நடிகை ஜோதிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
டாப் நாயகியாக இருந்த போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் இரண்டு குழந்தைகளை பெற்றவர் அவர்களை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
அவர்கள் கொஞ்சம் வளர்ந்த நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
பார்க்க கொஞ்சம் குண்டாக காணப்பட்ட நடிகை ஜோதிகா இப்போது சுத்தமாக உடல் எடையை குறைத்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ள இவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும், அவர் இப்போது புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
ஐஸ்வர்யா ராஜேஷ், 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் 2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து “அட்டகத்தி” படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.தற்போது தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
முதல் முதலாக சன் தொலைக்காட்சியில் “அசத்தப்போவது யாரு சீசன் 3” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது கதாநாயகியாக வளம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “காக்காமுட்டை” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
இதன் பிறகு இவர் நடித்த “பண்ணையாரும் பத்மினியும்”, “ரம்மி” , “தர்மதுரை” போன்ற பல படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் படங்களில் பெரும்பாலனவற்றில் இவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஐஸ்வர்யா பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்கவனம் பெற்று வருகின்றன.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம்.இந்த படத்தில் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்து பிரபலமானார் நடிகை எஸ்தர் அனில்.
இந்த திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற ரீமேக் செய்யப்பட்டது.இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தார்.இந்த படத்தில் கமலின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்தர் அனில். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இவர் 2001 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு நல்லவன் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
திரிஷ்யம் மூலம் இவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் ஜோகர் என்ற படத்தில் நடித்திருந்தார்.பின்னர் ஓலு என்ற மலையாள படத்திலும் நடித்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸில் கலந்தகொண்ட பிறகு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆனார்.
பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 15 ஆண்டுகால காதலருடன் திருமணம் செய்த சாக்ஷி, கணவருடன் பேட்டிகளிலும் கலந்து கொண்டு காதல் பற்றி பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் ரிலீஸான Fire படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள சாக்ஷி அப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டதால் 2 மாதங்கள் ஹனிமூன் செல்லாமல் இருந்துள்ளார்.
தன்னுடைய காதல் கணவருடன் மாலத்திவிற்கு ஹனிமூன் சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளித்தபடி எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்தார்.
ஆனால், இப்படம் படுதோல்வியை சந்தித்தது. கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார். 12 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களுடைய திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்திற்கு பின் தனது கணவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், தற்போது அவர் திருமணத்திற்கு பின் கணவருடன் நடத்திய பார்ட்டியில் செம கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..