இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பெரிய வரவேற்பு பெற்றவர். இவர் தற்போது வைகைப்புயல் வடிவேலு அவர்களுடன் “நாய் சேகர் ” எனும் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் வசூலை வாரி குவித்த கமலஹாசன் அவர்கள் நடிப்பில் வெளியான “விக்ரம்” எனும் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேரவே இவரை கையில் பிடிக்க முடியவில்லை.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவரின் எக்ஸ்பிரஷன் லுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் இவரது சில வீடியோக்கள் இணையதளத்தில்,
வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு எங்களை வதைக்க வேண்டாம் என நகைச்சுவையாக இளசுகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சரண்யா மோகன் ஒரு முன்னாள் இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தோன்றினார். சில தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி (2008), வெண்ணிலா கபடி குழு (2009), ஈரம் (2009), வேலாயுதம் (2011) மற்றும் ஒஸ்தே (2011) ஆகிய படங்களில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.
அவரது நடனப் பள்ளியில் சரண்யா நடனமாடுவதைப் பார்த்த மலையாள இயக்குனர் ஃபாசில் மூலம் அவர் வெளிச்சத்திற்கு வந்தார். சரண்யா மோகன் பெற்றோரை அணுகி வற்புறுத்திய பிறகு, 1997 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான அனியாதி பிராவு மற்றும் அதன் தமிழ் ரீமேக்கான காதலுக்கு மரியதையில் ஒரு குழந்தை கேரக்டருக்கு அவரை நடிக்க வைத்தார்.
அடுத்து மம்முட்டி, மோகன்லால் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன்ஸ் என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் அவர் மோகன்லால் மற்றும் சுரேஷ் கோபியுடன் மற்றொரு மலையாள திரைப்படமான ரக்தசாக்ஷிகல் சிந்தாபாத் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் அவர் தனது படிப்பில் கவனம் செலுத்தி ஓய்வு எடுத்தார்,
மற்றொரு ஃபாசில் இயக்கிய ஒரு நாள் ஒரு கனவு (2005) இல் துணை வேடத்தில் நடிப்பதற்கு முன், அதில் அவர் ஆண் முக்கிய கதாபாத்திரத்திற்கு சகோதரியாக நடித்தார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிக்காமல் தனது குடும்பத்தை பார்ப்பதற்காக சினிமாவில் இருந்து விலகிவிட்டார், ஆனால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது அவரது சமீபத்திய போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
இனியா, கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், இவர் பெரும்பாலும் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தோன்றுகிறார். தமிழ்த் திரைப்படமான வாகை சூட வா (2011) இல் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை தமிழ்நாடு மாநில விருதுகளில் வென்றார். 2010 இல், அவர் ஒரு தமிழ் திரைப்படமான படகசாலையில் நடித்தார் மேலும் நான்கு தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்தார்,
இவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன அல்லது வெளியிடப்படாமல் உள்ளன. மிஷ்கினின் மிஸ்டரி த்ரில்லர் யுத்தம் செய் படத்தில் சேரனின் கதாப்பாத்திரத்திற்கு சகோதரியாக அவர் அடுத்ததாக துணை வேடத்தில் நடித்தார். டைரக்டர் ஏ. சற்குணம், அவரது காலகட்டப் பகுதியான வாகை சூட வா (2011) படத்தில் கதாநாயகியாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார், அதற்காக அவர் தனது திரைப் பெயரை இனியா என்று மாற்றினார்.
ஒரு தேநீர் கடை உரிமையாளராக அவரது சித்தரிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ரெடிஃப்பின் பவித்ரா சீனிவாசன் அவர் ஒரு “வரவேற்பு கண்டுபிடிப்பு” என்று எழுதினார், அவர் “இயற்கையானவர், ஈர்க்கக்கூடியவர் மற்றும் மிகவும் வெளிப்படையானவர்” என்று விவரித்தார். அவர் அருள்நிதியுடன் இணைந்து நடித்த மௌனகுரு திரைப்படத்தில் மருத்துவ மாணவியாகவும்,
ஹீரோவின் காதலியாகவும் நடித்தார். வாகை சூட வா திரைப்படத்தில் அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்ட பாரதிராஜா அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்திற்காக அவரை ஒப்பந்தம் செய்தார், ஆனால் ஸ்கிரிப்ட் மாற்றப்பட்ட பிறகு, அவரது பாத்திரம் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. தற்போது அவரது கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பிக்பாஸ் 6 சீசன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திருநங்கை ஷிவின்.
கடைசி 5 இடத்தினை பிடித்த ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகப்பெரிய ஆதரவை பெற்றார். நிகழ்ச்சிக்கு பின் சக பெண் போட்டியாளர்களான விஜே மகேஷ்வரி மற்றும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று வருகிறார்.
மேலும் கிளாமர் லுக்கிற்கு மாறிய ஷிவின் ரசிகர்கள் முகம் சுளிக்க வைக்கும் படியான ஆடையில் போட்டோஷூட் எடுத்து வருகிறார்.
தற்போது சேலையில் எடுத்த கிளாமர் லுக் போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய தனித்தன்மையினால் கவனம் ஈர்த்து கொண்டிருக்கும் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி. 2021 -ம் ஆண்டு தெலுங்கு படமான உப்பென்னா மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இதன் பின்னர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளிவந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.
தற்போது கீர்த்தி ஷெட்டி, பிரதீப் ரங்கநாதனின் LIC மற்றும் ஜெயம் ரவியின் ஜீனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின் கீர்த்தி ஷெட்டியின் போஸ்டர் கூட இணையத்தில் வெளியானது. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வரும் கீர்த்தி ஷெட்டி,
கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். தற்போது காந்த பார்வையில் பார்த்தபடி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து இவர் மேயதா மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். தற்போது பிரியா பவானி, தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.
இதனிடையே பிரியா பவானி தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலுவுடன் விரைவில் திருமணம் செய்யப்போகிறேன், சோம்பேறித்தனத்தால் திருமணம் தள்ளி போயுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் என்று டிமாண்டி காலணி 2 படத்தின் பிரமோஷனுக்கு அளித்த பேட்டியில், அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றியும் நெகட்டிவாக பேசுபவர்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார். என் பெற்றோர்கள் சோசியல் மீடியாவில் இருக்கிறார்கள்.
அப்படி சிலர் போடும் தவறான செய்திகளை பார்த்த அவர்கள், காலில் எழுந்து பார்க்கும் போது எப்படி இருக்கும் என்று நான் யோசிக்கும் போது அது கஷ்டமாக இருக்கும். ராசியில்லா நடிகை என்று என்னை தெரிந்தவர்கள் யாரும் சொல்லமாட்டார்கள். முகத்திற்கு முன் மோசமான வார்த்தைகளை நேரில் வந்து சொல்லமாட்டார்கள். விமர்சிப்பது எல்லோரையும் மாற்றும் கலாய்ப்பதில் பிரச்சனை இல்லை.
ஆனால், ஒருவர் சரியும் போது இன்னும் இழுத்துவிட்டு சிரிப்பவர்களால் (Bullying) அது எப்படி முடிகிறது என்று தெரியவில்லை. 4 தோல்வி படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வது, 4 பெரிய படத்தில் நான் நடித்தது Unlucky என்றால் எனக்கு அது பெருமை என்று தெரிவித்துள்ளார். மேலும் நான் பத்து தல படத்தில் நடித்திருந்த போது கொடுத்த ஒவ்வொரு பேட்டியிலும், சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கா? என்று கேட்கிறார்கள்.
அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். இதற்கு முன் இதை என்னிடம் யாரும் கேட்டதில்லை. நான் என்ன சொல்வதை நீங்கள் விரும்புகிறீர்கள். நான் ஒரு படத்தில் நடிக்கும் போது இந்த கேள்வி ஏன் வருகிறது. இதை ஒரு ஹீரோவிடம் நீங்கள் கேட்பீர்களா?. உங்கள் படத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கா? என்று கேட்பீர்களா. யாரும் இதை செய்தேன், வேறுவழியை பயன்படுத்தினேன் என்று சொல்லமாட்டார்கள்.
இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவை நேஷனல் க்ரஷ் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இத்தனைக்கும் இதுவரை 20க்கும் குறைவான படங்களையே நடித்திருந்தாலும், இன்று இந்தியளவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அவரின் இந்த அசுர வளர்ச்சி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பேன் இந்தியா நடிகையாக இன்று அறிமுகம் ஆகி நேஷனல் கிரஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி படங்களில் நடித்து ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற ஹிட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
கன்னட சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்தவர் ராஷ்மிகா மந்தனா. நடிகரான ரிஷப் ஷெட்டியைக் காதலித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் பிரேக் அப் செய்துகொண்டார். பின்னர் கன்னட சினிமாவில் அவர் சில பிரச்சனைகளை சந்தித்த நிலையில் அவருக்கு தடை விதிக்கும் வகையில் பேச்சுகள் எழுந்தன.
அந்த படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே இதுவரை மறுத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து வரும் அந்த கிசுகிசுக்கள் ஓய்ந்தபாடில்லை. கன்னட சினிமாவில் இருந்து வந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் அவருக்கு நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லை. இந்நிலையில் அவர் நடிப்புக்கு இருக்கும் ரசிகர்களை விட இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்குதான் அதிக ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். இதையடுத்து சோலோ ஹீரோயினாக ராஷ்மிகா,
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மற்ற நடிகைகளைப் போலவே சோஷியல் மீடியாவில் தொடர்ந்து குஜாலான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது வித்தியாசமான கருப்பு நிற உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ‘வாவ்’ போட வைத்துள்ளன.
பிரேமம் படத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே அந்த படத்துக்குப் பிறகு முன்னணி நடிகைகளாகியுள்ளன. இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில், தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது.
மலையாள படமாக இருந்தாலும் சென்னையில் ஒரு வருடம் ஓடியது பிரேமம் திரைப்படம். அனுபமாவை தமிழில் நடிகர் தனுஷ் தன்னுடைய கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே, உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார். ஆனாலும் தெலுங்கைப் போல தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய க்யூட் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இப்போது சுருட்டை முடி பறக்க சைட் போஸில் போதையேற்றும் லுக்கில் போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.
இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தேவரா. இப்படத்தில் ஹீரோயினாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக ககூறப்படுகிறது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘பத்த வைக்கும்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. பாடல் மணிகே மகே இதே என்ற இலங்கை ஆல்பம் போன்று இருக்கிறது என்று கலாய்த்து வந்தனர்.
ஆனால் ஒருசில அப்படத்தில் கிளாமராக ஆடிய நடிகை ஜான்வி கபூரின் அசைவை மட்டும் பார்த்து ரசித்து வந்தனர். தற்போது அப்பாடல் மேக்கில் எடுத்த வீடியோவை ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளார்.
பாடகியாக தனது பயணத்தை துவங்கிய ஆண்ட்ரியா, தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இப்போது இவர் மாஸ்க், பிசாசு 2, நோ என்ட்ரி, கா தீ பாரஸ்ட் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சினிமா பத்திரிக்கையாளர் சுபைர், ஆண்ட்ரியா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ஆரம்பத்தில் ஆண்ட்ரியாவுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை.
விருப்பம் இல்லாமல் தான் நடித்தார். அதன் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தது. ஆண்ட்ரியா broken என்ற புத்தகத்தை எழுதி இருந்தார்.அதில் அரசியல் பிரமுகரின் மகனால் கர்ப்பம் ஆனேன் என்றும்,
அவர் காதலித்து ஏமாற்றிவிட்டார் என்றும் தெரிவித்து இருந்தார். மேலும் ஆண்ட்ரியா, அனிருத் உடன் ரிலேஷன்ஷிப்பில் அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சுசி லீக்கில் வந்தது என ஆண்ட்ரியா கூறியுள்ளார்.