பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மோகன் வைத்தியா வெளியேற்றப்படுவதாக, கூறப்பட்டதால், உடனே உணர்ச்சிவசப்பட்ட மோகன் வைத்தியா அங்கிருந்த பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வந்தார்.
கண்கலங்கிய படி பெண்கள் பக்கமே சென்றார். இதை அங்கிருந்து கண்ட கமல் போதும்…போதும் இதுக்கு மேல எதுவும் வேண்டாம் என்று அவரை செமையாக நோஸ் கட் செய்ய உடனே மோகன் வைத்தியாவும் ஒன்றும் தெரியாதது போல் தன் கண்களை துடைத்தார்.
இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் கை தட்டி கமலுக்கு சப்போர்ட் செய்தனர். இருப்பினும் இதைக் கண்ட இணையவாசிகள் கமல் சொன்னது உண்மை தான், அந்த ஆளு அப்படி தான், அடுத்த சினேகன் என்று கூறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி லாஸ்லியாவிற்கு எப்படி ஒரு தந்தை போன்று நெற்றியில் முத்தம் கொடுத்தார், அதே போன்று கொடுத்திருக்கலாம், ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி என்ன மாதிரி இதை சொல்றது என்று திட்டியும் வருகின்றனர். அது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் கொடிக் கட்டி பறந்தார். குறிப்பாக தமிழில் நடிகர் விஜய், சூர்யா, விக்ரம் இப்படி பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
நடிகர் சைதன்யாவை திருமணம் செய்த பின்னர் படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
சமந்தா அவரது கணவருடன் இணைந்து நடித்தாலும், மற்ற நடிகர்களுடன் நடிக்கும் போது நல்ல கேரக்டர் உள்ள கதாபாத்திரம் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது நடிகை சமந்தாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சமந்தா ஒருவருடன் படு கவர்ச்சியான உடையில் இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு இது தேவையா எனக் கேட்டு வருகின்றார்கள்.
குஷ்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ள அவரின் டுவிட்டர் பதிவிற்கு ஆதரவு குவிந்து.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ள குஷ்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ள அவரின் டுவிட்டர் பதிவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது.
மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி கடந்த முறை போல, இந்தமுறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாமல் படுதோல்வியடைந்தது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல், அப்பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்.
பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்புவும், மீண்டும் நடிக்க வந்துவிடவா என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, குஷ்பு, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, தாம் மீண்டும் சினிமாவுக்கு வர விரும்புவதாகவும் இது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்குமாறும் அவர் கேட்டிருந்தார்.
குஷ்புவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆதரவு குவிகிறது. மனோபாலா, நடிகை கஸ்தூரி, நீத்து சந்திரா உள்ளிட்டோர், குஷ்பு மீண்டும் சினிமாவிற்கு வர ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதனால் நீங்கள் இப்படி சிந்திப்பது இயல்பானதுதான். அரசியலில் நடிப்பதைவிட சினிமாவில் நடிப்பதற்கு அதிக வாய்புகள் கிடைக்கும் என ஒரு ரசிகர், பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இறந்ததாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் உண்மையில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் ஆர்.எஸ்.கோபால். இவர் வலியுடன் காதல் என்ற படத்தில் நடித்துள்ளதுடன் நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளராகப் பொறுப்பு வகித்தவர். தற்போது இவர் பூதமங்கலம் போஸ்ட் என்ற படத்தில் வட்டம் வரதன் என்ற வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.
அதில் அவர் இறப்பது போன்ற காட்சிக்காகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும், சவபெட்டியில் மாலையுடன் இருப்பது போன்ற தன்னுடைய வீடியோவையும் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
அவர் காயல்பட்டினத்தில் பானை முதல் யானை வரை கிடைக்கும் என்ற பெயரில் கடை வைத்திருந்ததால், அவருக்கு தெரிந்த பலர் ஆர்.எஸ்.கோபால் மரணம் அடைந்ததாகக் கருதி வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த மாலையுடன் சென்றுள்ளனர்.
அப்போது அது நான் நடிக்கும் புது படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் என்று விளக்கமளித்த அவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும் கிழித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் கோபால் இறந்ததாக காயல்பட்டினம் பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனையும் சினிமாவிற்காக ஒட்டியிருக்கலாம் என்று அப்பகுதியினர் கருதியுள்ளனர்.
ஆனால் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.கோபால் உண்மையிலேயே உயிரிழந்தது தாமதமாகவே தெரியவந்தது. அதன்பின்னர் தான் அப்பகுதி மக்கள் ஆர்.எஸ்.கோபாலுக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர்.
சினிமாவுக்காக போலியாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அடுத்த சில நாட்களிலேயே ஆர்.எஸ். கோபால் உண்மையிலேயே இறந்திருப்பது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
சினிமா என்று வந்துவிட்டால் சில நடிகைகள் தங்களது திருமணத்தை தள்ளிப்போடுவார்கள். ஆனால் அமலாபால் அப்படி செய்யாமல் இயக்குனர் விஜய் மீது காதல் வந்ததுமே திருமணம் செய்து கொண்டார், பின் இடையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட பிரிந்தனர்.
இந்த நிலையில் இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்களுக்கும் டாக்டருக்கும் திருமணம் நடந்துள்ளது. உடனே ரசிகர்களின் கவனம் அமலாபால் பக்கம் திரும்பியது.
ஆனால் அவரோ திருமணம் குறித்து எதுவும் தெரிவிக்காமல் தான் நடித்துள்ள ஆடை படம் குறித்து டுவிட்டுகள் போட்டு வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இப்போட்டியின் முதல் எலிமினேஷனில் நடிகை பாத்திமா பாபு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறப் போவது யார்? என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களுக்கு நிகழ்ச்சி குழுவினர் பல விதிமுறைகளை எழுத்துப் பூர்வமாக போட்டு, அவர்களிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படி போடப்படும் விதிமுறைகளில் போட்டியாளர்கள் சம்பளம் குறித்து எந்த இடத்திலும் பேசக் கூடாது, என்பது முக்கியமானதாகும்.
ஆனால், இந்த விதிமுறையை பிக் பாஸின் ஹீரோவாக திகழும் வனிதா, தற்போது மீறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, விஜய் டிவியை கோபமடைய செய்திருக்கிறது.
அதாவது, பிக் பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களுக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு தொகை சம்பளம் என்று பேசப்படுதாக கூறப்படுகிறது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பேசுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த இரண்டில் எது நிஜம் என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம் நிலவி வந்த நிலையில், அந்த குழப்பத்தை போக்கும் விதமாக, வனிதா பிக் பாஸின் சம்பள ரகசியத்தை கூறியிருக்கிறார். தற்போது பிக் பாஸ் வீட்டில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிப்பது போன்ற டாஸ்க்குகளை போட்டியாளர்கள் செய்து வருகிறார்கள்.
அதன்படி, கொலையாளி வனிதா தான் என பார்வையாளர்களுக்கு தெரிந்தாலும், வனிதா, முகேனை தவிர வேறு எந்த போட்டியாளர்களுக்கும் தெரியாததால் போலீஸ் குழு திணறுகிறது.
இதனால் டென்ஷனான சேரன் ஆவியாகவுள்ள சாக்ஷி, ஷெரின், மோகன் வெயிலில் மிகவும் கஷ்டப்படுவதால் இந்த டாஸ்க்கை இப்படியே விட்டுவிட வேண்டும் என பிக்பாஸிடம் கூறுகிறார்.
இதற்கிடையில் குறுக்கிடும் வனிதா, ”நாம் பிக்பாஸ் கேம் விளையாட்டிற்கு வந்திருக்கிறோம், குறிப்பிட்ட சம்பளம் பேசி வந்திருக்கோம். அதை மறக்காதீர்கள்” என தெரியாமல் உளறியுள்ளார்.
வனிதாவின் இந்த ஓவர் வாயால் பிக் பாஸ் விதி மீறப்பட்டதோடு, ரசிகர்களுக்கு இதுவரை தெரியாத சம்பள ரகசியமும் தெரிந்துவிட்டது.
பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளை செய்து முடித்தால், மட்டுமே அடுத்தடுத்த டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுப்பார்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் டாஸ்க்கில், ஷெரீன், ஷாக்சி மற்றும் மோகன் வைத்தியா ஆகியோரை கொலை செய்த குற்றவாளி, யார் என்பதை தான் கவீன், சாண்டி மற்றும் மீரா குழு கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால் டாஸ்க் துவங்கி 3 நாட்களை கடந்துவிட்டதால், ஷாக்சி, ஷெரீன் மற்றும் மோகன் வைத்தியா வெயிலில் இருக்கிறார்கள், அவர்கள் கஷ்டப்படுகிறார்கள், இந்த டாஸ்க்கை விட்டுவிடுவோம் என்று சேரன் கூறுகிறார்.
ஆனால் கவீன் இத்தனை பட்ட கஷ்டம் வீணாகிவிடும் என்று கூற, அப்போது தீடீரென்று வரும் வனிதா, நாம் பிக்பாஸ் கேம் விளையாட்டிற்கு வந்திருக்கிறோம், குறிப்பிட்ட சம்பளம் பேசி வந்திருக்கிறோம், அதை மறக்காதீர்கள் என்று வனிதா தெரியாமல் உளறிவிடுகிறார்.
இதனால் பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பது தெரியும், ஆனால் அது நாள் கணக்கிலா என்ற சந்தேகம் இருந்த நிலையில், வனிதாவின் இந்த பேச்சு, ஒரு குறிப்பிட்ட தொகையே சம்பளமாக கொடுப்படுவது தெளிவாக தெரிகிறது.
பிக்பாஸ் வீட்டில் தற்போது அடைந்துவந்த கொலைகாரன்-பேய் டாஸ்க் இன்று முடிவுக்கு வந்தது. அப்போது வனிதா கொலைகாரி என அனைத்து போட்டியாளர்களுக்கு காட்டப்பட்டது.
அதன்பிறகு சிறப்பாக டாஸ்க் செய்த மூன்று பேரை தேர்ந்தெடுக்க சொல்லப்பட்டது. அப்போது மோகன், வனிதா, சாக்ஷி ஆகியோரின் பெயர் தேர்வு செய்யப்பட்டது. அவர்கள் மூவரும் அடுத்த வார தலைவர் போட்டியில் பங்கேற்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.
மேலும் சரியாக டாஸ்க் செய்யாத இருவரை தேர்ந்தெடுத்து ஜெயிலுக்கு அனுப்பவேண்டும் என கூறப்பட்டது. அப்போது சேரன் மற்றும் சரவணன் ஆகியோரின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதனால் கோபமான சரவணன் மற்ற போட்டியாளர்கள் கோபமாக திட்டினார். அப்போது லாஸ்லியா நான் ஜெயிலுக்கு போகிறேன் என கூறினார். அதன்பிறகு அவரை வனிதா திட்டியதால் டென்ஸனான ஆவர் பாத்ரூம் சென்று கதறி அழுதார். கவின் அவரை சென்று சமாதானப்படுத்த முயன்றார்.
இதுபற்றிய வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது, நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்துவிட்டது. ஜெயிலுக்கு யார் போகப்போவது என நாளை தான் தெறியவரும்.
பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பது எதுவும் காதல் அல்ல, எல்லாம் செக்ஸ் தான் என பிக் பாஸ் போட்டியாளரே கூறியிருப்பது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வீட்டை விட்டு வெளியேறியவர் மமதி சாரி.
இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக் பாஸ் குறித்த கேள்விகளுக்கு ஓபனாக பதிலளித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
கமல்ஹாசன் நாம் பேசும் தமிழை தான் ஏளனம் செய்வார், ஆனால் அவரே வார்த்தைகளை தேடி தேடி தானே பேசுகிறார். அவர் செய்தால் தவறில்லை நாம் செய்தால் தவறு என விமர்சித்துள்ளார்..
மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்படும் காதல்கள் குறித்து கேட்டதற்கு அங்கு நடப்பது காதல் அல்ல.. செக்ஸ் எனவும் விமர்சித்துள்ளார். மமதி சாரி இவ்வாறு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசாத மக்கள் இல்லை, அந்நிகழ்ச்சி பற்றி எழுதாத டிஜிட்டல் ஊடகங்கள் இல்லை. டிவி பார்க்காத பழக்கம் இல்லாதவர்கள் கூட பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக இரவு டிவி முன்பு ஆஜராகிவிடுகிறார்கள்.
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பாலிவுட்டில் சக்கைபோடு போட, தற்போது தென்னிந்தியாவிலும் பேவரைட் டிவி நிகழ்ச்சியாக உருவெடுத்திருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களின் நடவடிக்கைகளே பல பரப ரப்புகளை ஏற்படுத்த, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றாலும், அந்த நிகழ்ச்சி குறித்து சிலர் கூறும் புகார்களும், முன் வைக்கும் குற்றச்சாட்டுகளும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் செய்வதை விட சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில், பிரபல விஜே ஒருவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வேண்டும் என்றால் செ க்ஸ் டீல் செய்துகொள்ள வேண்டும், என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் கேட்டதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு தொலைக்காட்சி துறையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருப்பவர் ஸ்வேதா ரெட்டி. இவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக புகார் கூறியுள்ளார்.
இது குறித்து ஸ்வேதா ரெட்டி கூறுகையில், “பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளர்களில் ஒருவராக என்னை தேர்வு செய்திருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினார்கள். நானும் சம்மதம் தெரிவித்தேன். பிறகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் எனக்கு போன் செய்து, “உங்களை ஒரு போட்டியாளராக தேர்வு செய்வதால் எனக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.
அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார் என்பது எனக்கு புரிந்துவிட்டது. இதையடுத்து நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்று பாகங்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், தெலுங்கில் முதல் பாகத்தை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்க, இரண்டாம் பகுதியை நடிகர் நானி தொகுத்து வழங்கினார்.
வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் தெலுக்கு பிக் பாஸ் சீசன் 3 யை, நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க இருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.