13 வயதிலிருந்து தாயிடம் அனுபவித்த கொடுமை : ரகசியத்தை கொட்டிய பிரபல நடிகை!!

13 வயதில் இருந்து தன்னை தன் தாய் நிம்மதியாக வாழவிடவில்லை என்கிறார் நடிகை சங்கீதா. நடிகை சங்கீதா பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் தனது தாய் பற்றி ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அன்புள்ள அம்மா, என்னை இந்த உலகிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. என் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு 13 வயதில் இருந்து வேலை செய்ய வைத்ததற்கு நன்றி. அனைத்து பிளான்க் செக்குகளில் கையெழுத்திட வைத்ததற்கு நன்றி.

வாழ்நாளில் வேலைக்கே செல்லாத உங்களின் குடிகார, போதைப் பொருளுக்கு அடிமையான மகன்களுக்காக என்னை பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி. உங்களின் முடிவுகளை ஏற்காததால் எங்கள் வீட்டிலேயே எங்களை டார்கெட் செய்வதற்கு நன்றி.

நான் போராடும் வரை எனக்கு திருமணம் செய்து வைக்காததற்கு நன்றி. அடிக்கடி என் கணவரை தொந்தரவு செய்து என் குடும்ப நிம்மதியை கெடுப்பதற்கு நன்றி. ஒரு தாய் எப்படி இருக்கக் கூடாது என்பதை எனக்கு கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. அனைத்து பொய் புகார்களுக்காக நன்றி. ஒரு நாள் நீங்கள் உங்கள் ஈகோவை விட்டுவிட்டு என்னை பார்த்து பெருமைப்படுவீர்கள் என்று சங்கீதா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சங்கீதாவின் ட்வீட்டை பார்த்த கணவர் க்ரிஷ், நீ பட்ட கஷ்டம் எனக்கு தெரியும், உன் குடும்பத்திற்காக நீ செய்தது அனைத்தும் தெரியும், உனக்கு நான் இருக்கிறேன். அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு, வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு.. என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ரித்தீஷின் மரணம்…. ஒரு குழந்தைக்கு அப்பா முகமே தெரியாமல் போன சோகம்!!

இறந்துபோன நடிகர் ரித்தீஷ்ஷின் மனைவி லோகேஸ்வரி குறித்து தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் கண்கலங்கியுள்ளார்.

ஜெயந்தி கண்ணப்பன் கூறியதாவது, ரித்தீஷை காதலிச்சு திருமணம் செய்துகொண்டாள். எந்த பொண்ணுக்கும் வரக்கூடாத துன்பம் இது.

கணவரை இழந்து மூன்றுகுழந்தைகளுடன் இருக்கும் அவளே சின்னப் பொண்ணுதான். அதில் ஒரு குழந்தைக்கு அப்பாவுடைய முகமே தெரியாமப்போச்சு, இனி அவள் என்ன செய்யப்போகிறான் என தெரியலை என்று கண்கலங்கியுள்ளார்.

கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை பார்ப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது குழந்தைக்கு தடுப்பூசி போட வந்த அவளையும் சந்தித்தேன். நான் குழந்தைக்கு பணம் கொடுத்த போது, பணம் வேண்டாம் ஆசிர்வாம் போதும் என்று சொன்னாள்.

அவளின் கணவர் ரித்தீஷ் இறந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் என கூறியுள்ளார்.

பாலிவுட் படத்திற்காக உடல் எடையை நன்றாக குறைத்த கீர்த்தி சுரேஷ், ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!!

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளவர். இவர் நடிக்க வந்த சில வருடங்களிலேயே விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

இந்நிலையில் கீர்த்தி தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார்.

இப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை நன்றாக குறைத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது, சர்காரில் இருந்த கீர்த்தி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க, இதோ…

நடிகர் ரித்தீஷ் திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!!

பிரபல நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷ் மாரடைப்பால் தனது 46வது வயதில் காலமானார். கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்கேஜி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஜே.கே ரித்தீஷ். இவர் இலங்கையின் கண்டியில் பிறந்தவராவார்.

திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் கடந்த 2009 மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ரித்தீஷ் வெற்றி பெற்றார். பின்னர் அதிமுகவில் இணைந்த ரித்தீஷ் கட்சி பணியாற்றி வந்தார்.

மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான பணியில் ஈடுபட்டு வந்த ரித்தீஷுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறுகையில், ஒரு நல்ல தம்பியை நான் இழந்துவிட்டேன், ஜே.கே.ரித்திஷின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

நடிகர் விஷால் கூறுகையில், ஜே.கே ரித்திஷ் மரணச் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது, ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

அனைவரையும் அடேங்கப்பா… என வாய் பிளக்க வைத்த ஆண்ட்ரியா!!

நேற்று நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மாளிகை படத்தின் டீஸ்ர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆண்ட்ரியாவை பார்த்து அனைவரும் ஷாக் ஆகினர்.

ஆம், சமீப காலமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா, இந்த நிகழ்ச்சியும் கவர்ச்சி உடையில் வந்து கிறங்கடிப்பார் என பலர் எதிர்பார்த்த்னார்.

ஆனால், அவரோ காஞ்சி பட்டு, தலை நிறைய பூ, நெக்லஸ், வளையல், மோதிரம் என அடக்கமாக வந்திருந்தார். இது பலருக்கும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த மாதிரி ஹோம்லி லுக்கிலும் ஆண்ட்ரியா ஆழகாக உள்ளார் என பேசிக்கொண்டனர்.

மேலும், ஆண்ட்ரியாவின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த குஷ்பு!!

கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகை குஷ்பு, இளைஞர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரம் முடிந்தவுடன் தனது காரை நோக்கி குஷ்பு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர் அவரிடம் தவறாக நடக்க முயன்றதால் இளைஞரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதன்பின்னர் குஷ்பு காரில் ஏறி சென்றுவிட்டார். இந்தியாவின் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில், இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திய அவலம் : பிரபல நடிகை மீது தாய் பரபரப்பு புகார்!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளவர் நடிகை சங்கீதா. குறிப்பாக பாலாவின் பிதாமகன் படம் இவரை மிகவும் பிரபலமடைய செய்தது.

பிறகு பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்ட இவர் மீது இவரது தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அப்புகாரில், வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள் சங்கீதா என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு சங்கீதாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்ப, இரு தினங்களுக்கு முன் கணவர் க்ரிஷுடன் ஆணையத்தில் ஆஜரானார் சங்கீதா.

இந்த புகார்க்கான காரணம் என்னவென்றால், சங்கீதா பேரில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை தன் அண்ணன் தம்பிங்க அபகரிச்சுடுவாங்களோனு சங்கீதாவுக்கு சந்தேகம். அதுக்கு தன் அம்மாவும் துணைபோயிடுவாங்களோனு பயப்படுறாங்க. இந்தச் சூழல்ல வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னா அவங்க எங்கப்போவாங்க? அதனாலதான் மகளிர் ஆணையத்துல புகார் தந்திருக்காங்க.

உங்க யாருக்கும் பேட்டி தரமாட்டேன், கொந்தளித்த ஆண்ட்ரியா : காரணத்தை கேட்டால் ஷாக் ஆவீர்கள்!!

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த தரமணி படம் இவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று தந்தது.

இந்நிலையில் ஆண்ட்ரியா நடிப்பில் ஒரு டப்பிங் படம் ஒன்று தமிழில் வரவுள்ளது, இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

அப்போது பல பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க, புகைப்படம் எடுக்க காத்திருக்க, ஆண்ட்ரியா வந்து ‘உங்களுக்கு யாருக்கும் பேட்டி தரமாட்டேன்’ என கோபமாக சொல்லி நகர்ந்தாராம்.

என்ன என்று விசாரித்தால், அவரிடம் ‘நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா, சரக்கு அடிப்பீர்களா?’ போன்ற கேள்வியை கேட்கிறார்களாம், இதனால் கோபமான ஆண்டரியா பேட்டி கொடுக்க மாட்டேன் என்று சொன்னாராம்.

இதை பார்த்த பலருக்கும் ஷாக் தான், என்ன இவராகவே ஏதோ சொல்லி நம்மிடம் கோபித்துக்கொள்கிறாரே என்று.

இதயம் நொறுங்கியது.. கங்குலியை பிரிந்தது ஏன்? 18 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த நடிகை நக்மா!!

2003 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக கங்குலி இருந்தபோது, அவரும் நடிகை நக்மாவும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

கங்குலி விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்கு நக்மா தவறாமல் வந்துவிடுவார். இருவரும் அவ்வப்போது பொது இடங்களுக்கு ஒன்றாக சென்றனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இதுகுறித்து மனம் திறந்துள்ள நடிகை நக்மா. கங்குலிக்கும் எனக்கும் இடையேயான நட்பு மிகவும் அழகானது. எங்கள் இருவருக்குமான நட்பும் நெருக்கத்தில் இருந்த சமயத்தில் அவரது விளையாட்டு பாதிக்கப்பட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், எங்களுடைய நட்புதான், கங்குலியின் ஆட்டத்தைப் பாதித்தது என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது. இதனால் இதயம் நொறுங்கிப்போனது. மற்றவர்களின் பார்வை எங்களை புண்படுத்தியதால், இருவரும் சேர்ந்து பேசி பிரிவது என்று முடிவெடுத்து பிரிந்துவிட்டோம் என கூறியுள்ளார்.

இவர்களுடன் சண்டை போட என்னால் முடியாது.. நான் வரல : நேர்கொண்ட பார்வை ஹீரோயின் வித்யா பாலன்!!

தற்போது தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார் நடிகை வித்யா பாலன். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன். அது பலருக்கும் தெரியாது. பேஸ்புக்கிலும் இருக்கிறேன்.

ஆனால் ட்விட்டருக்கு மட்டும் வரவே மாட்டேன். அங்கு வந்து இவர்களுடன் சண்டை போட நான் தயாராக இல்லை” என பேட்டி அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ட்விட்டரில் சிலர் பேக் ஐடிக்கள் மூலம் பலரையும் தரக்குறைவாக பேசுவதை பற்றி தான் அவர் இப்படி கூறியுள்ளார்.