இதெல்லாம் ரொம்ப ஓவர், பிக்பாஸ் யாஷிகாவிற்காக ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க!!

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் நடித்ததிலேயே பாதி இளைஞர்கள் ரசிகர்களை பிடித்துவிட்டார்.

அதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் பெரிய ரசிகர்கள் உருவாகிவிட்டனர், அந்த வகையில் இவருக்கு ரசிகர்கள் என்ன செய்துள்ளார்கள் தெரியுமா..

கோவில் திருவிழாவிற்கு யாஷிகா புகைப்படத்தை போட்டு பேனர் அடித்துள்ளனர், இதில் யாஷிகா பேன்ஸ் க்ளப் என்றும் பதிவு செய்துள்ளனர், நீங்களே இதை பாருங்கள்…

நந்தினி சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை : இதுதான் காரணமா?

படங்களை விட சீரியல்கள் தான் மக்களிடம் அதிகம் போய் சேர்கிறது. அப்படி கன்னட சினிமாவிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் நந்தினி. இதை நிதின் என்பவர் இயக்க நாம் அனைவருக்கும் தெரிந்த நடிகர் ரமேஷ் அரவிந்த் சீரியலை தயாரிக்கிறார்.

600 எபிசோடுகளை கடந்து முதல் இடத்தில் TRPல் இருக்கும் இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் காவ்யா. காரணம் அவருடைய வேடத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் போனதாம். இதனால் அவரே இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறியிருக்கிறார்.

காவ்யாவின் வேடத்திற்கு வேறொரு நடிகையை தேடி வருகின்றனர் சீரியல் குழுவினர்.

சம்பளத்தை உயர்த்திய நடிகை ராஷ்மிகா : எவ்வளவு தெரியுமா?

தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தெலுங்கு மற்றும் தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனார் ராஷ்மிகா மந்தனா.

அந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. தற்போது அவர் விஜய் தேவரக்கொண்டாவின் டியர் காம்ரேட் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மேலும் நடிகர் கார்த்தி ஜோடியாக ஒரு தமிழ் படத்திலும் கமிட் ஆகி நடித்துவருகிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா தன்னுடைய சம்பளத்தை அதிகரித்துவிட்டராம். ஒரு படத்திற்கு சம்பளமாக 80 லட்சம் ரூபாய் கேட்கிறாராம். வளர்ந்துவரும் நடிகை இவ்வளவு சம்பளம் கேட்பது பல தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாம்.

கண்ணீர் விட்டு அழுத நடுவர் : ஒரு தாயின் 19 வருட முயற்சியால் மனநலம் குன்றிய மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியின் மூலம் பலர் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவரின் திறமை நடுவர்கள் முதல் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

மனநலம் குன்றிய நபர் ஒருவர் பாடல் பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவருக்கு இசையை தவிர எதுவும் தெரியவில்லை. இது குறித்து அவரின் அம்மா கருத்து வெளியிடும் போது,

என்னுடைய மகன் வித்தியாசமானவன் தான். அது எனக்கு தெரியும், ஆனால் ஒரு போதும் எம்மைவிட குறைந்தவன் கிடையாது என்று கூறியுள்ளார்.

இதேவேளை, என் மகன் பிறந்தது முதல் ஆசிரியர் கண்டுப்பிடிப்பது வரை அனைத்துக்கும் நான் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். நிச்சயம் அவரின் முயற்சி இல்லை என்றால் எதுவும் நடந்திருக்காது என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

அங்காடித்தெரு நடிகர் மகேஷின் தற்போதைய நிலைமை இதுதான் : வருத்தத்துடன் அவரே கூறிய தகவல்!!

வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்ற அங்காடித்தெரு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் மகேஷ். திண்டுக்கல்லை சேர்ந்த இவருக்கு இந்த பட வாய்ப்பு திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட்லில் பஸ்ஸுக்காக காத்திருந்த போது எதிர்பாராத விதமாக கிடைத்துள்ளது.

இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றாலும் இதன் பின் இவரது நடிப்பில் வெளிவந்த சில படங்களில் சுவடு தெரியாமல் அழிந்து போனது. தனது தற்போதைய நிலைமையை பற்றி மகேஷ் கூறுகையில் அங்காடித் தெரு படத்தில் நடித்த போது எனக்கு சினிமா என்றால் என்னவென்று கூட தெரியாது.

அந்த படத்துக்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும், எப்படி கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என சொல்லித்தர யாரும் இல்லை. அதனால் தேடி வந்த பல நல்ல கதைகளை மிஸ் பண்ணிட்டேன். அதர்வா நடிச்ச ஈட்டி படத்தில் நடிக்க டைரக்டர் என்னை தான் முதலில் கேட்டார்.

சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி ரோல் எனக்குத்தான் வந்தது. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பையும் தவறவிட்டுட்டேன். தவிர நான் நடித்த சில படங்களும் சரியா ஓடவில்லை என வருத்தத்துடன் கூறினார்.

ஆல்யா மானசாவுக்கு ஹோட்டல் அறையில் சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ்!!

ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்துவரும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி தற்போது நிஜ வாழ்க்கையிலும் காதலித்து கரம் பிடிக்கவுள்ளனர். நிற்சயதார்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணமும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நேற்று ஆல்யா மானசாவின் பிறந்தநாள் என்பதால் சஞ்சீவ் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஒரு ஹோட்டல் அறை முழுவதும் பலூன் நிரப்பு அதில் 24 பரிசு பொருட்கள் வைத்து அங்கு ஆல்யா மானசாவை அழைத்து சென்றுள்ளார்.

அவரது 24வது பிறந்தநாள் என்பதால் மொத்தம் 24 பரிசுப்பொருட்கள் அவர் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

NGK படத்தில் இருந்து நீக்கப்பட்ட கெட்ட வார்த்தைகள் : வெளியானது லிஸ்ட்!!

சூர்யவின் நடிப்பில் வரும் 31ஆம் தேதி NGK படம் பலத்த எதிர்ப்பார்ப்பு இடையே வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் முன்பதிவிற்கான வேலைகள் சில வாரங்களுக்கு முன்பு இருந்தே தொடங்கப்பட்டுவிட்டன.

மேலும் கடந்த வாரம் இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் U என வெளிவந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளின் லிஸ்ட்டும் வெளிவந்துள்ளது.

அதில் ஒவ்வொரு ரீலுக்கும் குறைந்தப்பட்சம் ஒரு கெட்ட வார்த்தையாவது நீக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

”ஒரு குழந்தை என்ன பார்த்து எலி மாமானு சொல்றான் : எஸ்.ஜே.சூர்யா!!

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே 17 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. இந்த படத்தை பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு எடிட்டிங் பணிகளை சாபு ஜோசப் செய்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது.இந்த படம் குறித்து பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதை தான் நாயகன்.

அனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன். பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.

நயன்தாரா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் தமன்னா!!

சினிமாத்துறையில் ஹீரோயின்களுக்கு நடுவே போட்டி இருக்கத்தான் செய்கிறது. அதையெல்லாம் தாண்டி தற்போதும் டாப் ஹீரோயினாக இருக்கிறார் நயன்தாரா.

அவர் தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்து வரும் அப்படம் சாயிரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை தமன்னா ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனம் ஆட தேர்வாகியுள்ளாராம். அவருக்கு பெரிய ரோல் இருக்கும் என முதலில் கூறப்பட்ட நிலையில் இந்த செய்தி தமன்னா ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்காக மதம் மாறிய நடிகை மோனிகாவின் தற்போதை நிலை தான் என்ன?

 

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பின் நடிகையாக வலம் வந்தவர் மோனிகா. அழகி, பகவதி, சண்டக்கோழி போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவர் திருமணத்திற்காக தன் நிஜ பெயரான மாருதி ராஜ் என்பதை மோனிகா என்று மாற்றினார். கிடந்த 2014ம் ஆண்டு இந்துவாக இருந்த இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

பின் 2015ம் ஆண்டு மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருக்கும் நடிகைகள் போல் இவரும் இப்போது எங்கே என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. சமூக வலைதளங்களில் கூட ஒரு அப்டேட்டும் அவரை பற்றி இல்லை.