பிக்பாஸ் 3ல் இந்த மூன்று பிரபலங்களா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

விஜய் டிவியில் இன்று பிக்பாஸ் 3-ஐ பற்றிய புரோமோ ஒன்று வெளியானது, பிக்பாஸ் 3 எப்போது வரும் என்று பலரும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ஆல்யா மானாசா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் விஸ்வாசம், காலா படங்களில் நடித்த ஷாக்‌ஷி அகர்வால் ஆகியோர் பங்குபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

இதைக் கண்ட நெட்டீசன்கள் பலரும், எம்.எஸ் பாஸ்கரை ஒத்துக் கொள்ளலாம், அது ஏன் ஷாக்சி அகர்வால் கூட ஓகே, ஆனால் ஆல்யா மானாசா என்பது தான் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் பிக்பாஸ் பற்றிய அறிவிப்பு வந்துவிட்டதால், இன்னும் சில நாட்களுக்கு இது போன்ற செய்தியைத் தான் பார்க்க முடியும் எனவும், ராஜாராணி என்ற பீக் சீரியலில் இருக்கும் போது, அவர் எப்படியப்பா 100 நாள் கேம் ஷோவில் கலந்து கொள்வார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸில் எனக்கு நீங்க சொன்னது ஞாபம் இருக்கு : கமலை வெளுத்து வாங்கிய நடிகை காயத்ரி!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுக்களை விட்டு விட்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதற்காக தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். கொலைகாரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

தீவிரவாதத்தில் மதத்தை கொண்டு வர வேண்டாம். நீங்கள் திரையுலகில் சிறந்த மனிதர் என்பதில் ஐயம் இல்லை, ஆனால் அரசியல் என்பது மேடை நாடகம் இல்லை.

மோசமான அரசியல்வாதிகளான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா ஆகியோரின் ஆதரவை பெற, மக்களிடம் அனுதாபத்தை பெற அழுவது போன்றவற்றை விட்டுவிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்று நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். அரசியலில் மேலும் ஒரு நடிகராகிவிடாதீர்கள்.

மேலும் மற்றொரு ட்வீட்டில் அவர் கூறுகையில், ‘வேறு ஒரு மதத்தினர் வசிக்கும் பகுதியில் இந்து மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது ஏன்?. அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் தானே? இந்துக்களுக்கும் கமல் தீவிரவாதியா?, பயங்கரவாதியா? தவறான வார்த்தைகளை நியாயப்படுத்தாதீர்கள். அவரது வார்த்தை முட்டாள்தனமானது.

இந்து மதத்தை அவமதிப்பது போல கமல், கி.வீரமணி, ஸ்டாலின் ஆகிய சிலர் தொடர்ந்து பேசி வருகின்றனர். முதல்வர் பழனிசாமி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இது போன்று யாரும் பேச துணிவிருந்ததில்லை. நீங்களும் இதைப் போல செய்ய வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மன்னிப்பு மன்னிக்கறவங்களோட மன்னிப்பு கேக்கறவங்க தான் பெரிய ஆளு, நல்ல மனிதர் என்று நீங்கள் என்னிடம் பலமுறை கூறி இருக்கிறீர்கள்.

இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் ஆகிவிடாது. இதில் நீங்கள் மதத்தினை உள்ளே கொண்டு வராதீர்கள். மாற்றத்தை கொண்டு வருவீர்கள் என்று மக்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள் மற்றவர்களைப் போல நீங்களும் இருப்பதை விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மிளகாய்யை அந்த உறுப்பில் சொருகி கொள்ளுங்கள் : நெட்டிசன்ஸை மோசமாக விமர்ச்சித்த நடிகை!!

பிரபல தொலைக்காட்சி நடிகையான ரிச்சா சோனி, இஸ்லாமியரான ஜிகர் அலி சம்பானியா என்பவரை பல காலமாக காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி பெங்காளி முறைப்படியும், அதே மாதம் 18ம் தேதி இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்.

ரிச்சாவின் பெற்றோருக்கே அவர் திருமணத்தில் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த நெட்டிசன்களோ ரிச்சாவை விலைமாது என்று கேவலமாக திட்டினார்கள். ஒரு முஸ்லிமை திருமணம் செய்தது தவறு என்று ரிச்சாவை பற்றி தரக்குறைவாக பேசினார்கள்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தன்னை திட்டுபவர்களை மிக மோசமாக திட்டி ரிச்சா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சும்மா ஏதோ பெயர்கள், அடையாளத்தை வைத்து என்னை பின்தொடர்பவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. ஆனால் எனக்கு அப்படி இல்லை அது தான் உங்களுக்கு பிரச்சனையாக உள்ளது.

ஒருவரை விலைமாது என்று அழைப்பது, மதத்தை பற்றி பேசுவது உங்களுக்கு எளிது. அது உங்களின் வளர்ப்பை காட்டுகிறது. உங்களின் வெறுப்பை கக்கும் கமெண்டுகளால் நான் வெளியிட விரும்பும் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.

பெண்கள் நுழையக்கூடாத இடம் : தமிழ் சினிமாவில் இப்படியும் நடக்கிறதா : புகைப்படத்துடன் நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு!!

சபரிமலை கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய கூடாது என தடை உள்ளது. அதற்காக பெண்கள் அமைப்புகள் பல போராட்டம் நடத்தியும் வருகின்றன.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தமிழ் சினிமா ஷூட்டிங்குகளில் உள்ள யூனிட் வண்டி, ஜெனரேட்டர் வண்டி போன்றவற்றில் பெண்கள் நுழையக்கூடாது என்று விதி இருப்பதை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? சினிமா ஜெனெரேட்டர் வண்டிக்குள் ஆண்கள் புழங்கலாம், உறங்கலாம், ஆனால் பெண்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விட கூடாது …. காரணம் தீட்டாம்!” என கஸ்தூரி ட்விட்டியுள்ளார்.

செம்பருத்தி சீரியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம், ரசிகர்களுக்கு இது தெரியுமா!!

சின்னத்திரை தற்போது வெள்ளித்திரைக்கு இணையாக வளர்ந்து வருகின்றது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சின்னத்திரையை விட இதில் வெளிச்சம் அதிகளவில் கிடைக்கின்றது.

அதனாலேயே கமலே பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க வந்துவிட்டார், அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் டாப்-ல் இருக்கின்றது.

இந்த சீரியலில் சத்தமே இல்லாமல் இயக்குனரை மாற்றிவிட்டார்களாம், ஆம், இதுநாள் வரை இந்த சீரியலை சுலைமான் என்பவர் இயக்கி வந்தார். தற்போது நீராவிப்பாண்டியன் என்பவர் இந்த சீரியலை இயக்கி வருகின்றாராம்.

கவர்ச்சியான உடை பற்றி விமர்சனம் : பதிலடி கொடுத்த பேட்ட நடிகை!!

பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் பதிவிட்ட உடை பற்றி சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இன்று மீண்டும் பதிவிட்டுள்ளார் அவர்.

“ஒரு பெண் மரியாதையாக எப்படி உடை அணிய வேண்டும் என பலர் கூறுகின்றனர். அவர்களுக்காக மீண்டும் நான் மரியாதையான உடையில், எனக்கு விருப்பப்பட்டது போல இருக்கும் புகைப்படம்” என குறிப்பிட்டுக்கு மீண்டும் ஒரு ஹாட்டான போட்டோவை பதிவிட்டுள்ளார்.

அட்டைப் படத்திற்காக மோசமான லுக்கில் நடிகை பிரணிதா : திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்!!

வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக நடிகைகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகிறது. உடை கட்டுப்பாடு என எதுவும் இப்போது இருப்பதில்லை.

நடிகைகள் சிலர் செய்யும் போட்டோ ஷுட் வைரலானாலும் பலர் அதை வரவேற்பதில்லை. இப்போது கூட நடிகை பிரணிதா ஒரு அட்டைப் படத்திற்காக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதில் உதட்டில் மஞ்சள் நிற லிப்ஷ்டிக் அடித்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் என மேக்கப் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன் : நடிகை கியாரா அத்வானி!!

தோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். லக்ஷ்மி பாம் என அதற்கு பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள கியாரா அத்வனி தன் பர்சனல் லைப் பற்றி பேசியுள்ளார். தான் இப்போது சிங்கில் தான் என கூறியுள்ளார் அவர்.

ஒரு ஆணை பார்த்தால் முதலில் எந்த இடத்தில் பார்ப்பீர்கள் என பேட்டி எடுத்தவர் கேள்வி கேட்டதற்கு, “கண்களை தான் முதலில் பார்ப்பேன்” என கூறியுள்ளார்.

பெண்களை பார்த்தால் அவர்களது சிரிப்பை கவனிப்பேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகை தீபிகா சிரிப்பை பார்த்து கிரஷ் வந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார் அவர்.

திருமணத்திற்கு முன்பே காதலியை கர்பமாக்கிய முன்னணி பாலிவுட் நடிகர்!!

முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் திருமணத்திற்கு முன்பே காதலியுடன் முதல் குழந்தை பெறவுள்ளார். நடிகர் அர்ஜுன் ராம்பால் தான் அது.

அவர் Gabriella Demetriades என்ற வெளிநாட்டு நடிகையை காதலித்து வருகிறார். திருமணத்திற்கு முன்பே அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

தற்போது Gabriella Demetriades கர்பமாக உள்ளார். விரைவில் அவர்களுக்கு குழந்தையும் பிறக்கவுள்ளது.

செருப்பால் அடிப்பேன் : பிரபல இயக்குனரை திட்டிய பாடகி : என்ன நடந்தது!!

பிரபல பாடகி பிரணவி தற்போது மீடு புகார் கூறி தெலுங்கு சினிமாவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 2016ல் ரகு மாஸ்டர் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.

ஆரம்பகாலத்தில் சினிமாவில் பாடல் பாட வாய்ப்புகள் தேடிய சமயத்தில் பலர் படுக்கைக்கு வந்தால் தான் பாட வாய்ப்பு என கூறியதாக தெரிவித்துள்ளார். அப்படி நடந்த சம்பவம் ஒன்று பற்றியும் அவர் கூறியுள்ளார்.

பிரபல இயக்குனர் ஒருவர் இவரை ஒரு பாடல் பாட வருமாறு அழைத்துள்ளார். அங்கு ஸ்டூடியோவுக்கு சென்ற பிறகு படுக்கையை பகிர்ந்தால் பாட வாய்ப்பு தருவதாக ஓப்பனாகவே கூறினார்.

“நான் சின்ன பொண்ணு. இப்போது தான் இன்டர் படிப்பை முடித்திருக்கேன்” என கூறினேன். ஆனால் அவர் அதை பற்றிய பேசிக்கொண்டிருந்தார். கோபத்தில் நான் “செருப்பால் அடிப்பேன்” என கூறிவிட்டு கிளம்பி வந்துவிட்டேன் என பிரணவி தெரிவித்துள்ளார்.