பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு குவியும் கோடிகள் : இதுவரை வெளிவராத தகவல் இதோ!!

டிவி பார்க்கும் பழக்கம் இல்லாதவர்களையும் டிவி பார்க்க வைத்த பெருமை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உண்டு. அடுத்தவர்களைப் பற்றி அவர்களுக்கே தெரியாமல் பல விஷயங்களை வெளியே கொண்டு வருவது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.

அதிலும், திரையில் வரும் நட்சத்திரங்களின் வேறு ஒரு முகத்தை பார்க்க வேண்டும், என்றால் யாருக்கு தான் ஆர்வம் இருக்காது. அப்படி ஒரு நிகழ்ச்சியாக இருப்பதால் தான் பிக் பாஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் தொடங்கிய நிலையில், இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளிவராத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸில் போட்டியாளர்களாக கலந்துக்கொள்பவர்கள் மக்களிடம் பிரபலமாவது ஒரு புறம் இருந்தாலும், அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு சம்பளமும் வழங்கப்படுகிறது. ஒரு எப்பிசோட்டுக்கு இவ்வளவு சம்பளம் என்று ஒப்பந்தம் போட்டு தான் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், போட்டியாளர்களின் சம்பளம் விஷயத்தில் இருந்த சஸ்பென்ஸ் தற்போது உடைந்திருக்கிறது.

பிக் பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களின் சம்பளம் இவ்வளவு என்று ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டாலும், போட்டியில் யார் அதிகமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி நிகழ்ச்சியை பரபரப்பாக்கிறார்களோ அவர்களின் சம்பளம் உயரும் என்பது அக்ரிமெண்டில் உள்ள சாரம்சமாம்.

அந்த வகையில், பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா பெரும் தொகை சம்பளமாக பெற்ற நிலையில், அவருக்கு அடுத்தபடியாக காயத்ரி ரகுராம், மக்களுக்கு எரிச்சல் வரும் அளவுக்கு நடந்துக்கொண்டு தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டாராம்.

தற்போது ஒளிபரப்பாகும் மூன்றாவது எப்பிசோட்டில் அப்படி யார் செய்கிறார்களோ அவர்களுக்கு அதிகம் சம்பளம் கிடைக்குமாம். மக்கள் தங்களை என்ன தான் திட்டினாளும், தங்களது இமேஜ் டேமஜாகிறது என்பதையெல்லாம் கவலைப்படாமல் போட்டியில் அவ்வபோது சர்ச்சைகளை உருவாக்கினால் அவர்களது சம்பளம் உயரும்.

அதிலும், முதல் இரண்டு சீசனுக்கு இல்லாத அளவுக்கு மூன்றாவது சீசனுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைத்திருக்கிறதாம். கடந்த இரண்டு சீசன்களிலும் 30 க்கும் குறைவான நிறுவனங்கள் ஸ்பான்ஷர் செய்த நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் 3 வது சீசனுக்கு மொத்தம் 69 நிறுவனங்கள் ஸ்பான்ஷர் செய்திருக்கிறதாம்.

ஸ்பான்ஷர் செய்த நிறுவனங்கள் பல கோடிகளை கொட்டி வர, அவை அனைத்தும் போட்டியாளர்களின் செய்கை மற்றும் அவர்களது பர்பாமன்ஸுக்கு ஏற்றவாறு சம்பளமாக வழங்கப்படுமாம்.

மொத்தத்தில், பிக் பாஸ் 3 போட்டியாளர்களுக்கு ஜாக்பாடி அடித்துவிட்டது என்றே சொல்லலாம்.

ஒரு பக்கம் மோதல், மறுபக்கம் காதல் : தொடங்கியது பிக் பாஸ் பரபரப்பு!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், நிகழ்ச்சியின் பேவரைட்டான காதலும், மோதலும் இன்றைய எப்பிசோட்டில் அமர்க்களமாக தொடங்குகிறது.

முதல் இரண்டு பாகங்களை விட தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் வனிதா விஜயகுமார் மீது அனைவரும் பயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம், எப்போதும் சர்ச்சையில் சிக்குவதும், சர்ச்சையாக பேசுவதும் வனிதாவுக்கு சக்கரை பொங்கல் சாப்பிடுவது போல என்பதால், மற்ற போட்டியாளர்கள் வனிதாவை கண்டாலே பீதியடைகிறார்களாம்.

இந்த நிலையில், போட்டியாளர்கள் பயந்தது போல வனிதா தனது ஆட்டத்தை நேற்று முதல் தொடங்கிவிட்டார். போட்டியாளர்கள் அனைவரும் உணவு உண்ணும்போது நடிகை சாக்‌ஷி அகர்வால், தனக்கு இந்த உணவு பிடிக்காது, என்று கூறுகிறார். அதற்கு மற்ற போட்டியாளர்கள் அமைதியாக இருக்க, வனிதாவோ “பிடிக்காதா அல்லது உங்களுக்கு ஒத்துக்கொள்ளாதா?” என்று கேள்வி எழுப்பவதோடு, சாக்‌ஷி அகர்வாலை பேச விடாமல் அவரிடம் கோபமாக “பிடிக்காதா” என்று கேட்கிறர். “என்னை புல்லா பேச விடுங்க” என்று சாக்‌ஷி அகர்வால் கெஞ்சுகிறார்.

இப்படி வனிதாவின் மோதல் ஒரு பக்கம் ஆரம்பித்தாலும், சாக்‌ஷி அகர்வால் தனக்கு ஏற்பட்ட சோகத்தை நடிகர் கவனிடம் சொல்லி வருத்தப்படுவது மறுபக்கம் அரங்கேறுகிறது. மொத்தத்தில், பிக் பாஸின் இன்றை எப்பிசோட்டில் மோதலும், காதலும் அரங்கேறுகிறது.

ஒட்டு மொத்த தமிழர்களையும் கவர்ந்த இலங்கைப் பெண் லொஸ்லியா : அதிர வைக்கும் ட்ரெண்டிங்!!

பிக்பாஸ்-3 கடந்த வாரம் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை தான் பலரும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் இந்த வருடம் இளைஞர்களை குறி வைத்தே ஷெரின், அபிராமி, சாக்‌ஷி அதோடு இலங்கையை சார்ந்த லொஸ்லியா என இளம் பெண்களை களம் இறக்கியுள்ளனர்.

இதில் லொஸ்லியா இலங்கையின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், இந்த பிக்பாஸில் அவருக்கு தான் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது, அவரின் இலங்கை தமிழ், நடந்துக்கொள்ளும் விதம் என அனைவரையும் கவர்ந்துள்ளார்.

பலரும் ஓவியாவிற்கு பிறகு இவர் தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர், பிக்பாஸ் ஷோ தொடங்கும் போது இவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேக்கப் இல்லாமல் இப்படியா : பிரியா வாரியாரை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள்!!

கண் சிமிட்டல் மூலம் ஒரே நாள் இரவில் ஓஹோவென பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியார். இதனால் ஒரு அடார் லவ் படத்தின் ஹீரோயினாக இவரை மாற்றினார்கள்.

ஏற்கனவே நடித்து வந்த நடிகையின் முக்கியத்துவத்தை குறைத்தார்கள். ஆனால் படம் வெளியாகி வெற்றி பெறவில்லை. பின் விளம்பரங்களில் நடித்து வந்த பிரியா வாரியார் தற்போது தெலுங்கு படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் அவரின் மேக்கப் இல்லாத புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்டு ரசிகர்களும் அவர் தானா இது என அதிர்ச்சியாகியுள்ளனர்.

பிக்பாஸ்-3யின் புதிய போட்டியாளர் மீரா மிதுனின் உண்மை முகம் இதுதானா? ஷாக்கிங் ரிப்போர்ட்!!

பிக்பாஸ் மூன்றாவது சீசனின் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களின் பிண்ணனியில் பல கதைகள் உள்ளன. அதிலும் புதியதாக நுழைந்துள்ள மீரா மிதுனிற்கும் சர்ச்சைக்கும் வெகு தூரம் இல்லை.

மீரா கடந்த மாதம் சிலர் தனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவோம், கொலை செய்வோம் என மிரட்டுவதாக போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் இவர் நடத்தவிருந்த அழகி போட்டியில் பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுப்பட்டதாக கூறி இவருக்கு வழங்கியிருந்த மிஸ் சவுத் இந்தியா உள்ளிட்ட பட்டங்களை வழங்கிய அமைப்பு திரும்ப பெற்று கொண்டது.

மேலும் மீரா தனது பட்டங்களை இழந்தாலும் அவருக்கு போன் செய்தால் தனது பெயர் மிஸ் சவுத் இந்தியா, மிஸ் சென்னை உள்ளிட்ட பட்டங்களை கூறிவிட்டு தான் பேசு தொடங்குவார் எனவும் நடிகர் சிம்பு தன்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததாக மீரா அடிக்கடி கூறுவார் எனவும் அவர் பக்கா ப்ராடு எனவும் அவருடன் பணிப்புரிந்த ஜோ மைக்கல் என்பவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கைப் பெண் : காரணம் இதுதான்!!

பிக்பாஸில் நேற்று பல சுவாரஸ்சியமான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. அபிராமி- கவினின் காதல், மோகன் வைத்தியாவின் கண்ணீர் என பல சம்பவங்களில் இலங்கை பெண் லொஸ்லியா மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படுவதும் ஒன்று.

ஏற்கனவே 15 போட்டியாளர்கள் உள்ள பிக்பாஸ் வீட்டில் புதிய நபராக மீரா மிதுன் என்ற மாடலிங் பெண் நேற்று நுழைந்தார். எப்போதும் புதிய நபர் உள்ளே வந்தால் பழையவர்கள் புரளி பேசுவதும் வந்ததிகளை பரப்புவதும் சகஜம் தான்.

அப்படிதான் மீரா உள்ளே வந்தவுடன் அபிராமியும் சாக்‌ஷியும் புரளி பேச ஆரம்பித்தனர். ஆனால் இவர்கள் இருக்குவருக்குமிடையே இருந்த லொஸ்லியாவை இருவரும் கண்டுகொள்ளவில்லை.

முதலில் லொஸ்லியா தான் விலகி போனாலும் அதன்பின் அபிராமியும் சாக்‌ஷியும் அவருடன் பேச்சு கொடுக்கவில்லை. இதனால் இனி வரும் காலங்களில் லொஸ்லியா புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த சம்பவத்தால் லொஸ்லியாவின் ஆர்மி படுவேகமாக பெருகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் வளர்ந்தது புதிய காதல்… கவீனைப் பற்றி ஷெரீனிடம் கூறிய அபிராமி!!

பிக்பாஸ் வீட்டின் இன்றைய முதல் நாள் போட்டியாளர்களிடையே கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் சென்றது. இதில் குறிப்பாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருக்கும் அபிராமி வெங்கட்டாசலம் நள்ளிரவு ஷெரீனிடன் முக்கியமான விஷயம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

அதில் எனக்கு சீரியலே பிடிக்காது. ஆனால் சரவணன் மீனாட்சி சீரியல் வரும் போது மட்டும் பார்ப்பேன். அதில் நடிக்கும் தமிழ் பையன் பார்க்க அழகாக இருப்பான், என்று அம்மா கூறும் போது அவன் என்னுடைய பேஸ்புக் நண்பர் என்று கூறினேன்.

ஆனால் அது போலி பேஸ்புக் என்பதை கண்டுபிடித்தேன். அதன் பின் அவரின்(கவீன்) ஒரிஜினல் ஐடிக்கு மெசேஜ் அனுப்பினேன். அப்போது கூட அவர் செம ஸ்மார்ட்டாக ஆம் போலி ஐடி நிறைய இருக்கிறது என்று கூறினான். அவன் மீது எனக்கு ஒரு வித Crush இருந்தது.

இதனால் நான் இங்கு வந்தவுடன் முதல் ஆளாக பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். நான் அவன் மீது க்ரஸாக இருந்தேன் என்று கூறினாள், கேவலமாக போய்விடும் என்று அமைதியாக இருந்தேன்.

அவன் ஒரு நல்ல மனிதன், நான் ஒரு நடிகன் என்ற திமிர் இல்லை, இறங்கி வேலை பார்க்கிறான் என்று பேசினார். அப்போ முதல் சீசனில் எப்படி ஓவியா-ஆரவ்வோ, இரண்டாவது சீசனில் யாசிகா-மகத்தோ அதே போன்று மூன்றாவது சீசனில் கவீன்-அபிராமியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெளிநாட்டவருடன் ஜோடியாக சுற்றும் பிரபல இளம் நடிகை : நெருக்கமான போட்டோவையும் வெளியிட்டார்!!

கடந்த 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையானவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே. ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாட்ச்மேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வரும் கோமாளி படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து சம்யுக்தா ஹெக்டேவும் நடிக்கிறார். மேலும் சமூக வலைதளங்களில் அதிகம் பின்தொடரப்படும் கன்னட நடிகை என்றால் அது சம்யுக்தா தான்.

இவர் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஐரோப்பாவுக்கு சென்ற இடத்தில் அவர் வெளிநாட்டவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சாக்லேட்டும், வெனிலாவும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகையாகும் விஜய் சேதுபதியின் மகள் : இந்த படத்தில் தானாம்!!

தமிழ் பட ரசிகர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவ்வருடத்தின் தொடக்கத்தில் ரஜினியுடன் அவரின் நடித்த பேட்ட படம் வெளியானது.

அண்மையில் சூப்பர் டீலக்ஸ் படமும் வந்த கலவையான விமர்சனங்களை அள்ளியது. தெலுங்கில் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது பண்ணையாரும் பத்மினியும் புகழ் இயக்குனர் அருண் குமார் எடுக்கும் சிந்து பாத் படத்தில் நடித்துள்ளார். ஜூன் 21 ல் வெளியாகவுள்ள இப்படத்தில் அவரின் மகனும் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்திலும் இந்த சிறுவன் நடித்திருந்தான். இதனை அடுத்து விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கிறாராம்.

பிக்பாஸ் சாண்டியை ஏன் பிரிந்தேன்? பிரேக் அப் குறித்து காஜல் உருக்கம்!!

தமிழ் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் 15 போட்டியாளர்களில் ஒருவராக சென்றுள்ளார். இவருக்கு தற்போது திருமணமாகி குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் இவரின் முன்னாள் காதலியும் நடிகையுமான காஜல் பசுபதி, சாண்டி பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்வதை கண்டவுடன் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு ஸ்மைலி சிம்பிள் போட்டிருந்தார்.

இதைக் கண்ட இணையவாசிகள் முதல் காதலோ என்று கேட்க, அதற்கு அவர் நான் அட்ட கத்தி தினேஷ் மாதிரி, எனக்கு முதல் காதல் இல்லை, கடைசி காதல் என்று குறிப்பிட்டார்.

அப்புறம் ஏன் பிரேக் அப் என்ற போது, லவ் டார்ச்சர் ஓவரா செய்துட்டேன், வல்லவன் ரீமா சென் மாதிர் டார்ச்சர் கொடுத்தா எந்த பையன் தான் தாங்குவான் என்று கூற, இதைக் கண்ட இணையவாசிகள் பரவாயில்லப்பா என் மேல் தான் தப்பு ஒத்துக்கிட்டதே பெரிய மனசு என்று பாராட்டி வருகின்றனர்.