நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகள் தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து ஸ்ரீதேவி காதல் வைரஸ் திரைப்படத்தில் மூலம் ஹீரோயினாகவும் களமிறங்கினர். இதை தொடர்ந்து இவர் தித்திக்குதே, தேவதையைக் கண்டேன், பிரியமான தோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் இருந்து விலகி இருந்த ஸ்ரீதேவி விஜயகுமார் தற்போது சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் ஹீரோயினாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் மொழி மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வரும் மாளவிகா.
தற்போது தி ராஜா சாப், சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் மாளவிகா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துவதை வழக்கமாக வைத்து வருகிறார்.
தற்போது, நியூ கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
முகமூடி படத்தில் தமிழில் கதாநாயகியாக நடித்த பூஜா ஹெக்டே பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து தமிழில் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார்.
அவர் நடித்த ஒருசில படங்கள் தவிர பிளாப் படங்களில் நடித்து விமர்சிக்கப்பட்டார். தற்போது தளபதி விஜய் நடிக்கும் அவரது 69வது படமான ஜன நாயகன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
இந்நிலையில், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் சாஹித் கபூருடன் தேவா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பிரமோஷனுக்காக சென்ற ஆடையில் போட்டோஷூட் எடுத்துள்ளார் பூஜா ஹெக்டே. அந்த ஆடையில் படிக்கெட்டுக்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ’ரொமான்ஸ் செய்தாலே போதும்’ என்ற கேப்ஷனுடன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் அறிமுகமானார். ஆனால், அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.
இவர் தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். சமீபத்தில் மலேசியா, சிங்கபூர் என்று அவுட்டிங் சென்று வந்தார்.
தற்போது சிவாங்கியா இது என்று கூறும் அளவிற்கு, லண்டன் சென்று அங்கு, மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சிவாங்கி.
தமிழ் சினிமாவில் ஆங்காங்கே சில படங்களில் தலைகாட்டியவர் ஐஸ்வர்யா மேனன். அதில் தமிழ் படம் 2 ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை. ஆனாலும் தலைவி ரசிகர்கள் புடைசூழ லைம்லைட்டில் இருக்கக் காரணமே அவரின் இன்ஸ்டா அக்கவுண்ட்தான்.
தனது உடலுக்கு ஏற்ற கவர்ச்சி தூக்கலான ஆடைகளை அணிந்து வரிசையாக அவர் இறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. அதனால் அவர் போட்டோ எப்போது வரும் என ஆயிரக் கணக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
இவர் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகிறார். இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
வாய்ப்பில்லாத காரணத்தால் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளைக் கவர நினைக்கும் இவர் இப்போது ஒரு நேர்காணலில் தன்னுடைய பர்ஸனல் விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் அவரிடம் “கடைசியாக நீங்கள் எப்போது அழுதீர்கள்?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் “நான் நான்கு மாதங்களுக்கு முன்னால் அழுதேன். நான் எல்லோர் முன்னாலும் அழமாட்டேன். தனியாக ரூமுக்கு சென்று அழுதுவிடுவேன். என் அம்மா முன்னால் அழுதால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் நான் எப்போதுமே தனிமையில் இருக்கும்போதுதான் அழுவேன்” எனக் கூறியுள்ளார்.
நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி. இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதுகமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
கீர்த்தி தெலுங்கில் நானி நடித்த ஷ்யாம் சிங்கா ராய், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கிய வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார்.
அதையடுத்து தமிழில் இப்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனத்தைக்ம் குவித்து வருகின்றன. அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
கௌரி ஜி கிஷன் 96 படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த இவர் . அந்த படம் மூலம் பலரது இதையதையும் கவர்ந்தார். 96 படத்தில் கௌரி கிஷன் நடித்த பிளாஷ்பேக் காட்சிகள் பலரையும் கவர்ந்தது அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த கௌரி கிஷன் . தனது இளம் வயதில் பல வருடங்களை சென்னையில் கழித்தார். பின்னர் இப்போது பெங்களூரில் உயர்கல்வி முடித்துள்ளார்.
இதுவரை தமிழ் , தெலுங்கு , மலையாளம் என 7 படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன் இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். கௌரி கிஷன் திரைப்படங்களை தாண்டி வெப் தொடர் மற்றும் இசை வீடியோக்கள் நடிதும் வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கௌரி கிஷன். இந்நிலையில் இப்போது மாடர்ன் ட்ரஸ் அணிந்து மந்தகாசமாக போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…
அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வாணி போஜன்.
தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வரும் வாணி போஜன் தற்போது கவர்ச்சிக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது வாணி போஜன் இதுவரை இல்லாத அளவிற்கு மாடர்ன் டிரஸ் அணிந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு சக நடிகைகள் பலர் வாய்ப்பிளந்து ஃபயர் விட்டு வருகிறார்கள்.