைவி திடீரென த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் சின்னத்திரையின் மூலம் பிரபலமடைந்து புகப்பெற்ற பாகுபலி படத்தில் சிறிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் மது பிரகாஷ்.

இவர் கடந்த 2015ம் ஆண்டு பாரதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு சின்னத்திரையிலும் நடித்து வருவதால், மது பிரகாஷ் தினமும் இரவு தாமதமாக வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

மாமியாருடன் தனிமையில் வீட்டில் இருந்து வந்த பாரதிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் பெரும் வருத்தத்தில் இருந்த பாரதி அடிக்கடி கணவருடன் ச ண்டையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மது பிரகாஷ் தனது மனைவியிடம், ஜிம்மிற்கு செல்வதாகவும், பின்னர் அங்கிருந்து சீரியல் செட்டிற்கு நடிக்க செல்வதாகவும் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து கணவருக்கு போன் செய்த பாரதி, வீட்டிற்கு திரும்பி வரும்படி கேட்டார். அப்படி வரவில்லை என்றால் த ற்கொ லை செய்துகொள்வேன் எனவும் மி ரட்டியுள்ளார். இரவு 7.30 மணியளவில் மது பிரகாஷ் வீடு திரும்பியபோது, பாரதி தூ க்கில் ச டலமாக தொங்கியுள்ளார்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பாரதியின் உ டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொறுப்பில்லாத விஜய்? இப்படியா நடந்துகொள்வது?

பொறுப்பில்லாத விஜய்?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கிவருகிறார். அவரது ரசிகர்கள் அவரை ஒவ்வொரு படத்திலும் நோட்டமிட்டு அவர் செய்யும் செய்கைகளை பின்பற்றி வருகிறார்கள்.

அப்படி இருக்க தான் நடிக்கும் படங்களில் தீங்கை விளைவிக்கும் காட்சிகளில் நடிக்கும் போது ஒரு தடவைக்கு பலதடவை யோசித்து நடிக்கவேண்டுமல்லவா.

அப்படி தான் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சர்க்கார் படத்திலும் அரசாங்கம் கொடுத்த இலவச லேப்டாப், டிவி, மிக்சி , கிரைண்டர் உள்ளிட்டவற்றை நெருப்பில் தூக்கியெறிந்து அதை வீடியோவாக எடுத்தும் இணையத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தனர்.


அந்தவகையில் தற்போது மீண்டும் விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆனது. அதில் விஜய் ஹெல்மெட் இல்லாமல் அதிவேகமாக பைக்கில் செல்கின்றார். இந்த வீடியோவை விஐய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.


இதை பார்த்த பலரும் ஹெல்மெட் கூட அணியாமல் ஒரு முன்னணி நடிகர் இப்படியா செல்வது…இதன் மூலம் தன் ரசிகர்களுக்கு தானே தவறான வழி காட்டுவதாகத்தானே அர்த்தம் என்று கூறி வருகின்றனர்.

லாஸ்லியா ஆட்டம் ஆரம்பமா? எதிராக திரும்பிய போட்டியாளர்கள்!!

லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் செல்லக் குழந்தையாக ஆரம்பத்தில் கருதப்பட்டவர் லாஸ்லியா. அதனால்தான் அவருக்கு முதல் நாளிலேயே சமூக வலைதள பயனாளர்கள் ஆர்மியை தொடங்கினர்.

சக போட்டியாளளிடமும், மக்களிடமும் நன்மதிப்பை பெற்று வந்த லாஸ்லியா கடந்த 2 வாரங்களாக சக போட்டியாளர்களை வெறுப்பேற்றி வருவதாக தெரிகிறது.

குறிப்பாக கடந்த வார முக்கோண காதல் பிரச்சினையில் திடீரென ‘என்னிடம் யாரும் கதைக்க வேண்டாம்’ என்று அவர் கூறியது அவரிடம் நெருக்கமான பழகியவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.

இதனை மனதில் வைத்து இந்த வாரம் லாஸ்லியாவை அனைவரும் நாமினேஷனில் குறி வைத்துள்ளனர். இதுவரை நாமினேஷனில் சிக்காமல் தப்பித்து வந்த லாஸ்லியா இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியுள்ளார்.

அவரை சரவணன், சாக்சி, ஷெரின் உள்பட ஒரு சிலர் நாமினேஷன் செய்துள்ளதால் இந்த வார நாமினேஷன் பட்டியலில் லாஸ்லியா பெயர் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.

இருப்பினும் லாஸ்லியாவுக்கு ஆர்மியின் ஆதரவு அதிகம் இருப்பதால் அவர் அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் முதல் லாஸ்லியாவின் ஆட்டம் ஆரம்பமாவதால் நாமினேஷன் படலம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக ஓட்டுகள் வாங்கப்போவது லாஸ்லியாவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் வெற்றியோ தோல்வியோ லாஸ்லியாவை நிகழ்ச்சியில் கடைசிவரை கொண்டு செல்ல நாம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இப்பொழுதே லாஸ்லியா ஆர்மியினர் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

புதியவர்களின் எப்போ கல்யாணம்!!

எப்போ கல்யாணம்

எப்போ கல்யாணம் என்ற படத்தில் மிஸ்.சவுத் இந்தியா பட்டம் வென்ற சாண்ட்ராமிக்சல், கேபிரியல், லாவண்யா, பூஜா என 4 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இதுகுறித்து படத்தை இயக்கும் ஏ.இருதயராஜ் கூறியதாவது..

பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதை தடம் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு சரியான வழிகாட்ட யாரும் இல்லை. இதனால் பெற்றோரும் ஆசிரியர்களும் அதிகம் கவலை அடைகின்றனர்.

இதற்கு “எப்போ கல்யாணம்” படம் மூலம் தீர்வு காண வழி சொல்லி இருக்கிறோம். காதல், சோகம், நகைச்சுவை என நவரசங்களையும் கோர்த்து உருவாக்கி இருக்கும் படம் என்கிறார்.

படத்தில் 4 நாயகிகளுடன் ரஞ்சித் குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்ன மாலா, வினய்பிரசாத், ஐவன், நிர்மலாதேவி, ஆகியோர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயந்தியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சகோதரர் அரவிந்த் ஜான் விக்டர் இதில் வில்லனாக நடிக்கிறார். ரமேஷ் ஒளிப்பதிவையும், என்.எஸ்.கிருஷ்ணகுமார் இசையையும் கவனித்துக் கொள்கிறார்கள். கீர்த்தி புரொடக்சன் சார்பில் ஷைலா, டாக்டர் கீர்த்தவணி இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.