கண் அசைவால் ஒட்டுமொத்த தென்னிந்திய இளைஞர்களை வளைத்துப்போட்டவர் நடிகை பிரியா வாரியர்.
கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவருக்கு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது,
ஆனால் சில காரணத்தால் அந்த படம் வெளியாக வில்லை. நடிப்பை காட்டிலும் பிரியா வாரியர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு இளசுகள் பயங்கர வரவேற்பு இருக்கிறது.
இந்நிலையில் இவர் கவர்ச்சியான உடையில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.
லட்சணமான முக ஜாடையுன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய நாட்களிலேயே பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் தமிழ் கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஆனால், அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் பிரியங்கா மோகன் அடையாளம் இல்லாமல் இருந்தார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அப்படத்தை தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
தற்போது, இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வேல்மதி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அடுத்தடுத்து யாருடன் நடிக்க ஆசை என்ற கேள்விக்கு நீண்ட பதிலை அளித்திருக்கிறார். அதில் தமிழில் இன்னும் கார்த்திக் சார், தளபதி விஜய், ரஜினி சார் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் நடிக்க ரெடி. பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் போன்ற தெலுங்கு நடிகர்களுடன் நடிக்க வேண்டும். கன்னடாவில், யஷ், ரக்ஷித் ரெட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும். மலையாளத்தில், பகத் பாசில், துல்கர் சல்மான் போன்ற நடிகர்களுடன் நடிக்க ஆசை என்று பிரியங்கா மோகன் தெரிவிக்க இதனை பார்த்த ரசிகர்கள் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் முதல் கனவே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய மலையாள நடிகை ஹனி ரோஸ். சிங்கம்புலி, அஜந்தா, மல்லுக்கட்டு, கந்தர்வம், பட்டாம் பூச்சி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ஹனி ரோஸ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார்.
சமீபத்தில் முதன் முறையாக தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக 60 வயதான நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து பெரியளவில் பேசப்பட்டார்.
சமீபகாலமாக கிளாமர் ஆடையணிந்து பொது இடத்திற்கு சென்று போட்டோஷூட் எடுத்தும் ரசிகர்களை மிரளவிட்டு வருகிறார்.
தற்போது தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி, உச்சக்கட்ட கவர்ச்சி எடுத்த புகைப்படங்களையும் வெளியில் சென்ற வீடியோவையும் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.
சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார். இதற்கு முன்பு மிர்னா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.
பர்த்மார்க் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் மிர்ணா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.
தற்போது ஷோஃபாவில் படுத்தபடி தன் முகத்தில் இருக்கும் முகப்பருவை காட்டி வீடியோவை பகிர்ந்துள்ளார். இதையெல்லாமா காட்டி வீடியோ போடுறது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்ரேயா சரண், கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான “இஷ்டம்” என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
ஹிந்தி, தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வந்த ஸ்ரேயா சரண், எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை அடுத்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக மாறினார்.
தற்போது 41 வயதான ஸ்ரேயா சரண், இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது இவர் கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் மாளவிகா மோகனன்.
பேட்ட படத்தின் அறிமுகமான இவர், விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது மாளவிகா மோகனன் தெலுங்கில் பிரபாஸ் -க்கு ஜோடியாக நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
சோசியல் மீடியா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிட்டு வரும் மாளவிகா மோகனன், தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லியாகி நடித்து பிரபலமானவர் தான் ஜெயலட்சுமி. இவர் வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜெயலட்சுமி, ” மற்ற துறையில் போல சினிமாவில் பெண்களுக்கு பிரச்சனை இருக்கிறது. ஒரு பிரச்சனை நடக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு அந்த பின் இயக்குனர் அல்லது நடிகர்கள் குறித்து பேசுவது சரியாக இருக்காது”.
“உங்களிடம் யாராவது தவறாக நடந்து கொள்கிறார் என்றால் உடனே அது தவறான விஷயம் என்றும் சொல்லுங்கள். அப்போது தான் அவர் அடுத்தவர்களிடம் அந்த தவறை செய்ய மாட்டார்.
ஒரு முறை நான் பார்க் சென்ற போது ஒருவர் என்னை தொட கூடாத இடத்தில தொட்டான். நான் அவனை தொரத்தி சென்று செருப்பால் அடித்தேன்”.
“சமுதாயத்தில் நடிகைகள் மீது ஒரு தவறான எண்ணம் இருக்கிறது. அந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். எனக்கு வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம் என்ற ஒரு மெசேஜ் வந்தது. அதை தொடர்பு கொண்டால். அதில் நடிகைகளின் புகைப்படங்கள் வைத்து பேரம் பேசினார்கள்.
எனக்கும் இரண்டு லட்சம் தருவதாக பேரம் பேசினார்கள். எனக்கே தெரியாமல் பேசி இருக்கிறார்கள்” என்று ஜெயலட்சுமி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.
பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து குடும்பத்தினர் அனைவரின் முன்பு திருமணம் செய்து கொண்ட பிரியங்கா ஒரு சில ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்து அம்மா மற்றும் சகோதரர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில், பிரியங்கா அவரது அம்மாவுடன் பேட்டியில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.
இந்த நிலையில், பிரியங்காவின் அம்மா தம்பி உடன் பணியாற்றவர்கள் நண்பர்கள் ரசிகர்கள் பலர் பிரியங்காவை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து வரும் நிலையில், KPY தீனாவும் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
தீனா தற்போது இயக்குனராக ஒரு படத்தினை இயக்கி நடித்தும் வருகிறார். என்னை நானே வைத்து இயக்கி வருகிறேன். அதில் யாருடைய லைப்யும் நாம கெடுக்க வேண்டாம், நம்மையே நாம கெடுத்துப்போம் என்று கூறி இருக்கிறார்.
தீனா இதை கேட்டு பிரியங்கா அப்படியெல்லாம் கிடையாது என்று கூற இப்போ, நான் உன் கூட சேர்ந்து உன் லைஃபை எடுக்கலையா? அந்த மாதிரி நான் சொல்றேன் என்று தீனா கூறியிருக்கிறார். ஒருவேளை பிரியங்காவின் கணவர் பிரிவிற்கு தீனாவின் நெருக்கம் தான் காரணமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. ஆனால், இருவருமே அக்கா தம்பி போல் தான் பழகி வருகிறார்கள் என்று பல மேடைகளில் அவர்களே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களை பொருத்தமட்டில் படங்களை தாண்டி பாடல்கள் மூலம் ரசிக்கப்பட்ட பிரபலங்களே அதிகப்படியாக உள்ளனர். அப்படித்தான், தாஜ்மஹால் என்ற படம் தோல்வி அடைந்தாலும், அந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரியா சென்.
இவர் தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வளவாக வாய்ப்பில்லாமல் ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி படங்களில் மட்டுமே நடித்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது 42 வயதாகும் ரியா சென் கடற்கரையில் ஹாயாக நீச்சல் உடையில் படுத்து கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்த நிலையில் அதிகப்படியான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
தமிழ் நடிகைகளுக்கு எப்போதுமே பெரிய மார்க்கெட் கிடைக்காது என்பதை உடைத்தவர் என்னவோ சாய் பல்லவி தான். அவர் முதலில் ரீச் கொடுத்ததே அக்கட தேசமான மலையாள திரையுலகில் தான். பிரேமம் படத்தின் மலர் டீச்சரை இன்னமும் ரசிகர்கள் மறக்கவில்லை. அப்படம் ஹிட் அடிக்க அம்மணிக்கு பல மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் குவிந்தது.
அசல் தமிழ் பொண்ணான சாய் பல்லவி தமிழில் நடிப்பதற்கு முன்னரே தெலுங்கிலும் ஃபிடா என்ற ஹிட் படத்தினை கொடுத்துவிட்டே இங்கே எண்ட்ரி கொடுத்தார்.
எந்த மேக்கப்பும் இல்லாமல் சிம்பிள்ளாக இருக்கும் சாய் பல்லவியை யாருக்கு தான் பிடிக்காது. முதலில் தமிழில் தியா படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் மற்ற மொழிகள் போல பெரிய ரீச்சை கொடுக்கவில்லை.
அதை தொடர்ந்து மாரி இரண்டாம் பாகத்தில் தனுஷின் ஜோடியாக நடித்தார். அதில் அம்மணி நடிப்பை விட மை டியர் மச்சான் பாடலுக்கு போட்ட ஆட்டம் ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொண்டார்.
இருந்தும் அதன் பின்னர் கிடைத்த எல்லா வாய்ப்புமே சாய் பல்லவிக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பல மொழிகளில் பிஸி நாயகியாக வலம் வருகிறார்.
தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு பூஜா என்ற தங்கை இருக்கிறார். இவரும் பல நாள் போராடி சித்திரை செவ்வானம் என்ற படத்தில் நடித்து இருந்தார்.
அப்படத்தில் இவரும் சமுத்திரக்கனியும் இணைந்து முக்கிய கதாபாத்திரம் ஏற்று இருப்பார். படம் பெரிய அளவில் ரீச் கொடுக்கவில்லை என்றாலும் பூஜாவின் நடிப்புக்கு பாராட்டுக்களே வந்தது.
இந்நிலையில் சாய் பல்லவியை விட ஐந்து வயது சிறியவரான பூஜா தன்னுடைய வருங்கால கணவர் இவர் தான் என வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் க்ரைம் பார்ட்னர் தற்போது என் பார்ட்னர் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அப்போ சாய் பல்லவிக்கும் திருமணம் நடக்குமா? இல்லை முதலில் பூஜா மட்டுமே திருமணம் செய்ய இருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.