கோலிவுட்டில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆரம்பத்தில் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்,
அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், சரவணன், ஆயுதங்கள் வச்சி foot flex பண்ணுவாரு. கொஞ்சம் வலிக்கும் அவ்ளோதான். சரவணன் வலிக்காம பண்ணுங்க என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
டிக் டாக் மூலம் பிரபலமான மிர்னாளினி ரவி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் விஷாலின் எனிமி, சசி குமாரின் எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிர்னாலினி ரவி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், படுக்கையறை காட்சி, ரொமான்ஸ் காட்சி முத்த காட்சியை படம் எடுக்க போவதாக சொன்னாலே பதட்டமாகிவிடும்.
இருப்பினும் அதை நினைந்து பயந்து வருத்தப்பட்டு வந்தால் ஒரு பலனும் இல்லை. அந்த பயத்தில் இருந்து வெளியே வந்து எந்த கேரக்டராக இருந்தாலும், அதை பக்குவமாக செய்து முடிக்க தயாராகி விடுவேன்.
படுக்கையறை, நெருக்கமான காட்சியில் நடிக்க தயக்கம் இருந்தாலும், முன்னணி நடிகையாக மாற வேண்டிய ஆசை இருப்பதால் அந்தக் காட்சிகளுக்கு மனதளவில் தயாராகி விடுவேன் என்று மிர்னாலினி ரவி கூறியுள்ளார்.
நடிகை ஷகிலா பற்றிய அறிமுகம் தேவையில்லை, அந்த அளவுக்கு அவர் தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலம். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், சில யூடியூப் சேனல்களில் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார்.
சமீபத்தில் ஷகிலாவை, அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் தாக்கி கீழே தள்ளிவிட்டார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய ஷகீலா,
சமீபகாலமாக என்னை பற்றி செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னை யாரோ அடித்துவிட்டார்கள் என்றும் ஷகீலாவால் நடக்க முடியவில்லை தகவல் வெளிவந்தது.
என் மேல கை வைக்க முடியுமா? இந்த ஷகிலாவை அடிக்க முடியுமா? .. ஏன் அந்த மாதிரி எல்லாம் எழுதுகிறீர்கள் என தெரியவில்லை என்று ஷகிலா கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரேயா சரண், இளசுகளின் பேவரைட் ஹீரோயின்களில் ஒருவர். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும், பட வாய்ப்புகள் குறைந்ததால் திரைத்துறையில் இருந்து சற்று விலகி இருந்தார்.
அதன் பின் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை உள்ளது.சினிமாவை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகம் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா சரண்,
அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் மூலமே அதிகம் பாப்புலர் ஆனார்.
சமீபத்தில் நடந்த 69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் பட இயக்குனர் கரன் ஜோகர், நடிகர் வருண் தவான், நடிகை ஜானகி கபூர் எனப் பலரும் கலந்து கொண்டனர் அப்போது அந்த விழாவில் பேசிய கரன் ஜோகர்,
இது 69வது பிலிம் பேர் விருது.அதேபோல நடிகர் வருணுக்கு 69 என்பது ரொம்ப பிடித்தமான ஒரு விஷயம் என்று டபுள் மீனிங்கில் பேசியுள்ளார். இதனை கேட்ட ஜான்வி கபூர் குபீர் என சிரித்தார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் வருண், ஏற்கனவே ஒரு பேட்டி ஒன்றில் படுக்கையில் தனக்கு பிடித்த பொசிஷன் 69 என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமாவில் ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோபிதா.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார். சமந்தாவை விவாகரத்து பெற்ற நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் இருந்து வருவதாகவும்,
இருவரும் வெளிநாட்டில் சுற்றிய புகைப்படங்களும் வெளியாக வைரலானது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத சோபிதா வெப் தொடர்களில் படுக்கையறை காட்சி நெருக்கமான காட்சி என்று நடித்து வருகிறார்.
தற்போது சித்ரா, மங்கி மேன் போன்ற படங்களிலும் நடித்து வரும் சோபிதா துளிபாளா இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது, இறுக்கமான ஆடையணிந்து முரட்டுத்தனமான பார்வையில் கிளாமர் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் திவ்யா துரைசாமி, சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். T ஷேப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் இருப்பதால் அவரை தமிழ்நாட்டின் டெஸ்லா அழகி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பேசிய திவ்யா துரைசாமி, நான் எமோஷனலா பிரேக் ஆனேன் என்றால் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட மாட்டேன்.
எதுவும் செய்யாமல் படுத்தே இருப்பேன். அந்த மாதிரியான நிகழ்வை சமீபத்தில் கடந்து வந்தேன். Tesla என்கிற வார்த்தையை எங்க இருந்து கண்டுபிடிச்சாங்கனு தெரியவில்லை. அந்த Tesla விஷயம் வைரல் ஆன சமயத்தில் ஒரு வெப் சீரிஸ் நடித்து வந்தேன். அந்த படத்தின் ஷூட்டிங்கில் சின்ன பசங்க எல்லாரும் வருவார்கள். அவர்கள் என்னை tesla அக்கா என்று தான் அழைப்பார்கள்.
நான் திருப்பி, அது என்ன tesla அக்கா? சொல்லி அந்த சின்ன பசங்களை கலாய்ப்பேன். இப்போது ஷூட்டிங ஸ்பாட்டில் இயக்குனர்கள், DOP எல்லாரும் Tesla னு கூப்பிட ஆரம்பித்துவிட்டனர். Tesla சொல்ற அந்த இடத்தை மட்டும் பாக்காமல் எனக்கு நல்ல மனசு இருக்கிறது. அழகான சிரிப்பு அதையும் பாருங்கள் என்று திவ்யா துரைசாமி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர்.
வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தமிழில் தொடர்ந்து சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் பாட்டு பாடி உள்ளார். அத்துடன் வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
அதன் மூலம் அவருக்கு மார்க்கெட்டும் உயர்ந்தது. இன்றளவும் சரிவை சந்திக்காமல் அப்படியே ஹிட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார் ஆண்ட்ரியா.
இவரின் சிறந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.
ஆம், பிரபல அரசியல் வாரிசு நடிகரின் காதல் வலையில் சிக்கி ஏமாந்துவிட்டார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆண்ட்ரியா சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கமால் இருந்து வந்தார்.
அதன் பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்கில் இறங்கி நடிப்பு, பாடல் என படு பிசியாக இருந்து வருகிறார். இதனிடையே இசையமைப்பாளர் அனிருத்தை ரகசியமாக காதலித்தார். இந்நிலையில் ஆண்ட்ரியா நடிகர் தனுஷுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார்.
ஆம், மனைவியை பிரிந்த அவர் ஆண்ட்ரியாவுடன் மறுமணம் செய்யப்போவதாக செய்தி ஒன்று பரவி வருகிறார்.ஆனால், இது வெறும் வதந்தி என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ரியா இதற்கு முன்னர், அனிருத், கமல் ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவருடன் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.