நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என கூறும் அளவுக்கு முன்னணி ஹீரோயினாக உள்ளார். ஒரு படத்திற்கு 5 கோடி ரூபாய்க்குள் மேல் சம்பளம் வாங்கும் நடிகை அவர் மட்டும் தான்.
தற்போது விஜய், அஜித் படங்களில் நடித்து வரும் அவர் விரைவில் அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம். சமீபத்தில் ராதாரவி சர்ச்சை பேச்சுக்கு தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவாக வந்த ஆதரவு குரல்களை பார்த்து அரசியல் ஆசை அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
அதற்காக தன் ஆஸ்தான ஜோதிடரை சந்தித்து தன் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என பேசியுள்ளார் அவர்.
`இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம். சரியான நேரம் பார்த்து கணித்துச் சொல்கிறேன். அப்போது தீவிர அரசியலில் இறங்கலாம்’ என அவர் கூறிவிட்டாராம். அதனால் தற்போது அவரின் வார்த்தைக்காக காத்திருக்கிறாராம் நயன்தாரா.
MeToo என்ற விவகாரம் தமிழ்நாட்டில் அதிகம் தெரியவர பாடகி சின்மயி காரணம். இவரது புகார் இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கியது.
அவர் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று கூற அவரை தொடர்ந்து சினிமாவில் உள்ள பல பெண்கள் தங்களுக்கு நடந்து கொடுமைகளையும் கூறி வந்தனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோர வேண்டும் என்று சின்மயி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்பது மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி பல சீசன்களாக நடந்து வருகின்றது, ஆனால், அதன் எதிர்ப்பார்ப்பும், வரவேற்பும் மட்டும் குறைந்ததே இல்லை.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முஸ்லீம் மதத்தை சார்ந்த ஒரு பெண் தற்போது பாடி வருகின்றார், இவரின் குரலை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் இவருக்கு சமூக வலைத்தளங்களில் அவரின் மதம் சார்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர் இதில் என்ன இருக்கின்றது, இது 21ம் நூற்றாண்டு, தற்போதும் பெண்களை இப்படி பேசுவது நியாயமில்லை என்று ஆதரவும் தந்து வருகின்றனர்.
தி பிக் பேங் தியரி என்னும் அமெரிக்க தொலைக்காட்சி தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. அந்த தொடரில் லியோனார்டாக நடித்து பிரபலமானவர் ஜானி கேலக்கி. 44 வயதாகும் அவர் தன்னை விட 22 வயது சிறியவரான அலைனா மேயரை காதலித்து வருகிறார்.
இந்நிலையில் அலைனா கர்ப்பமாகியுள்ளார். அலைனா கர்ப்பமாகியுள்ளதை புகைப்படத்துடன் மகிழ்ச்சியில் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் ஜானி.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த விருது விழாவில் தான் ஜானியும், அலைனாவும் முதன்முதலாக ஜோடியாக கலந்து கொண்டனர். அந்த விழா நடந்த ஒரு மாதத்தில் இருவரும் ஒரே மாதிரியான மோதிரம் அணிந்து தங்களது யங்கேஜ்மெண்ட்டை வெளியுலகிற்கு தெரிவித்திருந்தனர்.
ஆனால் இருவருக்கும் இன்னமும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யாவுடன் நடித்த NGK படம் இம்மாத 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முன்னணி நாயகர்களுடன் நடித்து வந்தாலும், சாய் பல்லவியின் முதல் காதல் அவர் படித்திருக்கும் மருத்துவப் படிப்பு தான். அப்படிப்புக்குப் பிறகு எதிர்பாராத விதமாக திரைத்துறையில் பிரபலமாகிவிட்டார்.
மருத்துவம் படித்திருப்பது தொடர்பாக சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்றில், நான் ப்ராக்டிஸ் செய்ய மருத்துவமனைக்கு செல்வதில்லை. ஆனால் கண்டிப்பாக படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எனக்கு இருந்த சில திறமைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு போய்க் கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நாம் நன்றாகச் செய்த ஒரு விஷயம் இப்போது நமக்குச் சுத்தமாக வராத போது இதயம் நொறுங்குவதைப் போல இருக்கிறது.
இப்போது நான் ஒரு மருத்துவமனைக்குச் சென்றாலும் கண்டிப்பாக யாரும் என்னை நம்பப் போவதில்லை. வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வார்களே தவிர, நான் தரும் மருந்துச் சீட்டைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருக்கும் ஒரே டாக்டர் நான் தான் என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.
கோலிவுட்டில் உருவான காதல் ஜோடிகளில் மிக பிரபலமானது சிம்பு- நயன்தாரா ஜோடி தான். வல்லவன் படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையில் காதல் உருவானதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த காதல் சில காலத்திலேயே முறிந்தும் போனது.
தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் மதுராந்தக உத்தம சோழனின் மனைவி பூங்குழலியின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் நயன்தாரா, கார்த்தி, ஐஸ்வர்யாராய், அமிதாப்பச்சன், ஜெயம்ரவி உள்ளிட்டோருடன் நடிகர் சிம்புவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சிம்பும் நயன்தாராவும் காதல் முறிவிற்கு பிறகு நீண்ட இடைவெளியை கடந்து பாண்டிராஜின் இது நம்ம ஆளு படத்தில் கடைசியாக நடித்திருந்தனர். ஆனால் இப்படம் வெளிவந்தே 3 வருடங்களாகிவிட்டது.
மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் எமி ஜாக்சன். அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் ஒரு வலம் வந்தார்.
கடைசியாக அவரது நடிப்பில் ரஜினியின் 2.0 படம் வெளியானது. இப்படத்திற்காக எமி ஜாக்சன் உடைகளால் நிறைய கஷ்டங்கள் அனுபவித்தார் என்று படக்குழுவினரே தெரிவித்திருந்தனர்.
முழுவதும் வெளிநாட்டில் தற்போது இருக்கும் எமி ஜாக்சன் சில நாட்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.
தற்போது என்னவென்றால் அவருக்கும், அவரது காதலருக்கும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதோ அந்த வீடியோ..
ஒரே பாடலில் ஒருவரின் நடனத்தை பார்த்து அவர் மீது காதல் கொண்டு திருமணமும் செய்துகொண்டவர் தொகுப்பாளினி மணிமேகலை.
அம்மா-அப்பாவை எதிர்த்து பதிவு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு தொகுப்பாளினி வேலையை விடுத்து தற்போது ஜோடிகள் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், திருமணத்திற்கு பின் வீட்டில் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
நாங்கள் நல்ல நிலைமைக்கு வந்ததும் கண்டிப்பா பேச முயற்சி செய்வோம். முன்பெல்லாம் என் அறையில் ஏசி ஆப் செய்யாமலேயே கிளம்பி விடுவேன்.
ஆனால் இப்போது 1 மணி நேரம் ஏசி ஓடியது அறை கூலிங் வந்துவிட்டது என்று ஆப் செய்கிறேன். முன்னாடி சாப்பாடு வீண் செய்வேன், இப்போது கொஞ்சம் கூட அப்படி செய்வது இல்லை. அப்படி மிஞ்சினாலும் இல்லாதவர்களுக்கு கொடுத்து விடுவேன் என்று பேசியுள்ளார்.
2011ல் நடிகரும் இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். இருவருக்கும் ஆர்யன் என்ற மகன் உள்ளார். கடந்தாண்டு கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். நவம்பர் 13, 2018-ல் சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்டது.
அதன்பிறகு விவாகரத்து குறித்து அறிக்கை மட்டும் வெளியிட்ட விஷ்ணு விஷால், விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக தற்போது வெளியிட்டுள்ளார். அதில், நான் உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால்,
எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் மிகவும் உறுதியாக இருந்த விஷயம், எனது திருமணம். ஆனால், அதுவும் இப்போது இல்லை. என்னால் இன்னும் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
சில வருடங்களுக்கு முன் நான் யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்த ஒரு நபர். அப்போது இந்த பேட்டியைக்கூட தந்திருக்க மாட்டேன். எப்போதும் நம்பிக்கை குறைவாகவே இருப்பேன். என்னை, சாதிக்கும் ஒரு ஆளாக நினைத்துப் பார்த்ததே இல்லை.
எனது அப்பாவைப் பார்த்து, புத்திசாலியான என் சகோதரியைப் பார்த்து, இவர்களை எல்லாம் என் வாழ்வில் மிஞ்சவே முடியாது என்றெல்லாம் நினைப்பேன்.
இந்த ஆளுமை என் வளர்ச்சியைத் தடுப்பதாக நம்பியதால், எல்லோருடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்படங்களில் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க, பெண்களிடமும் சகஜமாகப் பழகினேன். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.
‘நீ மாறிவிட்டாய்’ என்ற பேச்சு வந்தது. அப்படியே அது, ‘நான் இந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற்புறுத்த முடியாது. திருமணம் முடிந்துவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், செய்துதான் ஆகவேண்டும்.
என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக. இன்றும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். அவர் நல்லவர். நானும் அப்படித்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், சில நேரங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்தப் பிரபஞ்சத்துக்கே பிடிக்காது என நினைக்கிறேன்.
நான், எனது துறையில் மிகக் கடினமாக உழைத்துள்ளேன். பலருக்கு கவனச்சிதறல் ஏற்பட்டுள்ளது. நான் ஒவ்வொரு நாளும் மன ரீதியாக வருத்தத்தில்தான் இருக்கிறேன். ஆனால், வேலை எனது கவனத்தைத் திசை திருப்புகிறது. நான், எனது மகனைப் பற்றி நினைக்கிறேன்.
அவரையும், அவரது அம்மாவையும், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஆதரிக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் ஒரு விளையாட்டு வீரன். எனக்கு தோல்விகளில் இருந்து மீண்டு வருவது வழக்கம்தான் என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.