மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த ராஷி கன்னா, 2018 -ம் ஆண்டு வெளியான இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். அண்மையில் ராஷி கன்னா சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4-ம் பாகத்தில் நடித்திருந்தார்.
இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ராஷி கண்ணா,
தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தேவரா. இப்படத்தில் ஹீரோயினாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தற்போது இந்த படத்தின் போஸ் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக ககூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘பத்த வைக்கும்’ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இதில் ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் உடன் நெருக்கமாக நடனமாடி இருக்கிறார்.
சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார்.
கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார். வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை.
அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார். ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன.
தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன.
இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க கவனம் செலுத்தி கமிட்டாகி வருகிறார்.
சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கவர்வதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரேயா சரண் சமீபத்தில் கவர்ச்சி போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மகளுடன் கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த பர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா போன்ற வோமேன் சென்ட்ரிக் படங்கள் தோல்வியை சந்தித்து. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராஜேஷிடம், எந்த ஹீரோவுடன் டின்னர் செல்ல ஆசை? என்று கேள்வி கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அவர், எனக்கு விஜய்யுடன் டின்னர் செல்ல ஆசை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பதில் அளித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா. அங்கு ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வந்தார்.அதன் பின்னர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் மூலம் பட வாய்ப்புகளும் கிடைத்தது. 2020 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தழுவலான கூகுள் குட்டப்பா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா, தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.
வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.
தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.
வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சம்யுக்தாவுக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றுத் தந்தது அவரின் அடுத்த வெளியீடு தீவண்டி. மலையாள மொழி அரசியல் நையாண்டி திரைப்படம், அறிமுக இயக்குனர் ஃபெலினி டி.பி இயக்கியது மற்றும் வினி விஷ்வ லால் எழுதியது. சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார்.
இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். 2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார்.
பிறகு இவரின் குடும்பம் சென்னைக்கு வந்தனர்.யாஷிகா ஆனந்த் இதுவரை நடித்திருப்பது வெகுசில படங்கள்தான். அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா.
அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.
ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.
சினிமாவில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க அவரின் க்யூட்டான போட்டோஷூட்கள் புகைப்படங்கள்தான் காரணம். அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்,
பாலிவுட் சினிமாவில் இயக்குனர் அட்லீ இயக்கி வெற்றி படமாக அமைந்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் சமந்தா ரோலில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்பொது, 2024 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய 69வது Sobha Filmfare விருது விழா நடைபெற்றுள்ளது.
விருதுக்கு கிளாமர் ஆடையணிந்து கீர்த்தி சுரேஷ் சென்றுள்ளார்.கடந்த ஆண்டு நடிகர் நானி நடிப்பில் வெளியான தசாரா படத்தில் முக்கிய ரோலில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அப்படத்திற்கான சிறந்த நடிகைக்கான FilmFare விருதை கீர்த்தி சுரேஷ் வாங்கியிருக்கிறார்.