நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.
இதில் சோலோ ஹீரோயினாகவே நிறைய படங்கள் இருக்கின்றது. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் லிவிங்-டு-கெதரில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா குடும்பத்தினர் விக்னேஷ் சிவனை சந்திக்க, இருவருக்கும் இந்த ஆண்டு இறுதியில் நிச்சத்தார்த்தம் நடக்கும் என கூறப்படுகின்றது. மேலும், இதற்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
மாலிவுட் சினிமாவில் நிறைய பாடல்கள் பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரிமி டாமி. இவர் 50க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி அசத்தியுள்ளார், அதில் நிறைய ஹிட் பாடல்களும் உண்டு.
பாடுவதை தாண்டி அதிக நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக கலக்கி வந்தார். உதாரணத்துக்கு Gaanaveedhi, Dum Dum Dum Pi Pi Pi, Music Live போன்ற நிகழ்ச்சிகளை கூறலாம்.
இவர் 2008ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி இருவருக்கும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது. தற்போது என்னவென்றால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகிறது, ஆனால் அவர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை.
தற்போது சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் காமெடி நடிகர் யோகி பாபு. அவருக்கு நல்ல வரவேற்பு குவிந்துள்ளது. படங்களில் அவர் வந்தாலே தியேட்டரில் விசில் சத்தமும், சிரிப்பும் நிறைந்து வழிகிறது.
இதனால் அனைத்து படங்களிலும் அவரை புக் செய்துவிடுகிறார்கள். கால்ஷீட் விசயத்தில் அவர் மிக பிசியாக இருக்கிறார். கடந்த வருடம் மட்டும் 20 படங்களில் நடித்துள்ளார். இதில் சர்கார், கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் அவருக்கும் முக்கியமானதாக அமைந்தன.
ஆனால் இந்த வருடம் அவருக்கு 19 படங்கள் இப்போது வரை உள்ளதாம். தற்போது அவர் தர்ம பிரபு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது சம்பளத்தை ஒரு நாளுக்கு ரூ 5 லட்சம் என உயர்த்திவிட்டாராம்.
தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் ஃபீவர் என்று சொல்லலாம். கடந்த சில தொடர்ந்து பல அணிகளுக்கு இடையே முக்கிட இடங்களில் போட்டி நடைபெற்று வருகிறது.
இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தற்போது டெல்லி அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் சென்னையில் போட்டி நடைபெற்று வருகிறது. இதனை காண மைதான அரங்கில் பல ரசிகர்கள், ரசிகைகள் குவிந்துள்ளார்கள்.
நடிகை வரலட்சுமியில் கிரிக்கெட்டுக்கு தீவிரமான ரசிகை. அவர் மைதானத்தில் தல தோனியின் புகைப்படம் கொண்ட மஞ்சள் டிசர்ட்டை போட்டு கொண்டாடியுள்ளனர்.
சினிமா பிரபலங்கள் வாழ்க்கையில் நடக்கும் சில சுவாரசியமான சம்பவங்கள் தெரிந்து கொள்ள ரசிகர்களுக்கு ஆசையாக தான் இருக்கும். அதில் சில விஷயங்கள் புகைப்படங்கள் மூலமாக வெளியாகிவிடும்.
தற்போது தெலுங்கு சினிமா பக்கம் பலருக்கும் மகிழ்ச்சி சூழ்ந்துள்ளது. பிரபல நடிகர் மஞ்சு மனோஜ், நடிகை லக்ஷ்மி மஞ்சுவின் சகோதரர் நடிகர் விஷ்ணு மஞ்சு சந்தோசத்தில் மூழ்கியுள்ளார்.
விஷயம் என்னவெனில் அவரின் மனைவி விரானிகா கர்ப்பமாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை விஷ்ணு தன் மனைவியின் வயிற்றில் பொது இடத்தில் கைவைத்து சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
ஏற்கனவே இந்த தம்பதிக்கு 2011 ல் Ariaana, Viviana என்ற இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. 2018 ல் Avram என்ற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது விரானிகா நான்காவது குழந்தைக்கு கர்ப்பமாகியுள்ளார்.
இது ரசிகர்கள் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசயத்திற்கு நடிகை சுஜா வருணி டிவிட்டர் மூலம் நடிகர் விஷ்ணுவுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
சமீபகாலமாகவே நடிகைகள் சிலர் பாலியல் புகார்களை Me Too ல் கூறி வந்தனர். இதில் சில நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சிக்கினர். தற்போது மராத்தி சினிமாவை சேர்ந்த ரோஹினி, ஷாரா சரவான் ஆகிய இருவர் பிரபல நடிகர் சுபாஷ் யாதவை பாலியல் சர்ச்சையில் சிக்கவைத்துள்ளனர்.
நடிகைகள் இருவரும் சுபாஷை தொடர்பு கொண்டு தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூகவலைதளத்தில் வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமானால் இருவருக்கும் ரூ 15 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதற்காக 2 போலிஸ் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பயந்து போன சுபாஷ் ரூ 1 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் தொடர்ந்து நடிகைகள் இருவரும் பணம் கேட்டு மிரட்டியதால் அவர் போலிசில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளார்.
இதனால் சம்மந்தப்பட்ட நடிகைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குற்றத்தில் ஈடுப்பட்ட 2 போலிசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
ராதிகா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். தற்போது சின்னத்திரையிலும் கொடிக்கட்டி பறக்கின்றார். அவர் தற்போது சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் பிக்பாஸ் ஆரவ் தான் ஹீரோவாக நடிக்கின்றார். அப்படியிருக்க இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்தது.
இதில் ராதிகா சுருட்டு பிடிக்கும்படி இருக்க, அந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதோ…
சினிமா வட்டாரத்தை அண்மையில் சீரழித்த நிகழ்வு Me Too பாலியல் பிரச்சனைகள் தான். நடிகைகள் பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் பற்றி இதில் பகிரங்கமாக புகார் அளித்தார்கள்.
இந்நிலையில் தற்போது முதன் முதலாக நடிகர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவர் வேறு யாருமல்ல ஹிந்தி சினிமாவை சேர்ந்த விவேக் தஹியா தான்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த அவர் பெரிய சினிமாவுக்குள்ளும் வந்துவிட்டார். அவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.
இதில் அவர் பட வாய்ப்புகளுக்காக சினிமா மீடியேட்டர்களை அணுகிய போது தன்னை தவறான பாதைக்கு அழைத்தார்கள். ஆனால் அந்த மாதிரியான கேவலமாக செயல்களில் ஈடுபட மனமில்லாமல் அதனை ஒதுக்கிவிட்டேன் என கூறியுள்ளார்.
நடிகைகள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதிலும் பாலிவுட் சினிமா பிரபலங்களுக்கு இதுமிகவும் சாதாரண ஒன்று. ஆனால் படத்தின் விசயங்களால் கடும் எதிர்ப்புகளை சம்பாதிப்பவர்களும் உண்டு.
அதில் இளம் நடிகை Swara Bhaskar ம் ஒருவர். Veer Di Wedding என்ற படத்தில் சுய இன்ப காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கியவர். இதனால் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.
தற்போது தேர்தல் காலம். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் தவறாமல் ஓட்டு போட வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சுவாரா பாஸ்கர் போல நடந்துகொள்ளாதீர்கள். ஓட்டுக்காக உங்கள் விரலை பயன்படுத்துங்கள் என வரிகள் இடம் பெற்ற பதாகைகளை தாங்கி சிலர் பிரச்சாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் ஹீரோயினாக நட்சத்திரா என்பவர் நடித்து வருகிறார்.
இதற்கு முன்னதாக சீரியலில் நடிக்கும் ‘கிடா பூசாரி மகுடி’ என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ராம்தேவ் உடன் இவருக்கு காதல் இருப்பதாக முதலில் செய்தி வந்தது. இந்த செய்திகள் வந்து சில மாதங்கள் கழித்து ,தற்போது அது உண்மையில்லை என்று புதிதாக ஒரு செய்தியை கூறியுள்ளார் நட்சத்திரா
இது குறித்து அவர் கூறியதாவது… நான் காதலிப்பது உண்மைதான். அந்த காதலுக்கு நான் வீட்டிலும் அனுமதி வாங்கி விட்டேன். இருவர் வீட்டிலும் பேசி கிட்டதட்ட திருமணம் வரை சென்று விட்டோம். ஆனால் நான் காதலித்தது ‘கிடா பூசாரி மகுடி’ படத்தில் நடித்த ஹீரோ இல்லை, அந்த படத்தில் நடித்த வில்லனைத்தான் நான் காதலித்தேன் என்று கூறியுள்ளார் .
இந்த படத்தில் தமிழ் என்பவர் வில்லனாக நடித்தார். அந்த படத்தில் நடித்த போது இருவரும் அறிமுகமாகி நட்பு பின்னர் காதலாக மாறியது. தற்போது நாங்கள் சில வருடங்களாக காதலித்து வருகிறோம்.
வீட்டிலும் சொல்லிவிட்டோம். அவர் தற்போது கன்ஸ்ட்ரக்சன் பிசினஸ் செய்கிறார். நான் இன்னும் சில சீரியல்களில் நடிக்கிறேன் விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்று கூறியுள்ளார் நட்சத்திரா.