தமிழ் பிக்பாஸ் 3வது சீசனில் இவர்கள் எல்லாம் கலந்துகொள்ள போகிறார்களா? வைரலாக பரவும் செய்தி!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுவது பிக்பாஸ் தான்.

கலாட்டா, காமெடி, சந்தோஷம், சண்டை, போட்டி, பொறாமை என ஒரு மனிதனுக்கு என்னென்ன உணர்வுகள் உள்ளதோ அதெல்லாம் இந்நிகழ்ச்சியில் காட்டிவிடுவார்கள் போட்டியாளர்கள்.

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் ஜுன் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் அதில் யார் யாரெல்லாம் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற விவரம் வந்துள்ளது, நிஜமான தகவலா என்பது சரியாக தெரியவில்லை.

ஆனால் தற்போது இவர்கள் தான் போட்டியாளர்கள் என்று அடிபடும் பெயர்கள் இதோ,

மிர்னாலினி
சாந்தினி
கஸ்தூரி
விசித்ரா
தொகுப்பாளினி ரம்யா
பூனம் பாஜ்வா
ரமேஷ் திலக்
சரண் ஷக்தி
பாலாஜி முருகதாஸ்
ஜாங்கிரி மதுமிதா
கிரிஷ்

பிளாஸ்டிக் விழுங்கிய பிரபல சின்னத்திரை நடிகரின் குழந்தை மரணம் : புகைப்படம் இதோ!!

ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவர் பிரதிஷ் வோரா. இவரது மகள் கடந்த 7ம் தேதி இரவு வீட்டில் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது ஒரு குட்டி பொம்மையை குழந்தை விழுங்க தொண்டையில் சிக்கியுள்ளது. உடனே மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்துள்ளது.

இதனை பிரதிஷ் வோராவே உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தனது குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதிஷ் தற்போது பியார் கே பாபட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கேலி கிண்டலுக்கு ஆளான ப்ரியாங்கா சோப்ராவின் உடை : இத்தனை நாள் உழைப்பில் தயாரானதா?

வருடந்தோறும், ஹாலிவுட் பிரபலங்கள் வித்தியாசமாக உடையணிந்து ஒப்பனை செய்து வரும் மெட்காலா என்னும் காஸ்ட்யூம் பார்ட்டி நியூயார்க்கில் நடைபெறும். இந்த வருடமும் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.

இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் வித்தியாசமான காஸ்ட்யூம், மிக மிக வித்தியாசமான மேக்கப்புடன் கணவர் நிக் ஜோனாஸுடன் கலந்துகொண்டார். இதனால் கடந்த இரண்டு வருடங்களைப் போலவே இந்த வருடமும் பிரியங்காவின் காஸ்ட்யூமை நெட்டிசன்ஸ் டிரோல் செய்தார்கள்.

இந்த நிலையில் மெட் காலாவுக்காக பிரியங்கா சோப்ராவுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்து கொடுத்த பிரபல டிசைனர் பிராண்டான ’டியோர்’ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பிரியங்கா சோப்ராவுக்கு தைத்த உடையைப் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், இந்த உடையை பிரியங்கா மெட் காலாவில் கலந்துகொள்வதற்கென்றே விசேஷமாகத் தயாரித்தோம். ஒயிட், பிங்க், லெமன் யெல்லோ போன்ற மென்மையான நிறங்களில், பறவைகளின் இறகுகளை ஒத்த ஒவ்வொரு டிசைன்களையும் வெள்ளி நூலால் கைகளாலேயே கோத்தோம்.

இந்த உடையைத் தயாரிப்பதற்கு எங்களுக்கு 1500 மணி நேரங்கள், அதாவது 62 நாள்கள் தேவைப்பட்டது என்று கூறியுள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் திருமணம் : அவர் காதலிக்கும் நடிகர் யார் தெரியுமா?

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஹோம்லியான ரோல்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்துவருபவர். காக்க முட்டை, தர்மதுரை, கானா என பல படங்களில் அவரது நடிப்பு திறமையை பார்த்து வியந்தவர்கள் ஏராளம்.

தற்போது 29 வயதாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சினிமா நடிகர் ஒருவரை தான் அவர் காதலித்து வருகிறாராம்.

ஒரு முக்கிய படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் காதலிக்கிறார் என்றும், குடும்பத்தினர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

தயாரிப்பாளர், இயக்குனருடன் இரு என கொடுமைப்படுத்திய தாய் : கண்ணீர் விடும் தொலைக்காட்சி பிரபலம்!!

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் படு பிரபலம். அதில் தனது நடனம் மூலம் கலக்கியவர் கேண்டி. இவர் தனது சொந்த அம்மா-அப்பாவால் படு கஷ்டங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் இருவரும் அடிப்பது, சினிமாவில் இயக்குனர் பதிலாக தயாரிப்பாளரிடம் செல் என அசிங்கமாக பேசுவது, பணம் வேண்டும் என்று துன்புறுத்துவது, அவரது அம்மா போலீஸ் என்பதால் சில விஷயங்களை தடுப்பது என கொடுமைப்படுத்தியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவர்களின் கொடுமை தாங்காமல் பத்திரிக்கையாளர் முன் தனது கஷ்டத்தை கொட்டியுள்ளார். அப்போது யாரும் எந்த உதவியும் செய்யவில்லை என்றும், தனது அம்மாவுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை என்றும் கண்ணீர் விட்டு பேசியுள்ளார்.

நடிகையுடன் செல்பி எடுக்க சென்ற இளம் பெண் : திடீரென ஏற்பட்ட விபத்து!!

அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் களமிறங்கி பிரச்சாரம் செய்கின்றனர். நாம் நிறைய அப்படி பார்த்துள்ளோம்.

சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் கோபிபல்லாபூர் என்ற இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிர்பாஹா சோரன் என்பவரை ஆதரித்து அம்மாநிலத்தின் பிரபல நடிகை நுஸ்ரத் ஜஹான் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது ஒரு இளம் ரசிகை நடிகையுடன் புகைப்படம் எடுக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பபாராத விதமாக அவர்கள் இருந்த மேடை திடீரென சரிந்து விழுந்துள்ளது. அதனால் யாருக்கும் அடிபடவில்லை என்று கூறியுள்ளனர்.

பிக்பாஸின் பிரபல காதல் ஜோடி, திருமணத்தில் முடிந்தது : தம்பதியின் அழகிய போட்டோக்கள் இதோ!!

இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சியினை தமிழில் கடந்த இரு சீசன்களாக நடிகர் கமலஹசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசனில் நடிகை ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வானார்.

தமிழை போல மலையாளத்திலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரபலமான காதல் ஜோடி சீரியல் நடிகர் ஸ்ரீநிஷ் அரவிந்த்- மலையாள நடிகை பியர்லி மானே ஜோடி. பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே அனைவரும் தூங்கிய பிறகு ரகசியமாக பேசுவது, மோதிரத்தை மாற்றி கொண்டது என பல்வேறு வகையில் தங்களது காதலை வெளிப்படுத்திய இவர்கள் தற்போது திருமணம் செய்யவுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தை தொடர்ந்து இவர்களின் திருமணம் வருகிற 8ஆம் தேதி ஸ்ரீநிஷின் குடும்ப முறைப்படி பாலக்காட்டில் நடைபெறவுள்ளது. இதனால் இருவரும் தங்களது ஜோடியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

முஸ்லிமாக மாறிய நடிகை கஸ்தூரி : பெயரையும் மாற்றி கொண்டாரா? புதிய பெயர் இதுதான்!!

அடிக்கடி எதாவது பேசி சர்ச்சைகளில் சிக்குபவர் நடிகை கஸ்தூரி. அவர் தற்போது முஸ்லிமாக மதம் மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுப்பும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இன்று அவர் தொழுகை நடத்தும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் “உங்கள் இஸ்லாமிய பெயர் என்ன?” என கேட்க, “தபஸ்ஸும்” என கஸ்தூரி பதில் அளித்துள்ளார்.

கஸ்தூரி திடிரென இப்படி மாறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தவறான எண்ணத்தில் என்னை பலர் அணுகினார்கள் : வாரணம் ஆயிரம் நடிகை கூறிய அதிர்ச்சிப் புகார்!!

நடிகைகளை சினிமாவில் வெறும் மோகப்பொருள் போல பயன்படுத்துகின்றனர் என்கிற புகார் உள்ளது அனைவருக்கும் தெரியும். பல நடிகைகள் இதுபற்றி மீ டு புகார் கூறி சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.

தற்போது வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்த சமீரா ரெட்டி அளித்துள்ள பேட்டியில் தான் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது பலர் தன்னை தகாத முறையில் அணுகியதாக கூறியுள்ளார்.

மேலும் சினிமா துறையில் பெண்களை இப்படி செய்வதை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.

தங்கியிருந்த ஹோட்டலில் குடிபோதையில் நடிகை டாப்ஸி செய்த அட்ராசிட்டி!!

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்ஸி. அவர் தற்போது ஹிந்தி சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக உள்ளார். அதனால் தமிழ் பக்கம் வருவதில்லை.

தற்போது அவர் குடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த அட்ரோஸிட்டி பற்றிய செய்தி வெளிவந்துள்ளது. நடிகர் விக்கி கௌஷல் உடன் சேர்ந்த டாப்ஸி நடித்த Manmarziyaan படத்தின் ஷூட்டிங் முடிந்து wrap-up பார்ட்டி நடந்துள்ளது. அதில் குடித்த டாப்ஸி க்கு போதை அதிகமாகி அந்த ஹோட்டலின் கார்டன் பகுதியிலேயே படுத்துவிட்டாராம்.

“இன்று இரவு இங்கு தான் தூங்க போகிறேன்” என கூறி கலாட்டா செய்துள்ளார். ஹீரோ விக்கி கௌஷல் எவ்வளவு சொல்லியும் டாப்ஸி கேட்கவில்லையாம். பின்னர் எப்படியோ சமாளித்து ஹோட்டல் அறைக்கு டாப்ஸியை அனுப்பி வைத்துள்ளனர்.